திங்கள், 23 பிப்ரவரி, 2015

பூ வாசம்



கடன் வாங்கி கையொப்பம் இட்டாள்
என் பேனா முழுவதும்
பூக்களின் வாசம
ரொம்ப தேங்க்ஸ்ங்க!
அடித்துப் பிடித்து
ஒவ்வொரு உதவியை நான்
உனக்கு செய்யும்போதும்
அந்த இரு வார்த்தைகளில்
என்னை நீ சட்டென்று
அன்னியபடுத்துகிறாய்...
ரொம்ப தேங்க்ஸ்ங்க!

வியாழன், 19 பிப்ரவரி, 2015

என் கண்ணீர் துளிகள்..



"மழை பெய்யும் போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில்
கலந்திருக்கும்"

"
உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை,
தயவுசெய்து கனவில்
வருவதை
நிறுத்திவிடாதே! "

மரணவலியினும் கொடுமை



மரணம் வரை இருப்பாயா என்றாய்
இதோ நான் மட்டுமே இருக்கிறேன்
இன்னும் உன்னை தேடிக்கொண்டு

உன் மொழிகளில் எதை மறக்க
என எனக்கு தெரியவில்லை
மறக்கவும் முடியவில்லை

நீ பேசிய வார்த்தைகளெல்லாம்
வேதவாக்காய் நான் என் இதயத்தில்
வைத்து இன்னும் பூஜிக்க உனக்கு
மட்டும் என்னிடம் எப்படி சலிப்பு வந்தது
எந்த உறவும் உன்னை கடந்து
என் நினைவை தொட அனுமதிக்காமல் நான
அதிகபட்ச எதிர்பார்ப்பு
உன் அன்பான வார்த்தைகள் மட்டுமே

என்னை அழவைக்காதது நீ மட்டுமே
என பெருமிதமாய் கழிந்த நாட்கள் போய்
அழதா நாட்கள் இல்லை என்ற நிலை.

சின்ன சின்ன சந்தோஷங்களில்
என் கண்ணாடி கனவு மாளிகை
பல நேரம் நீ சொல்வது பொய்
என அறியும் போது உடைந்து
சிதிலமாகும் இதயம் இருப்பினும்
இணைத்திடுவேன் அதனுள்ளே நீ
வாழ்வதால்

எவர் வந்தார் குறுக்கே?
எது தடுக்கிறது உன்னை?
ஏன் மாறினாய் இப்படி?

அன்று நீயாக தந்த அன்பும் அக்கறையும்
இன்று நானாய் கேட்டு வாங்குவது
மரணவலியினும் கொடுமை