புதன், 18 பிப்ரவரி, 2015

உடையழகி....!



அந்த துணிக்கடைக்குள்
நீ நுழைந்ததும் அலங்கார பொம்மை

ஓடி ஒளிந்து கொண்டது
உன் அழகின் அளவு தாங்கமுடியாமல் .....!

தேவதைகளுக்கான உடை
இன்னும் இங்கே இறக்குமதி
செய்யப்படவில்லையென
ஊழியர்கள் எல்லோரும்
உன்னையே உற்றுப்பார்க்கிறார்கள் ...!

ஒவ்வொரு சுடிதாரையும்
நீ உன் உடம்பில் ஒட்ட வைத்து
ஒரு ஒப்பனையோடு
கண்ணாடியில் அழகு பார்க்கிறாய்...!


ஆனால் ...
ஒவ்வொரு சுடிதாரும்
உன்னை அணிந்து பார்த்து
கண்ணாடியை வெறுப்பேற்றுகின்றன ....!

இதுவரை உன்னிடம் இல்லாத
கலரென்று எதுவுமில்லை...
நீ வெள்ளை சுடிதாரை அணிந்தாலும்
உன் உடல் தொட்ட வெட்கத்தால்
அது வண்ணமாகிவிடும் ....!

விலைப்பட்டியலை விலக்கிப்பார்க்கிறாய்..
நான் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறேன் ...
""
பட்டின் விரல் பட்டால்
பருத்தியின் விலையென்ன கூடியாவிடும்.?""

ஒருவழியாய்
தேடிமுடித்து ....
தேர்ந்தெடுத்து ....
பணம்கட்டி ....
விடைபெற்று...
வெளியே வந்து திரும்ப்பிப் பார்த்தால்.....

உன் பிரிவை நினைத்து
அந்த துணிக்கடை
உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது .....


என் எல்லா மாடிகளும்
சுடிதார் பிரிவுகளாய்
இருந்திருக்க கூடாதா என்று...!     

Previous Post
First

0 Comments: