புதன், 18 பிப்ரவரி, 2015

உன்னுடனான பயணத்தில் தேய்ந்து போகிறது இதயக்கூடு!



உன்னுடனான பேருந்து பயணம்......!
அந்த சில மணி நேர பயணத்தில்
ஓராயிரம் கவிதைகளை
சிந்திவிட்டு போவாய்....!
அதிலும் அந்த ஜன்னலோர
காற்று மற்றிவிட்டு போகும்
சில மாற்றங்களை நம்முள்...!

அந்த ஜன்னலோர இருக்கையை தான்
நீயும் விரும்பினாய்...!

நீ அமர்ந்த இருக்கை
எனக்கு நன்றியை உதிர்த்தது
மற்றவை மண்டியிட்டு அழுதது....!

ஜன்னலோர காற்றில்
மிதந்து வந்த கூந்தல்
என் கன்னத்தில் தரை இறங்கியது....!
முதல் முறை விமான பயணத்தில்
தரை இறங்கும்போது ஒரு வித
சிலிர்ப்பு வரும் அதை உணர்தேன் அன்று....!

அந்த கலைந்த கூந்தலை
நீ கோதிக்கொள்ளும் அழகில்....!
சில அழகியல் கட்டுரைகளை
எழுதலாம்.....!

இடது கை கட்டைவிரல் உன் முன் முடியை
காது வழி பின் தள்ளும்போது....!
உயிரை இழுக்கிறது என்னுள்
சில ஹார்மோன்கள்.....!

உன் உள்ளங்கை உஷ்ணத்தில்
என் உள்ளங்கை ரேகை அழிய
இழுத்துவைத்து கொள்வாய்....!
சில சில்மிஷ ஜீன்கள்
கிறுக்கு பிடிக்கும் என்னுள்...!

என் கைபிடித்து நீ என் தோள் சாய்ந்து
பயணிக்கும் நொடியில்.....!
நிலச்சரிவுகள் என் இதயத்தின் ஆழத்தில்....!

நீ சாய்ந்து படுக்கையில்
தேய்ந்து போகிறது இதயக்கூடு....!

அஹிம்சையாய் சில இம்சைகளை
கொடுத்துவிட்டு சென்றாய்....!

காத்துகொண்டு இருக்கிறேன்
நானும்..!
பேருந்தும்...!
மீண்டும் உன்னுடனான ஒரு பயணத்திற்கு....!
Previous Post
Next Post

0 Comments: