வியாழன், 11 பிப்ரவரி, 2016

நண்பன் கவிதைகள்

நண்பன் கவிதைகள்

1.
நண்பா
நாளை- நல்
காலையாய் வெளுக்குமென
நம்பிக்கை தந்த நண்பா
நீ
சொன்னது போலவே
விண்ணது வெளுத்தது
இண்டுயிடுக்கை யெல்லாம்
வெளிச்சம் நிறைத்தது!
என்
சொல்லும் செயலும்
எண்ணமும் ஏக்கமும்
கண்டும் கணித்தும்...
பின்னது நாட்களில்
இன்னது நடக்குமென
சொன்னது நீயே!
உன்னை
நண்பனாய் நம்பினேன்
அம்பென எம்பினேன்
நானினைத்தத் திசைநோக்கி
நாணிழுத்து
என்னை
எய்தவன் நீதான்...
அரும்பவும் பூக்கவும்
திரும்பவும் தளிர்க்கவும்
கருணையாய் மழையெனப்
பெய்தவன் நீதான்!
இலக்கினை ஏகிட
இடர்மேல் இடரென
வழியெலாம் இருள்...
விளக்கென ஏந்திட
வாய்த்த உன் நட்பு
வல்லவன் அருள்!
பயணித்தப் பொழுதுகளில்
பலமிக்க விழுதுகளாய்
நிழலுக்குப் பதிலாக
நீயன்றோ நின்றாய்...
ஏற்றிய ஏணியை
எட்டி உதைத்தல்
தீதன்றோ என்றாய்!
பசிக்குப் புசிப்பது
விலங்கியல் என்றால்...
பசிப்பவன் புசிப்பதை
வசிப்பவன் ரசிப்பதே
மனிதயியல் என்றாய்!
வாழ்க்கையைக் கற்கவும்
கற்றபடி நிற்கவும்
வேட்கையை விதைத்தவன்- நீ
வார்த்தைகள் கோத்து
தோற்றதைத் தேற்றி
விழிநீர் துடைத்தவன்
உன்
கைவிரல் கோத்து
கால்களால் கடந்த
தூரங்கள் அதிகம்...
படைகள் புடைசூழ
பாரினை எதிர்கொள்ள
புஜபலம் உன் நட்பு
எத்துணை தூரம்
எந்தெந்தத் தேசம்
எப்படிப் பிரித்தாலும்- எனக்குப்
புத்துணர்வோடு பூமியை வெல்ல
சத்துணவன்றோ
உன் நட்பு!
ஜாகிருக்காக சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்........



2.
சாந்தி நட்புக்குண்டு...
ஜாதி நட்பிற்கில்லை...
ஆத்திரம் நட்புக்குண்டு...
சாஸ்திரம் நட்பிற்கில்லை...
இலக்கணம் நட்புக்குண்டு...
தலைகணம் நட்பிற்கில்லை...
ஜனனம் நட்புக்குண்டு...
மரணம் நட்பிற்கில்லை...
உண்மை நட்பே ஜெயிக்கட்டும்...


3.
ஒரு நாள் எனக்கு
மரணம் வரும்...
அன்று நீ என்னை
பார்த்து கண்ணீர்
விடாதே...
எழுந்தாலும் எழுந்து
விடுவேன்
"உன் கண்ணீரை"
துடைக்க....
உண்மையான நண்பனின்
கண்ணீரை துடைக்க...


4.
காதல் என்பது
கை சேர்த்து
போகும் வரை..!
நட்பு என்பது
உயிர் பிரிந்து
போகும் வரை..!
That Is FRIENDSHIP..!


5.
துடுப்பு இல்லாத
படகு கூட இருக்கலாம்-ஆனால்...
நட்பு இல்லாத மனிதன்
இருக்கவே முடியாது...
உண்மை நட்பே ஜெயிக்கட்டும்...!!


6.
காதல் ஒரு கனவு தான்
சில பேருக்கு பலிக்கும்...
பல பேருக்கு வலிக்கும்...
ஆனால் நட்பு மட்டும் தான்
எப்போதும் ஜொலிக்கும்...


7.
உனக்குள்
என் நட்பும்
எனக்குள்
உன் நட்பும்
இருக்கும் வரை
நமக்குள்
"பிரிவு"
என்பதே
இல்லை...
நண்பேண்டா...


8.
உன்னால்
முடியும் போது
உன்னை சுற்றி வரும்
பல நண்பர்களை விட
உன்னால்
முடியாத போதும்
உன்னையே பற்றி பிடிக்கும்
ஒரு நண்பனே
நன்பேண்டா உனக்கு..!


9.
ஆண்-பெண் நட்பு
தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.
பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.
அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.
காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.
புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.
தோல்விகண்டு
துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு
அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்
பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.
முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
புரிந்து இருக்கமாட்டார்கள்
என்னை,
என் தோழியை/நண்பனை
விட வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்...!
வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண்-பெண் நட்பு.....


10.
தந்தை அடித்ததை
தாயிடம் சொல்லி அழும்
பிள்ளை போல..
என் மார்பில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!


11.
ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது காதல்,ஆனால் ஒருவர் இன்னொருவரின் இதயமாக வாழ்வது நட்பு...


12.
நீயும் நானும் கைகோர்த்து நடந்தால் அதை காதல் என்று சொல்லும் இந்த சமுதாயத்திற்கு என்ன தெரியும் நீயும் நானும் நட்பு என்னும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று....


13.
உன்னை நிழலாய் தொடர நினைக்கும் என் நட்பு உன் இதயம் தன்னில் மறைந்து கொண்ட சோகங்களை தோண்டி எடுத்து என்னுள் புதைத்து கொள்ள விரும்புகிறது நான் பார்க்க நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!


14.
எனக்குள் வாழ்ந்து கொண்டு எனக்காய் துடிக்கும் உனது நட்பின் ஆழம் கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என் அருகில் நீ இல்லை என..


15.
கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை
இல்லாமல் கவிதை வரலாம்,
ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது,


16.
இதயத்தில் இடம் கொடுப்பது காதல்
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு,

17.
என் காதலை உணராத
என் காதலி.....
என் உணர்வை உணராத
என் உறவினர்......
அவர்களுக்கு மத்தியில்
என்னுடன் உரிமையாக
பழகும் உன் நட்பு
என்றுமே சிறந்தது தான்...


18.
பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.
எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...


19.
நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.
நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.


20.
ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..
பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?


21.
இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..


22.
வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..


23.
கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....
நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...


24.
சினேகம் ஒன்று போதும்
இருவர் வாழ்வை ஒன்றாக்க!
துரோகம் ஒன்று போதும்
ஒருவர் வாழ்வை இரண்டாக்க!
நட்புக்குள் சினேகம் இருக்கலாம் ஆனால் ஒருபோதும் துரோகம் இருக்கவே கூடாது

Previous Post
Next Post

0 Comments: