செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

அம்மா கவிதைகள்


சின்ன சின்ன சிரிப்பில்
சிறகை விரித்து ஆடும்
மயில் போல்
என் மனம்
உன் சிரிப்பில் மயங்குதடி
கண்ணம்மா -ஸ்ரிவிஷா

கருவில் நான்
அடித்தும் அதை இன்பமாக
ஏற்று என்னை தழுவியவள்
அவள் ஒருத்தியே..!
அவள் அன்பை முழுவதும்
எனக்கு அளிக்கும் என் அன்னையே-ஸ்ரிவிஷா

அவள் பெற்ற அன்பு கடனை
நான் அடைக்க
அவளை பெற நினைக்கிறேன்
என் குழந்தையாக
-ஸ்ரிவிஷா

இன்பம் துன்பம் எது வந்த போதிலும்
தன் அருகில் வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை!

பெண்மையில் அன்பை மட்டும் போதிக்கும் அவதாரம்-தாய் 
-இரா.கருணாகரன்

சின்னஞ்சிறு
மகள்களின்
சேலைக்கனவை
பூர்த்தி செய்து விடுகிறது..
‪தாயின்‬ துப்பட்டாக்கள்...........

முக்கால வேதம் இனி எக்காலமும்
    சர்வ தேச பரிநாணமம் என்றும்
எம் உயிர் புதைந்த கருவறையில்
    காலம் என் கண்ணினுள்
எம் துடிப்பு... என் கற்பனை கனவினுள்
    யாம் வித்திடும் வினை
ஈடு இணையில்லா இதம்
எம் மழலையரின் முதல் மழை
    எம் உயிரிலும் உணர்விலும்
எந்நாளும் துடிக்கும் இதயம்
    என்னுள்…
                 உனக்காக மட்டுமே -அம்மா

வலி தந்தவர்களையும் உயிராய் நினைப்பது  தாய்மையும், காதலும் தான்.......

இரவில் அழுத குழந்தையின்
ஒலி கேட்டு
சோம்பேறி கூட
சுறுசுறுப்பாக
மாறி விடுவாள் தாய்மைக்கு பின் ..

அம்மா ...!
உனக்கு வலி கொடுத்து
பிறந்த காரணத்தால் தானோ
என்னோவோ
எனக்கு வலி
ஏற்படும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன்
அம்மா என்று.....

உயிர் போகும் வலிகளை கொடுத்தும்
அதை தாங்கி ஏற்றுக் கொண்டு என்னை
இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்...
நீ தான் அம்மா...
தன் மகன்/மகள் தன்னை போல் கஷ்ட படக்கூடாது என்று ‪#‎கூலி‬
வேலைக்கு சென்று நம்மை ‪#‎படிக்கவைக்கும்‬ சுயநலம் இல்லாத அன்பு
‪‎தாய்மை‬

சிலமாதங்களே என்றாலும் மற்றொரு உயிரைத் தன்னுடைய ஒரு பகுதியாகவே தன் உயிராக தனக்குள்ளேயே இணைத்துக்கொள்ளும் உன்னதம்.

மனதளவிலும்
உடலளவிலும்
‪#‎பெண்‬ என்பவள்
வலிமைக்கொண்டவள்
என்பதற்கு
ஒற்றை சான்று
‪தாய்மை‬

பெண்மைக்கு எத்தனையோ
சிறப்புகள் இருந்தாலும் அதில் அனைத்திலும்
உச்சமாய் இருப்பது ‪‎தாய்மை‬ மட்டும்தான்...

வலி கொடுத்து பிறந்தாலும்
பிள்ளைக்கொரு வலியென்றால்
துடிக்கிறது..
‎தாய்மை‬

ஆணிற்க்கு‬ கிடைக்காத
பெண்ணிற்கு கிடைத்திட்ட
இயற்கையின் வரம்
தாய்மை‬...!!!.

மனமிருந்தால் மானின் முதுகிலும்
"மங்க்கி" ஏறலாம்...
அரவணைக்கும் அனைத்திலும்
"‪#‎தாய்மை‬" தான் மிகுந்திருக்கும்...!!

"மகள்களை"
பெற்ற அப்பாக்களுக்குத்தான்,
தெரியும், "தாயின்"
"அன்பு"
"" என்னவென்று!!!

தாய்மை‬ என்கிற ஓர் உயிரை படைத்தளிக்கும் பெண்ணின்,
ஒற்றை ஆற்றலுக்கு முன்,
உலகின் சகல திறமைகளும்,
நிற்க முடியாது!!

ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும் உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்.

கருவறையில் காத்து
கவித்துவமாய்
என்னை பெற்ற
என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவை
சமர்ப்பிக்கிறேன்..

உன் சமையலை ஜ??
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்
தயவுசெய்து
நீ அனுப்புகின்ற
கடிதத்தில் ஒரே ஒரு
சோற்றுபருக்கையாவது ஒட்டு.

Previous Post
Next Post

0 Comments: