செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இரவு வணக்கம் கவிதைகள்


இரவின்  மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்..


இரவின்  மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்


வீழும்  ☆நட்சத்திரங்களாய் இன்றி
வாழும் ○ நிலவினை போல் கொண்ட நட்பே..
நல் இரவு வணக்கம்


இரவென்னும் கவிதையில்
நிலவும் ☆ நட்சத்திரங்களும்
தேன் சுவை சந்தங்கள்
கவிதையின் பரிசாக இமைகளை தழுவும்
இனிய உறக்கம்
இதமான கனவுகளுடன்
இரவு வணக்கம்


விடியும் என்றிருப்போருக்கு...
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு...
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!
நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!
இனிய இரவு வணக்கம்..!!


நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால், உனக்காக என் இதயம் துடிப்பதையும் நிறுத்திவைப்பேன் நீ விழிக்கும்வரை...!
இனிய இரவு வணக்கம்...!!!


நிலவு விண்ணை தொடும் நேரத்தில்...!
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் இனிய வேளையில்...!
தூக்கம் உங்கள் கண்களை தழுவும் முன்...!
என் இனிய இரவு வணக்கம்...!


உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும்,
என் இதயத்தில் உன் நினைவுகள்
மலர்ந்து கொண்டே இருக்கும்...!
இனிய இரவு வணக்கம்!!!


பகலுக்கு பாய் சொல்லி...
இரவுக்கு ஹாய் சொல்லி...
தூக்கத்திற்கு வெல்கம் சொல்லி..
கனவு என்னும் மலர் பறிக்க
போகும் உங்களுக்கு இரவு வணக்கம்...!


என்றோ ஒரு நாள் நிரந்தரமாக உறங்குவதற்காக நாம் அன்றாடம் எடுக்கும் பயிற்சி தான் தூக்கம், அதன் முதலும் முடிவும் நம்மில் யார்க்கும் தெரியாது...
இனிய இரவு வணக்கம்..!!


இமைமூடி நீ உறங்கு!
உன் விழி வாசலில் நான் காவல் இருப்பேன்.
இந்த இரவு இனிய இரவாகட்டும்..!
இனிய கனவுகளோடு...
இரவு வணக்கம்...!


தொட்டு பறிக்கலாம் மலரை,
தொடாமல் ரசிக்கலாம் நிலவை,
தொட்டும் தொடாமலும் ரசிப்போம்
இனிய கனவை...!
இனிய இரவு வணக்கம்...


அமைதியான இரவு..!
அம்சமான நிலவு..!
அர்ப்பரிக்கும் நட்சத்திரங்கள்..!
அசரவைக்கும் பனிக்காற்றில்,
அசந்து தூங்கும் என்
நண்பனுக்கு..!
இனிய இரவு வணக்கம்..!!


நிலவே நீ பாடு தாலாட்டு
இங்கே ஏராளமானோர்
வீதியில்தான் உறங்குகின்றனர்!!!
இனிய இரவு வணக்கம்......


நிலாப் பெண்ணே! நீ குளிரை
ஆடையாகக் கொண்டாயோ!
உன் பார்வையில் தேகமெங்கும் சில்லிடுகிறதே!
என் கனவும் உன்னோடு உறைகிறதே!!!
இனிய இரவு வணக்கம்!!!


சில்லென்ற சாரல் காற்றில்
சிலிர்க்குதே மனசு!
மழையின் வருகையை
முன்னறிவிப்பு செய்கின்றன
கார்முகில் கூட்டங்கள்..!
ஜன்னலைத் திறக்கும் போதிலே
முகத்தைத் தழுவி இனிமையளிக்கிறது
இரவின் குளிர்த்தென்றல்...!
மழைத்துளிச் சிந்தும் சத்தம்
எத்தனையோ இசைக்கருவிகளை
எளிதில் வென்று செவி நிரப்புகிறது!!!
இனிய இரவு வணக்கம்..!!


இருள் திரையாலும் மறைக்க இயலாத ஒளிர்மதி இவள்..!
இருளின் அழகை இமைகளில் காட்சியாக்குகிறது..!
அழகிய இரவை அமைதியுடன் சேர்த்து ரசித்திடுங்கள்!!!
இனிய இரவு வணக்கம்...!


நிலவின் ஒளியில் நீ உறங்க...!
விண்மீன் உன்னை கண்டு கண்சிமிட்ட...!
தென்றல் உனக்கு தாலட்டுபாட...!
என் நண்பனே நீ கண்ணுறங்கு!!!
இனிய இரவு வணக்கம்...!


அந்தி வானம் சிவக்கையில்...
இவள் ஒளிர்கிறாள்!
அடிவானில் முத்தமிட்டு,
நிலவை வரவேற்க்கும் கதிரவன்!
இரவெனும் கவிதையின்
நாயகி இவள்!
நட்சத்திர பிருந்தாவனத்தில்,
எழில்மிகு அரசி அவள்..!
இனிய இரவு வணக்கம்
குளிர் தென்றல் காற்றில்
நிலவு இளைப்பாரும்...
நிலவின் அழகில்
கவிதைகள் வழிந்தோடும்...
அன்பான இதயங்களின் வருகையால்,
கனவுகளால் நிறையும் விழிகள்...
அதிகாலை வரை
இரவை அழகாக்கும் நட்சத்திர விரிப்பு...
இனிய இரவு வணக்கம்..


பனி துளிகள்
மறைந்து கொண்டு இருக்க...
உன் நினைவுகள் என்னுள்
மலர்ந்து கொண்டு இருக்க...
என்னை நேசிக்கும்
அன்பான உள்ளத்திற்கு
இரவு வணக்கம்...!


இனிதாய் தாலாட்ட தென்றல் தவழ்ந்துவர
இதமான ஒளிதந்து நிலவு குளிரூட்ட
இன்பமான இரவு உனக்காக விழித்திருக்க
இனிய கனவுகளோடு நட்பே நீ தூங்கு!...
இனிய இரவு வணக்கம்! 


விழிகள் உறங்க அழைத்தாலும்
மனங்கள் உறங்க மறுக்கிறதே
இமைகள் மூடிக்கிடந்தாலும்
இதயம் மூடமறுக்கிறதே!
நாளைய வேலைகள் கிடக்கிறதே!
மீண்டும் நாளை சந்திப்போம்!
அதுவரை உடல்கள்
சாயட்டும் படுக்கையில்..
நேசித்த நினைவுகள்
மனதில் ஓடட்டும் விடியும் வரையில்..
Previous Post
Next Post

0 Comments: