செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பொது கவிதைகள்

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பெண்ணே நீ விழித்தெழு
இருளைக் கிழித்தெழு
அறியாமையைத் தகர்த்தெழு
அறிவியலை இழுத்தெழு
கண்ணீர் அருவிகள்
தொலைத்தெழு.......

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அடிமைத் தனத்தை உடைத்தெழு
அன்பிற்கு அடி பணிந்திடு.. வம்பிற்குத் தலை நிமிர்ந்தெழு.......

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தலைக் கனத்தை கைவிட்டு
நம்பிக்கையை கையில் எடுத்து
உயர்ந்த இடத்தில் நிலைத்து நில்.....

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அதட்டல் மிரட்டல் உருட்டல் எல்லாம்
புரட்டிப் போட்டு படிப் படியாக படிப்பில்
உயர்ந்து நில் .......
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஏற்ற தாழ்வுகளையும் முரண்பாடுகளையும்
மடக்கி கசக்கி சுறுட்டிப் போட்டு மகளிராலும்
முடியும் என்று நிரூபித்து விடு நல்ல
செயலில்...............
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

நன்மைக்குத் தன்னடக்கம், நாவடக்கம் இவற்றைத்
துணையாக எடு ....
தீமைக்குச் சுட்டெரிக்கும் விழி கொண்டு
வெகுண்டு எழு ...........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

மனையாள மட்டுமே மனையாள்
என்ற தவறான கறையை கரம்
பிடித்தவன் நெஞ்சில் இருந்து
துடைத்து தூக்கிப் போடு........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அன்பாலும் ஆதரவாலும் எடுத்துக் கூறி
வளைத்துப் பிடி உன் பிடியில் கணவனை
மடி கொடுக்க மட்டும் துணைவி இல்லை
பிடி கொடுக்கவும் என்று புரியவை.........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

புன்னகையில் பெண் ஒரு மலர்
தென்றலாகும் போது ஒரு மங்கை
கொன்றலாக தடவும் போது அவள்
ஒரு நல்ல துணைவி பொறுமை
இழந்தால் புயலாக மாறும் கண்ணகி என
உணர வை ஆண் ஆதிக்கம் கொண்ட
சிலருக்கு..............
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஆணும் பெண்ணும் ஓர் உயிரே
பிறப்பும் இறப்பும் ஒன்றே என்று
உணரவை ஆனால் ஆணவத்தில்
ஆட்டம் போடாதே பெண்ணே
அதைஉன் உள்ளத்தில் இருந்து
தூக்கிப் போடு கண்ணே...........
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பாரதி கண்ட கனவு கலையாமல்
சிலையாகாமல் உயிர்த்தெழ வேண்டுமாயின்
நீ பாரதிப் பெண்ணாக விழித்தெழ
வேண்டும்.....
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

உலகில்......
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது- இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஆசையும் விருப்பமும்
அளவோடு இருந்தால்
அது அழகு..!
அளவுக்கு மீறினால்
அது அழிவு..!!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சாதிகள் இல்லையடி பாப்பா
என்ற பாரதிக்கு தெரியவில்லை
இந்த மக்கள் சாதிகளே
தம் உயிராகக் கொண்டு
உயிரை விடுகிறார்கள் என்று..!
-ஸ்ரிவிஷா

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

இறந்த காந்தி மீண்டும்
பிறந்தால் கிடைத்த
சுதந்திரத்தை திருப்பி
கொடுத்து விடுவார்...!
ஊழலால் அடிமையாகிய
மக்களுக்கு இனி
சுதந்திரம் எதற்கு என்று..!!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பிறக்கும் குழந்தைக்கும்
கற்று தருகின்றனர்
இக்கால மக்கள் அவர்கள்
என்ன சாதி, மதமென்று..!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தாய்க்காவும் தந்தைக்காவும்
சண்டை போடலாம்
ஆனால் மததிற்காகவும், சாதிக்காவும்
சண்டைப் போட்டால்
இறுதியில் சண்டை போட
நீயும் இருக்கமாட்டாய்..!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

மனிதனை படைத்த கடவுள்
ஒருமுறை பூமி வந்தால்
அவனும் ஏந்துவான் கையில்
பிச்சை பாத்திரத்தை,
அம்மா, தாயே என்றல்ல..!
சாதியே, மதமே, என்று..!!
-ஸ்ரிவிஷா
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தன்னம்பிக்கை கவிதை:

தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!

தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!

எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!

ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!

அனுதாபப் பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!

அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்....
தன்னம்பிக்கை!

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஒரு பெண் எப்போதெல்லாம்
அழகாகிறாள்?
.
.
1.அதிகாலை பனியில்
நனைந்த படியே கோலம்
போடும் போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும்
இங்கும் வளம் வரும்போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
3.பேச்சில் ஆங்கிலம்
கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும்
விதத்தில் தெளிவாக பேசும்
போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
4.அழகை திமிராக
காட்டாமல், ஆண்களை
மதித்து நடக்கும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
5.யார் மனதையும்
புண்படுத்தாமல் , தன்
மனதில் இருப்பவனின் கை
பிடிக்க எவ்வளவு நாள்?
என்றுக் கேள்வியே
கேட்காமல் காத்திருக்கும்
போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
6.அச்சப் பட வேண்டிய
இடங்களில் மட்டும்
அச்சப்பட்டு கம்பீரமாய்
இருக்க வேண்டிய
இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
7.காதில் இருக்கும் கம்மல்
தன் பேச்சுக்கு தாளம்
போடும் படி, தலையை
ஆட்டி ஆட்டி பேசும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
8.தம்பி தங்கைகளுக்கு
இன்னொரு தாயாய் இருக்கும்
போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
9.தந்தையின் குடும்ப
கஷ்டத்தில் பங்கெடுத்துக்
கொள்ளும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை
எப்போதும் மறைத்தே
வைத்திருக்கும் போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
11.ஆண்கள் கூட்டத்தை
கடக்கும் போது,நம்மை
ஏதேனும் சொல்லி
கிண்டலடித்து
விடுவார்களோ என்று
மனதில் ஆயிரம்
கேள்விகளை சுமந்த படியே
செல்லும் போது.
.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
12.சமைக்கத் தெரியாது
என்பதை பெருமையாக
சொல்லாமல்,
அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும்
போது.
.🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
.
தன்னலமில்லாத ,
செயற்கைத் தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு
தான்❀❀❀❀❀❀❀❀❀❀.

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கனவு ஒன்று கண்டேன் தோழா
அதில் வானமும் பூமியும்
மாறுவது போல..!
அதிலும் மாறாத ஒன்றை மட்டும் கண்டேன்
சாதி, மதம் என்ற குப்பைகளை..!!
-ஸ்ரிவிஷா

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ஆழக் கிணற்றிற்குள் தெரியும்
நிலா போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,
நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,
விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,
சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,
தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,
மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;
மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,
ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,
இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,
நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது
எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை "விதவை" யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!
-வித்யாசாகர்
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தொட்டில் ஆடாத வயிறு☃.. தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும்-வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும்-வயிறு கேட்பவள்; கெஞ்சிக் கெஞ்சியழுங் கண்ணீரில் பஞ்சுத் தலையணை தினம் நனைய கொஞ்சு(ம்☃)சுகம் மறந்து மறந்தே வருடக் கணக்கில் வரண்டுப் போனவள்; பிறக்கும் வயிறு பற்றியெரிய பெற்ற வயிறும் வளர்த்தத் தோளும் பாதி பங்குக்குச் சுமக்க ஒற்றைக் கூப்பில் அம்மாவாக பத்துமாத பிச்சைகேட்பவள்☃; பாவம் அனாதைக் குழந்தையென்று☃ வாங்கி வளர்க்க ஆசைப்பட்டும் தத்துப் பிள்ளைக்கு தாயென்றுச் சொல்லும் ஒற்றை வார்த்தைக்கு பயந்துப் போனவள்; நடக்கும் பிறக்கும் நாளே போ போவென்று நாளும் கணவனைத் தாங்கி தாங்கி கிடைப்பதையெல்லாம் தின்றுப் பார்ப்பவள்☃; கொஞ்சம் விசமேனும் கொடுத்து உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால் அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க மனசெல்லாம் வலி சுமப்பவள்☃; விளையா மண்ணின் வாசம்போல-பிறவாவயிறும் பாவி கணக்கு, பிறந்த பாவம் ஒழியட்டுமென்று தினம் தினம்- தனை மனச்சிலுவையில் சுமக்கும் தாயுமனவள்!! -வித்யாசாகர்

இயற்கை:
கதிர் தோன்றி மறையும்,
கரு ஊன்றி வளரும்,
அதிகாலைக் குயில்களும்
அழகாகக் கூவும்.

தென்றலும் வீசும்,
தேய்பிறையும் பேசும்,
இரவு விண்மீன்களும்,
எப்போதும் ஒளிரும்.

வயல்களும் செடிகளும்,
வானுயர் மரங்களும்,
நமக்காக வாழ்ந்து,
நன்மைகளை ஈயும்.

செயற்கை உரங்களில்,
சீரழிந்த வனங்களில்,
இயற்கை அன்னை,
எப்படித்தான் வாழும்?

இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்
உயிர் மூச்செடுத்து ஒரு கவிதை எழுதுவேன்
மகிழ்ச்சியாக மரணத்திலும், தமிழ் வாழ்கவென்று !

படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!

ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.

தெருவை கடந்தேன்
ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை
கடந்தேன்
ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன்
இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே
இந்தியன் ஆனேன்!


ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

நீச்சல் .....
அடிக்க தெரிந்தவனுக்கு....
கடல் எவ்வளவு ஆழம் ....
அறிய தேவையில்லை ,.....!!!

வாழ்க்கை ரசிப்பவனுக்கு, .....
பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !!

பிரச்சனை இல்லாதவன் ....
வாழ்க்கை இயந்திர மனிதனை ...
போன்றது - இயக்கம் இருக்கும்....
உணர்வு இருக்காது ....!!!

என் மனைவி....

ஒரு வேளை
எனக்கு முன் என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே புதிய கோயில்
ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை ....!!!

நான் தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன்...!!!

அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை
யாரையும் வணங்க விடமாட்டேன்,
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள்
நான் கடவுளாக பார்க்கிறேன்.
என் மீதிக்காலத்தை அங்கேயே
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!

மகிழ்வோடு வாழ்..
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!

வருமானம்

உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதைத்தான் வருமானம்
என்கிறார்களோ ...

அம்மாவின் கருவறையில் பிறந்து
அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த
என்னை மறுபடியும் தாலாட்ட வந்தவள்
- மனைவி
ஓரே ஓரு முறைதான்

எனினும்

உன் உன்னத நிழல்

என்மீது பட்ட போதுதான்

நான் ஓளியூட்டப்பட்டுக்

கவிஞனானேன்!

ஓரு

கிணற்று தவளையின்

கூச்சலைப் போல

என்

இதுவரையிலான வாதங்கள்.. !

தேடல்கள் சுணங்கி

மூளையை துருப்பிடிக்க

வைக்கும் என்னின்

இதுவரையிலான முயற்சியை

மூட்டை கட்டலாமா

என யோசனைகள்

விரிய ஓரு

விடியல் கிட்டுமென நம்பிக்கையுடன்..!!

தவிப்பு
எப்போதும்
இருந்து கொண்டு தான்
இருக்கிறது...
ஆணுக்கு
தன்னை
பிடிக்க வேண்டுமே
என பெண்ணுக்கும்,
பெண்ணுக்கு
தன்னை
பிடிக்க வேண்டுமே
என ஆணுக்கும்......!!

ஏமாற்றம்
----------------
முதலில்
சின்ன முள்..
பின் பெரிய முள்...
இன்னும் பெரிய
முள்ளை தொட்டு
விட முடியுமென
ஒவ்வொரு வினாடியும்
ஏமாந்து கொண்டிருக்கிறது
வினாடி முள்.....

நான்
செய்யும் எல்லா
செயல்களையும்,
நீ
கண்காணித்து
கொண்டிருப்பதாக
நினைத்தே
செய்கிறேன்....!!!
இவ்வுலகில்
பணத்தை கொண்டு
எல்லாவற்றையும்
வாங்கி விட
முடியாது....!
இருப்பினும்,
இவ்வுலகில்
அனவருக்கும்
புரியக்கூடிய
மொழி,
"கரன்சி"

Previous Post
Next Post

0 Comments: