திங்கள், 26 ஜூன், 2017

இன்றைய சிந்தனை துளிகள்

 1
 அனைத்து பிரச்சனைக்கும் ஒரெ வழி சற்று சிரிப்போம் 
                               சிந்திப்போம் செயல்படுவோம் 
                      வெற்றி கண்டிப்பாக நமக்கே எங்குமே
‌‌______________________________________________
 2
                               வாழ்கையை நாம் வொறுத்தால் 
                              வாழ்கை நாம்மை வொறுத்துவிடும்
______________________________________________
 3
                          நாம் மிகவும் நேசித்த நபரின் மரணம்
                     நம்மை மிகவும் பாதிக்கிறது நாம் அவரை
                              நமக்குள்ளாகவே புதைக்கிரோம் 
                            அது நாளடைவில் மிகவும் பெரிய 
                              ஆழமான வலி தரும் ஆறாத புண் 
                     ஆகி விடுகிறது இது மாயமந்திரம் போல 
                        நம்மை விட்டு போக வாய்ப்பே இல்லை 
                                நாமே அதை அதிகாரம் செய்து 
                      அந்த துக்கத்தை நினைப்பதை விட்டு
                            நம் மனதை மாற்றினாலே ஒழிய
                     இதிலிருந்து நாம் வெளியே வர இயலாது
______________________________________________
 4
                    இவ்வளவு   போதும் என்று எண்ணுகிற நெஞ்சு
         அவ்வளவு கிடைத்ததும் அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறது
                                   இதுதான்  மனிதனின் ஆசை மனம்
                    இருக்கும் வரை எனக்கு தோல்விகள் வேண்டும்
              அதனால் இறக்கும் வரை எனக்கு வெற்றிகள் இருக்கும்.
______________________________________________
 5
                           இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை
                அப்படடியென்றால் உன்னுடைய கஷ்டம் மட்டும் 
                                            எப்படடி நிரந்தரமாகும்
       போராடடி முன்னேறினால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் 
______________________________________________
6
                       என்ன சொல்ல நாம் ஒன்று நினைக்க தெய்வம் 
   வேறு அல்லவா நினைக்கிறது மனம் வலிக்கும் போது சிரியுங்கள்
______________________________________________
 7
                           கேட்பது எல்லாம் கிடைக்கிறது என்று நாம்
                         நம்புவதால் தான் கணணுக்கு தெரியாதவன் 
                   கூட கடவுளாகிறான் நாம் ஏன் நம்மிடம் இருப்பதை 
                        மற்றவர;களுக்கு கொடுத்து மனிதனாக கூடாது
______________________________________________
 8
                          சிறிய உதவிகளை திருப்பி செலுத்துவதில் 
                            அநேகமாக அனைவருக்கும் மகிழ்ச்சி
  _____________________________________________
 9
                     உனது குணம் சரியாக இருந்தால் உனது 
                                 புகழும் சரியாக இருக்கும்
______________________________________________
 10
                    வெற்றி என்பது மதிக்க தகுந்த இலக்கை 
                நோக்கி முன்னேறுவதை உணர்வதே ஆகும்...
______________________________________________
 11
            சத்தியம் உள்ள இடத்தில் தான்
                மெய்யறிவு இருக்கும்....
______________________________________________
 12
                        உயர்வாக கருதினால் உயர்ந்திட முடியும்.
                         திறமைசாலி என நினைத்தால் ஆகலாம்....
______________________________________________
 13
        மேன்மையான எண்ணங்களுடன் 
              இருப்போர் எப்போதும் தனித்திரார்.....
______________________________________________
 14
    நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் 
    பெற்றுள்ள வரங்களின் தலைசிறந்தது....
______________________________________________
 15
         சுதந்திரத்துக்கு கட்டுபாடுகள் உண்டு. 
           அனால் எல்லை கோடுகள் இல்லை......
______________________________________________
 16
       உண்மையான அடக்கமே எல்லா 
                 நட்குனங்களுக்கும் பிறப்பிடமாய் இருக்கிறது.....
______________________________________________
 17
                       மனிதன் மிக உயர்ந்த உச்சியை  அடையலாம். 
                        அனால் அங்கேயே தங்கிவிட முடியாது....
______________________________________________
 18
                   யோசனைகள் நேரத்தையும். அலையையும் 
                         போல யாருக்கும் காத்திருப்பதில்லை........
______________________________________________
 19
                எந்த காரியத்திலும் வெற்றியின் முதல்படி அந்த 
                   காரியத்தில் கொண்டிருக்கும் ஆர்வம் தான்....
______________________________________________
 20
                       சரியாக புரிந்து கொள்வதற்கு இருக்கும் இரண்டு
                            எதிரிகள் சினமும், சகிப்புத்தன்மையும்.......
______________________________________________
21
                 நம்பிக்கையும் தைரியமும் வெற்றிக் கிரீடத்தில் 
            இரு ஒளிமிகு வைரங்கள்.
  _____________________________________________
22
   எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவு தான்
    உறுதியான அடித்தளமாக இருக்கிறது...
______________________________________________
23
       மேன்மையை நாடிச் செல்பவனுக்கு 
              சிறு குறைகளும் இருக்காது .........
______________________________________________
24
        ஆலோசனைக்கு பின்னரே எல்லாச் 
             செயல்களையும் தொடங்க வேண்டும்....
______________________________________________
25
    உழைக்கவும் அதன் பின் விளைவிற்காக
            காத்திருக்கவும் கற்றுக்கொள்.....
______________________________________________
26
                          உண்மையான மனபேதங்கள் ஆரோக்கியமான                                   முன்னேற்றத்திற்கு அறிகுறி....
______________________________________________
 27
  மனிதனை மனிதனாக்குவது 
  இடையூர்கலும் துன்பங்களுமே..

______________________________________________
28
  வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. 
     என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்,
  செய்வதை விரும்பிச் செய், 
       செய்வதை நம்பிக்கையோடு செய்.
______________________________________________
29
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.
______________________________________________
 30
தோல்வி என்பது வாழ்க்கை கற்றுதரும் பாடங்களில் ஒன்றே தவிர,அதில் அவமானம் இல்லை.
______________________________________________
31
பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
______________________________________________
32
கல்வியில்லாத அனுபவம்,அனுபவம்  இல்லாத கல்வியைவிட மேல்...
______________________________________________
 33
உழைக்க மறுப்பவன், உடல் உறுப்புகள் இருந்தும் முடியாத ஊனம் மிக்கவன்தான்..
______________________________________________
 34
கெட்ட செய்தி விரைந்து ஓடும். நல்ல செய்தி பின் தங்கும்.
______________________________________________
35
பிறரைச் சுட முயலும் பொறாமை தன்னையே சுட்டுக்கொள்ளும்....
______________________________________________
36
மனிதனுக்கு பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே எதிரிகள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடையவிடாமல் தடுக்கின்றன.
______________________________________________
 37
அதிஷ்டதால் கிடைக்கும் பணமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.....
______________________________________________
38
ஒரு தவறுக்கு அடி பணிந்தால் மற்றோருன்றைத் கூட்டி வரும்...
______________________________________________
 39
ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!
______________________________________________
40
நகர்ந்து கொண்டே இருப்பது தான் நதிக்கு அழகு. வளர்ந்து கொண்டே இருப்பது தான் வாழ்க்கைக்கு அழகு! வளர வேண்டும் என்று கருத்தில் கொண்டு நகர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்!
______________________________________________
41
பிடித்த ஒரு செயலை செய்தால் மகிழ்ச்சியும் அதே செயலை பிடித்து செய்தால் வெற்றியும் அடைவது நிச்சயம்
______________________________________________
 42
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அது உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள் ......
______________________________________________
            43           
   நம்மை நாமே வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கி 
       விடுகிறது சிலர் மேல் நாம் கொண்ட அன்பு.....
______________________________________________
44
துன்பங்களை அனுபவித்த காலங்களை மறந்து விடுங்கள் ஆனால் அக்காலங்கள் கற்று தந்த பாடங்களை மறந்து விடாதிர்கள்.....
______________________________________________
 45
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் ? கவலையை விடுங்கள் முதலில் வாழ தொடங்குங்கள்....
______________________________________________
 46
நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்பப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்யக்கூடாது?
______________________________________________
 47
ஒரு வாய்ப்பற்ற தன்மையால் நாம் இழந்ததை வேறொரு வாய்ப்பினால் பெறலாம்
______________________________________________
 48
கணவன் ஊதாரியானல் பாதி வீடும் ,
மனைவி ஊதாரியானல் முழு வீடும் அழிந்து விடும்...
______________________________________________
49
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
______________________________________________
50
பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

 51
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்...

 52
நண்பனை நேசிப்பது போல் எதிரியையும் நேசிக்கப் பழகுங்கள் நண்பன் வெற்றிக்கு துணை நிற்பான் , எதிரி வெற்றிக்கு காரனமாய் இருப்பான்.

53
நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்
காலம்....!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!

 54
ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?

55
ஒருவனிடமிருந்து வரும் பதில்களை விட அவனிடமிருந்து எழும் கேள்விகளே அவனது புத்திசாலித் தனத்தை காட்டும்

56
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

57
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்

58
வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

59
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

60
நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் முழு விழிப்புணர்வோடு உங்கள் மனமும் செயலும் கலந்து ஒன்றி இருந்தால் அதுதான் உண்மையான தியானம்!

61
வேலையின் மீது கண் வையுங்கள், கடிகாரத்தின் மீது கண் வைக்காதீர்கள். 

62
உங்களுக்குத் தெரிந்த கல்வியை, கலையை அடிக்கடி உபயோகித்தால் அறிவும் செல்வமும் உயரும். - ஆபிரிக்க முதுமொழி

63
வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

64
நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையான கல்வி. 

65
உன் பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் ,
உன் இறப்பு சரித்திரமாகட்டும்...

66
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

67
காலண்டர் வரிகள்..
என்னை அலட்சியமாக கிழித்து எறிந்து...
உனது லட்சியத்தில் ஒரு நாளை குறைத்து கொள்கிறாய்..