வெள்ளி, 7 ஜூலை, 2017

A.P.J அப்துல்கலாம் பொன்மொழிகள்

A.P.J அப்துல்கலாம் பொன்மொழிகள்


பள்ளி மாணவ-மாணவியர் ஏற்க வேண்டிய 10 உறுதிமொழிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தினார்.
1) நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.
2) நன்றாக உழைத்து படித்து, வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முயல்வேன்.
3) எனது விடுமுறை நாள்களில், எழுதப் படிக்கத் தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன்.
4) எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன்.
5) மது, சூதாடுதல், போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த முயல்வேன்.
6) துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன்.
7) ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன்.
8) வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
9) என் தாய், தாய்நாட்டை நேசித்து, பெண் குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன்.
10) நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!உலகம் உன்னை அறிவதைவிட, உன்னைஉலகிற்கு அறிமுகம் செய்துகொள். நீ முடியாது என்று சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.


நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.


நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
ஒருமுறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால்  அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே

தனித்துவமாக இருக்க இதற்கு முன் எவரும் சந்தித்திராத கடினமாக யுத்தத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். அந்த யுத்தத்தில் வெற்றி  பெற்றால் பலன் நிச்சயம். இதற்கு நான் உத்தரவாதம்.

தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.

வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம்.  ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.


உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.


சரியான காரியத்தை செய் எளிமையான வழி என என்னிடம் கேட்கிறார்கள். தாயின் முகத்தில் புன்னகை அரும்ப செய்யும் காரியத்தை செய்யுங்கள். அதனை நேர்மையாகவும், கடின உழைப்புடனும் செய்யுங்கள்.


உயரிய நோக்கம் இருந்தால் மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற சுவர்கள் தவிடுபொடியாகிவிடும்.

தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. இரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.

என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

எளிமை, நேர்மை, உண்மை ஆகியவை இல்லாமல் எந்த காலத்திலும் உயர்வு இல்லை.
கனவு காண்பவர்கள் அணைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்..

ஈடுபாடின்றி வெற்றி இல்லை!  ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை!
சிந்தனை செய்யுங்கள்..., அதுவே மூலதனம்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்!

அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!

ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!
மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!

முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே  அவற்றை வெற்றி கொள்ள முடியும்.
அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.

வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.


நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்?
மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.

உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?
மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே இன்றைய தேவை.

தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.

உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.

ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான்.
கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது.

தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.
அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.

எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.

ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
Previous Post
Next Post

0 Comments: