வெள்ளி, 7 ஜூலை, 2017

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்
1
தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்
அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும்
கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
என் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
‌‌__________________________________________
2
அன்பு பெருக...
மகிழ்ச்சி என்றும் தங்க...
செல்வம் நிலைக்க...
நோய் நீங்க...
முயற்சி பெருக...
வெற்றி என்றும் உங்கள் வசமாக...
என் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
‌‌__________________________________________
3
இந்த இனிய நாளில்
உங்கள் முகம் மலரட்டும்,
உங்கள் குணம் செழிக்கட்டும்,
உங்கள் புகழ் பரவட்டும்,
உங்கள் செல்வம் வளரட்டும்,
உங்கள் குரல் முழங்கட்டும்,
உங்கள் சிரசு நிலைக்கட்டும்,
உங்கள் எண்ணம் நிமிரட்டும்,
உங்கள் அருள் பொழியட்டும்,
உங்கள் அறம் விளங்கட்டும்,
உங்கள் பெயர் பரவட்டும்,
இன்றோடு
உங்கள் சினம் கரையட்டும்...
இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகளுடன்...  I'm
__________________________________________
4
தை மகளும் வந்தாச்சு....
                          தை மகளும் வந்தாச்சு
                          தமிழர் உள்ளம் மகிழ்வாச்சு
                          தன்னலமில்லா உழவர் உம்மால்
                         தரணியில் பஞ்சம் போகலாச்சு.
                         ஏர் பிடித்த உங்களினால்
                         பார் இன்று வாழுதையா
                         பேர் புகழும் உங்களுக்கே
                         பெருமிதம் கொள்ள வேண்டுமையா.
                         தைத்திருநாளில் எல்லோர்க்கும்
                         நல்வாழ்வுடன் புகழ் பெருமை
                         நலம் பல கிடைத்திட இறைவா
                         உன்னருள் வேண்டி வாழ்த்துகிறேன் நான்.
‌‌__________________________________________
5‌‌
பொங்க வேண்டும்...
            பொங்க வேண்டும் வாழ்வில் இன்பம்
                         அகல வேண்டும் எங்கள் துன்பம்
                         பெருக வேண்டும் மனதில் மகிழ்வு
                         சிறக்க வேண்டும் யாவர்க்கும் நல்வாழ்வு!
‌‌__________________________________________
6
பச்சரிசி
பால் பொங்கல்
பானையில் பொங்கிட...
அச்சு வெள்ளம்
செங்கரும்பாய்
வாழ்க்கையும் இனித்திட...
கதிராடும் நெல்மனிகள்
களத்தினில்
குவிந்திட...
கொத்துமஞ்சள் நெல்மனிகள்
உறவுகள்
பகிர்ந்திட...
ஆடு மாடு
கலப்பைஎல்லாம்
அதிகமாய் பெருகிட...
கவலையெல்லாம்
கனவைப்போல்
காணாமல் போயிட...
ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும்
உழவர்கள் அனைவரும்
ஓரிருநாள் ஓய்ந்து
கொண்டாடும்
பொங்கல் திருநாளில்
உங்கள் மனம்
மகிழ்ச்சியில் பொங்க
உலக தமிழர்கள்
அனைவருக்கும் எனது
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...!!!
‌‌__________________________________________

7
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்...
‌‌__________________________________________

8
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ...
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும்...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக தை பொங்கலே..!!
‌‌__________________________________________

9
கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
"Happy Pongal" வாசகங்களுடன்.
பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.
தமிழன்
"எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு"
பட்டிமன்றங்கள் பொதிகையில்.
ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்
வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
விிிிிிிிிிிி
‌‌__________________________________________
10
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்...
‌‌__________________________________________
11
பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

‌‌__________________________________________
12
தை மகளின் வருகையால்
பொங்கியதே எங்கள் உழவர் உள்ளம்...
வையம் தழைக்க, எல்லா வளமும் பொங்க...
பொங்கட்டும் இந்த இனிய பொங்கல்..
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

‌‌__________________________________________
13
உலகத் தமிழரிடையே
ஒற்றுமை பொங்கல் பொங்க-
தமிழ் மணம் எங்கும் பொங்க-
தமிழ் மண்ணின் தரம் பொங்க
தமிழர்களே பொங்குவோம் பொங்கல்....

‌‌__________________________________________
14
இந்த பொங்கல் கண்டிப்பாக உங்களின் வாழ்க்கையில்
அன்பையும் பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு
வந்து சேர்க்கும்.என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

‌‌__________________________________________
15
பொங்கும் பொங்கல் உங்கள் வாழ்வில் பல
வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

‌‌__________________________________________
16
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ...............
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் ...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக தை பொங்கலே...!!

‌‌__________________________________________
17
தை மகளும் வந்தாச்சு
                          தமிழர் உள்ளம் மகிழ்வாச்சு
                          தன்னலமில்லா உழவர் உம்மால்
                         தரணியில் பஞ்சம் போகலாச்சு.
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்..
‌‌__________________________________________

18
பொங்க வேண்டும் வாழ்வில் இன்பம்
                         அகல வேண்டும் எங்கள் துன்பம்
                         பெருக வேண்டும் மனதில் மகிழ்வு
                         சிறக்க வேண்டும் யாவர்க்கும் நல்வாழ்வு!
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்....
‌‌__________________________________________

19
நாம், எங்கிருந்தாலும் நம்மை இணைப்பது தமிழன் என்ற பந்தம் மட்டுமே.
எல்லோருக்கும் இனிய பொங்கல், வாழ்த்துக்கள்.

‌‌__________________________________________
20
திமிரு பிடித்து
திரியும்
மக்களை விட்டுவிட்டு
மாடுகளை
அடக்கி ,
மார்தட்டி கொள்ளும் ,
கிராமத்து பொங்கல் !
‌‌__________________________________________

21
கடன்வாங்கி
வெள்ளை அடித்து ,
இருக்கின்ற
சேலையை ,
இரண்டு தாவணி யாக்கி
கஷ்ட பட்டு
கரைந் து போகும்
ஏழைகளின் பொங்கல் !
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்....

‌‌__________________________________________
22
ஆண்டவனின்
அன்பிற்கு
அடியவனின்
காணிக்கை திருநாள் !
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்...

‌‌__________________________________________
23
பூ படைந்த
நெற் பயறுக்கு
பூ புனித திருநாள் !
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்....

‌‌__________________________________________
24
உழவனின்
கனவுகள் யாஉம்
கர்ப்பம் தரிக்கும்
கலையான திருநாள் !
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்....

‌‌__________________________________________
25
உழவனின்
உள்ளங்களில்
இன்பம் ஊற்றெடுக்கும்
உற்சவ திருநாள்!
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்
‌‌__________________________________________

26
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
Previous Post
Next Post

0 Comments: