வெள்ளி, 7 ஜூலை, 2017

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு

1
கனவுகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட
லட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்து..!
உலகம் உன்னை போற்றும்
இந்த புதிய வருடம்
உனது லட்சியங்கள்
நிறைவேற
இறைவனை வேண்டுகிறேன்...!!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
2
ஜனவரி பிறக்க
டிசம்பர் தன் பூக்களை
தூவி வழி விட்டு வரவேற்கிறது
அழகிய புத்தாண்டை
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..!
3
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தமிழருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..!
4
புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி
புதிய கருத்துக்களை பரிமாறி
புதிதாய் கொண்டாடுவோம்
இந்த புத்தாண்டை  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....
5
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை மட்டுமே தோற்கும்
முயற்சிகள் தவறலாம்
முயற்சிக்க தவறலாமோ
இனிய ஆங்கில புத்தாண்டு  வாழ்த்துக்கள்
6
ஒளி வீசட்டும் வாழ்வில்
மணம் வீசட்டும் மனங்களில்
துன்பங்களை தூரப்படுத்தி
பிறக்கட்டும் இனிய புத்தாண்டு!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
7
வஞ்சமில்லா வருங்காலம் வளம் கொழிக்க..
வேலையில்லா திண்டாட்டம் வேரற்றுப் போக..
சோதனைகள் வழி கேட்டு வேறு பாதையில் ஒட..
இன்பம் பொங்க பிறக்கட்கும் புதிய வருடம்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
8
போற்றத்தகு புதுவாழ்வு
பூக்களாய் பூக்க..
போடியில்லா சமுதாயம்
நேசக்கரம் நீட்ட..
பஞ்சமில்லா பெருவாழ்வு
பக்கத்தில் வர..
பிறக்கட்டும் புதிய ஆண்டு
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
9
பகைவனுக்கு மன்னிப்பை பரிசளி
நண்பனுக்கு உள்ளத்தை பரிசளி
புத்தாண்டு முதல்
உனக்கு நீயே தன்னம்பிக்கையை
பரிசளித்துக் கொள்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
10
விடைபெறும் நாட்கள்
விளையாட்டாய் முடிந்தாலும்
வரும் நாட்கள்
வழிவிடும் நாட்களாகட்டும்..!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
11
உதிக்கும் சூரியன்
உள்ளங்கையை
உரக்க அசைக்கையில்
உற்சாகத்தோடு
வரவேற்போம் புத்தாண்டை!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
12
உதிரட்டும் பழமைகள்
துளிர்க்கட்டும் புதுமைகள்
சிந்தாமல் சிதறாமல்
சிறப்பாக அமையட்டும் புத்தாண்டு..!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
13
உங்களால் எதைச் செய்ய முடியும்
என்பதை விட
எதைச் செய்ய முடியாது
என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
இந்த புத்தாண்டிலாவது,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
14
இந்த ஆண்டு முதல்
நான் தரும் ரோஜாக்களையே
தேசிய மலராக தேர்வு செய்திருக்கின்றனர்
மலரோடு வாடாத என் வாழ்த்துக்களையும்
சேமித்துவை!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
15
புத்தாண்டிலிருந்து
புது வழியைக் கண்டுபிடிப்போம்
இல்லாவிட்டால்
புது வழியை உருவாக்குவோம்..!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
16
கடவுளை வணங்கும்
கொஞ்ச நேரம் முடிந்துவிட்டது
உங்கள் லட்சியங்களை
அடைய முயலும் நீண்டநேரம்
புத்தாண்டு வந்துவிட்டது!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
17
வளமான உலகையும்
நலமான பாரதத்தையும்
உருவாக்க வருக வருக புத்தாண்டே
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
18
புத்தாண்டு பிறந்ததின்று
புதுமையெல்லாம் பொழிகவென்று
இத்தரையில் மாந்தரெல்லாம்
இன்பமுடன் வாழ்கவென்று!
வளமையெங்கும் நிறைகவென்று
வறுமையது மறைகவென்று
விளைவு எங்கும் பெருகவென்று
விடியட்டும் இந்த புத்தாண்டு....!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
19
முன்னேற்றப் பாதையிலே
முனைந்து நின்றால் ஏற்றமுண்டு
எந்நாளும் துன்பமில்லை
என்றறிய வந்ததின்று!
புதிய புத்தாண்டு....!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
20
தீண்டாமை ஒழிகவென்று
தீதெல்லாம் நலிகவென்று
வேண்டுவென கிடைக்கவென்று
விடிந்ததின்று புத்தாண்டு!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
21
புதிய சரித்திர புத்தாண்டு வருது
பூமிக்கு மறுபிறப்பு புனிதமாய் அமையுது
விதியை மாற்றும் வேகமிங்கு வெளிச்சமாய் தெரியுது
வீரமிக்க புதுவுள்ளம் எல்லோருக்கும் பிறக்குது!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
22
சாதி மத பேதமற்ற
சமதர்ம சமுதாயம்
மேதினியில் மலர்கவென்று
இன்று மலர்ந்த புதுவசந்தம்.....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
23
சென்ற வருட கனவுகளை
நிறைவேற்ற நிறைவாய் பிறக்கட்டும்
புதியதோர் புத்தாண்டு,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
24
பூமிக்கு புறமுது காட்டும்
ஏற்றத்தாழ்வு, ஏழையில்லா எதிர்காலம்
தெளிவாக தெரிய பிறக்கட்டும்
இந்த புத்தாண்டு புதிதாய்.....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
25
சாதி சமய பூசலெல்லாம் தறிகெட்டு ஓடுது
சமுதாய நன்மையெல்லாம் போட்டி போட்டு மலருது
நீதி நேர்மை ஜோடியாக கைகோர்த்து வருகுது
நிரந்தரமாய் நம்மிடையே குடிகொள்ளப் போகுது
இந்த புதுவருடத்தில்....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
26
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்,
நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும்,
நீண்ட ஆயுளும், அனைத்து வளங்களும் பெற்று
வாழ வாழ்த்துகின்றோம்
27
வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெருக
அனைவருக்கும் மனமார்ந்த
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!
28
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்..!
மாற்றங்கள் மலரட்டும்...!
இன்னிசை முழங்கட்டும்...!
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்...!
29
இருளை நீக்கி
ஒளியை அருள
புது வருடமே வருக...
புத்தாண்டில் புத்தொளி தருக!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
30
வருக! புத்தாண்டே வருக!
உன்
வருகைக்கு பின்
எங்கள் குடும்பம்
என்றுமே மண‌க்கின்ற‌
கதம்பங்களாகட்டும்.
எங்கள்
எதிர் கால வாழ்க்கை
இனிக்கட்டும்.
என்றென்றும் அது
நிலைக்கட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
31
வருக! புத்தாண்டே வருக!
பூரிக்கும் புத்தாண்டே!
புன்முறுவல் நீ கொண்டு
வருகின்ற நேரம்,
வசந்தங்கள் உன்னோடு
கை கோர்த்துக்கொள்ளும்.
வென் மேகக் கூட்டம்
பொன்மாரிப் பொழியும்
முத்துச் சிதறல்கள்
நீ கொண்டு வருவதால்...
என்னுள்ளே தழைக்கிறது
ஓர்
இன்பப் புத்துணர்ச்சி!
வானத்து கார்முகிலும்
வண்ணத்து பொன்மயிலும்
வான்மதியுடன் வந்து
உன்னை
வரவேற்கும் அழகைப்பார்!
32
வருக! புத்தாண்டே வருக!
பூரிக்கும் புத்தாண்டே!
புன்முறுவல் நீ கொண்டு
வருகின்ற நேரம்,
வசந்தங்கள் உன்னோடு
கை கோர்த்துக்கொள்ளும்.
வென் மேகக் கூட்டம்
பொன்மாரிப் பொழியும்
முத்துச் சிதறல்கள்
நீ கொண்டு வருவதால்...
என்னுள்ளே தழைக்கிறது
ஓர்
இன்பப் புத்துணர்ச்சி!
வானத்து கார்முகிலும்
வண்ணத்து பொன்மயிலும்
வான்மதியுடன் வந்து
உன்னை
வரவேற்கும் அழகைப்பார்!
33
நம்பிக்கை நாணேற்றி
இலக்குகள் தாக்குவோம்
2015 ன் இறுதிப் படி ஏறி
2016 ன் வாய்ப்புகளை எட்டிப் பிடிப்போம்
வெற்றிகள் நிச்சயம்
இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள்...
34
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இப்புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் வளம் கொழிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
Previous Post
Next Post

0 Comments: