திங்கள், 28 மே, 2018

அப்துல்கலாம் பொன்மொழிகள்

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!
__________________________________________
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
__________________________________________
தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.
__________________________________________
ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!
__________________________________________
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.
__________________________________________
சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.
__________________________________________
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
__________________________________________
ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.
__________________________________________
ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நாறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.
__________________________________________
நம்பிக்கை நிறைந்த‌ ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. ‍‍‍- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
__________________________________________
சிந்தனை செய்யுங்கள்..., அதுவே மூலதனம்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்!
__________________________________________
கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும்,படித்த‌ குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத‌ குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய‌ முடியும். நீ யாராக‌ இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்.
__________________________________________
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
__________________________________________
எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!
__________________________________________
கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு.
__________________________________________
அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!
__________________________________________
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!
__________________________________________
கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், அதை வென்றுவிடலாம்.
__________________________________________
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
__________________________________________
ஈடுபாடின்றி வெற்றி இல்லை!  ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை!- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
__________________________________________
இந்தச் சக்தி உங்களுடைய லட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.
__________________________________________
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
__________________________________________
பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
__________________________________________
தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு.
__________________________________________
தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.
__________________________________________
காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
__________________________________________
வானத்தை நோக்குங்கள்! நாம் தனியாக இல்லை! பிரபஞ்சமே கனவை நனவாக்கும் உழைப்பாளிகளுக்கு சிறந்ததைத் தர நட்புடன் காத்திருக்கிறது!
__________________________________________
வெல்வோம், சாதிப்போம். வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
__________________________________________
அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!
__________________________________________
வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!
__________________________________________
நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல‌ கனவு. உங்களை உறங்க‌ விடாமல் செய்வதே கனவு. ‍‍‍
__________________________________________
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
__________________________________________
கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
__________________________________________
இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
__________________________________________
இந்த‌ உலகத்தில் பிறந்த‌ அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த‌ பக்கத்தை இந்த‌ உலகையே படிக்க‌ வைப்பது உன்கள் கைகளில் தான் உள்ளது.
__________________________________________
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
__________________________________________
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
__________________________________________
தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!
__________________________________________
வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு!
__________________________________________
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திற‌மையை வளர்த்துக்கொள்ள‌ ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன‌.
__________________________________________
நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!
__________________________________________
கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.
__________________________________________
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
__________________________________________
அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
__________________________________________
கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!
__________________________________________
உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
__________________________________________
மழையில் பெரும்பாலான பறவைகள் தங்கள் வசிப்பிடங்களை நோக்கிச் செல்லும்! ஆனால் கழுகு மழை மேகங்களுக்கும் மேலே பறந்து தன்னை நனையாமல் காத்துக் கொள்ளும்!  சிக்கலை திறமையுள்ளோர் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை இது காட்டுகிறது!
__________________________________________
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
__________________________________________
இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்!
__________________________________________
தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.
__________________________________________
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!
__________________________________________
கஷ்டம் வரும்போது கன்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்.
__________________________________________
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
__________________________________________

Previous Post
Next Post

0 Comments: