வியாழன், 17 மே, 2018

தன்னம்பிக்கை

மற்றும் தொட்டு பார்க்கவே அருவருப்பான புழுதான் ..சில நாட்களுக்குப்பிறகு அனைவரும் தொடுவதற்கு ஆசையாய் பிடிக்க முயலும் பட்டாம்பூச்சி...!! #காலமாற்றம்-தன்னம்பிக்கை
__________________________________________
சிந்திப்பவை சில நேரம் தான் நீடிக்கும்...
நம்பிக்கை வாழ்நாள் வரை நீடிக்கும்...-தன்னம்பிக்கை
__________________________________________
நம் கண்ணீரை நாமே துடைக்கும் போது தான்... தன்னம்பிக்கையாய் முடிவு எடுக்கிறோம்!!!-தன்னம்பிக்கை
__________________________________________
துவளாதவன் அடைந்த ஒரு தோல்வி, அவனின் பல வெற்றிகளுக்கான வழிகாட்டியாய் அமைகிறது!!!-தன்னம்பிக்கை
__________________________________________
நான் தோற்கும் ஒவ்வொரு சமயமும் கூடவே வருகிறாய்... என் வெற்றி அத்தனைக்கும் நீயே பொறுப்பு #தன்னம்பிக்கை -தன்னம்பிக்கை
__________________________________________
வெளிப்படையானவர்கள் யார் என்ன நினைத்தாலும் அதை பெரிது படுத்திக் கொள்வதே இல்லை...
நிறைய தன்னம்பிக்கை கொண்டவர்களாக காட்சியளிக்கிறார்கள்!!!-தன்னம்பிக்கை
__________________________________________
உயர்ந்தவரை எண்ணி அசைபோடு,
நீ உயர்வதை நினைத்து நடை போடு,
நம்பிக்கை வை என்றும் உன்னோடு,
வெற்றிகள் வந்து சேரும்  உன் பின்னோடு....
உழைத்திடு உயர்ந்திடு.......-தன்னம்பிக்கை
__________________________________________
கோவில்களில் எத்தனை மனிதர்கள்..
எத்தனை வேண்டுதல்.. அத்தனையும் நிறைவேற்றி விடுவேன் என்ற நம்பிக்கையில் கடவுள்.. #தன்னம்பிக்கை-தன்னம்பிக்கை
__________________________________________
தண்ணீருக்கு அடியில் சென்று ஓவியம் வரைய முடியாது... தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது....-தன்னம்பிக்கை
__________________________________________
அன்பினால் நீ அடைந்துவிடுவாய் வெற்றி.
பண்பினால் நீ வென்றிடுவாய் நம்பிக்கை!!! -தன்னம்பிக்கை
__________________________________________
பொறுத்துக்கொண்டே இரு...
உன் லட்சியம் நினைவாகும் வரை.
#தன்னம்பிக்கை -தன்னம்பிக்கை
__________________________________________
இன்றைய தினத்தைச் சவாலாக எடுத்துக் கொள்ளும்போது, நேற்றைய தினம் கனவாகவும், நாளைய தினம் நனவாகவும் அமைகிறது...!! #தன்னம்பிக்கை-தன்னம்பிக்கை
__________________________________________
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும். -தன்னம்பிக்கை
__________________________________________
பிடித்தவர்கள் எனில் அவரின் "தலைக்கனம்" கூட நமக்கு தன்னம்பிக்கை.!
பிடிக்காதவர்கள் எனில் அவரின் "பயோடேட்டா" கூட நமக்கு தற்பெருமை.!-தன்னம்பிக்கை
__________________________________________
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! -தன்னம்பிக்கை
__________________________________________
முயன்றால் முடியாதது இல்லை;
முயற்சி இருந்தால் ஆமையும்
வெல்லும்;
முயற்சியின்மை இருந்தால்
ஆமையிடம்
தோற்றே போகும்!
முயலாமை கதை உணர்த்தும் உண்மையும்
இதுதான்; ஆதலின்
என்றென்றும் முயற்சிப்பீரே!-தன்னம்பிக்கை
__________________________________________
விதை விதைக்கப்படும்போது அது விதை மட்டுமே...
முளைத்து மரமானபின், அது கதை. அந்த கதையின் நாயகன் நீ... -தன்னம்பிக்கை
__________________________________________
எல்லோரையும் நம்பினால் துரோகமும் ஏமாற்றமும் புரியும்.. யாரையும் நம்பாமல் இருந்தால், உன் தன்னம்பிக்கை வளரும்..-தன்னம்பிக்கை
__________________________________________
இது நாள் வரை ஏற்பட்ட தோல்விகளுக்கோ,அவமதிப்புகளுக்கோ நான் வருத்தப்பட்டதில்லை இனியும் அப்படித்தான் ,
அப்படி வரும்போது அதனை எனது கனவுகள்  மறைத்து  விடும்.-தன்னம்பிக்கை
__________________________________________
காத்திருக்கும் வரை நம் பெயர்  காற்று என்று இருக்கட்டும், புறப்பட்டு விட்டால் புயல் என்று புரிய வைப்போம்,   இந்த   உலகிற்கு...!-தன்னம்பிக்கை
__________________________________________
முகம், தன் முகம் உணர்த்தி ஜொலிக்கும் முன்... பல கோரங்களை சந்திக்கிறது... -தன்னம்பிக்கை
__________________________________________
நீ என்ன செய்தாய் என்பது உனக்கு தெரியும், என்ன செய்கிறாய் என்றும் உனக்கு தெரியும், இனி என்ன செய்ய போகிறாய் என்றும் உனக்கு தெரியும் !

ஏனென்றால் நீயே வெற்றியாளன் !-தன்னம்பிக்கை
__________________________________________
நேராக செல்லும் என் பாதையில் பிரிவுகள் வரலாம், பள்ளங்கள் வரலாம், வளைவுகள் வரலாம் !

பயணம் மட்டும் இலக்கை நோக்கியே !
அதில் மட்டும் தொய்வு வராது !-தன்னம்பிக்கை
__________________________________________
சிறிய வெற்றி கூட கிடைக்கவில்லையே என ஏங்கியதில்லை...பெரிய முயற்சி தந்த இன்பத்தால்..! -தன்னம்பிக்கை
__________________________________________
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.
அவை:ஏளனம்,எதிர்ப்பு ,
அங்கீகாரம் -தன்னம்பிக்கை
__________________________________________
கொலை பசியிலும் உறவினர் வீட்டில் சாப்பிட மறுப்பது!
என்றோ ஒரு நாள் பட்ட அவமானமாக கூட இருக்கலாம்.!!
அவமானங்கள் உறுதி தரும்....-தன்னம்பிக்கை
__________________________________________
அ  முதல் ஃ வரை தன்னம்பிக்கை.....
அரும் பெரும் முயற்சியும், பயிற்சியும் உன்னை உயர் சிம்மாசனத்தில் அமர்த்தும்...! ஆதவன் நமக்கு தினம் தினம்
சொல்வதெல்லாம்..
இளமை தொலைக்காதே..! ஈகையோடிரு என்பதுதான்.
உன் ஊண் உருக்கி நீ செய்யும் செயல்,
எதிரிகளின் ஏளனப் பார்வையை பொடியாக்கட்டும்..!.
ஐயம் தீர்ந்து போராடு...
ஒன்றானவன் ஆகி..
ஓங்கி உயர்வாய்..
ஒளசித்தியம் உனை வந்தடையும்...
அஃதே உனை பார் போற்ற வைக்கும்!!!-தன்னம்பிக்கை
__________________________________________
கட்டிலை விட்டு எழுந்திரி  தங்கமே..!
நாள் முழுதும் ஓடு சிங்கமே!
வெற்றி உனக்கு ரொம்ப பக்கமே! -தன்னம்பிக்கை
__________________________________________
யாரிடமும் எதையும்
எதிர்பார்க்காதீர்கள்...
அப்படி எதிர்பார்த்தால்
இறுதிவரை எதையும்
சாதிக்காமல் போய்விடுவீர்கள......-தன்னம்பிக்கை
__________________________________________
என் வாழ்க்கையில் நான் வாங்கிய ஒவ்வொரு அடிகளும்...
என் வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாறி புதிய பாடத்தையே கற்றுதருகின்றன...........-தன்னம்பிக்கை
__________________________________________
இரும்பை விட பலமானது என் இதயம்...
எனக்குள் தன்னம்பிக்கை என்ற ஆயுதம் இருக்கும்வரை .-தன்னம்பிக்கை
__________________________________________
முயற்சிக்கு மிக அதிக சோதனைகள் வந்தால், நீ வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறாய் என்று அர்த்தம்!!!-தன்னம்பிக்கை
__________________________________________
வெற்றிகளும், சாதனைகளும் எங்கோ யாரோ செய்யும் ஒன்றல்ல.உங்கள் முயற்சி ஒன்றே போதும்,முடியாது என்று எதுவும் கிடையாது.-தன்னம்பிக்கை
__________________________________________
எல்லோரையும்  நம்புங்கள், துரோகம் பழகிரும்..! யாரையும் கண்டு கொள்ளாதீங்க, தன்னம்பிக்கை வளர்ந்திடும்.-தன்னம்பிக்கை
__________________________________________
இன்னல்கள் கூடி வந்து
இகழ்ந்து சிரித்தாலும்,
இறப்பு கண்முன்னே
இழிவாய் நின்றாலும்,
தோல்வி கண்டு பயம் வேண்டாம்
தோற்க பழகுவோம்..!!-தன்னம்பிக்கை
__________________________________________
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரையை துடைத்து காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இன்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இன்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!-தன்னம்பிக்கை
__________________________________________
லட்சிய கனவு நிறைவேறும், ஆனால் அதன் இடைவெளி தங்களின் இடைவிடாத உழைப்பு மற்றும் தியாகத்தை பொருத்தது. -தன்னம்பிக்கை
__________________________________________
செய்ய முடிந்தால் செய்துவிடு,
ஏன் என்றால் பேசுபவர்களே அதிகம்...
செய்பவர்கள் குறைவு இவ்வுலகிலே!!!!-தன்னம்பிக்கை
__________________________________________
தட்டிக்கொடுக்க யாரும்   இல்லை என் ஒடிந்துபோகதே...!!!  உற்சாகப்படுத்த எவரும்   இல்லை என ஓய்ந்து போகதே...!!!  உன்னால் முடிந்தால்   ஒருவனின் முயற்சியை  தட்டிக்கொடு, உற்சாகப்படுத்து...!!!  அவனின் உள்ளத்து மகிழ்ச்சியின்  சக்தியில் நீயும் உற்சாகமாவாய்...!!!  -தன்னம்பிக்கை
__________________________________________
தோற்றாலும் நம்பிக்கையோடு இரு.. ஆனால், யாரையும் நம்பி தோற்று  விடாதே. அதன்  வலி மரணத்தை விட கொடியது . -தன்னம்பிக்கை
__________________________________________
வாய்ப்புகள் வேகமாய் பறக்கும்,
வியர்வைகள் என்னை வளர்க்கும்,
இறுதியில் உழைப்பு மட்டுமே நிலைக்கும்......
தீவிரமாய் உழைப்போம்... வெற்றியை சுவைப்போம்!!!-தன்னம்பிக்கை

__________________________________________

Previous Post
Next Post

0 Comments: