செவ்வாய், 31 மே, 2022

தமிழ் கவிதைகள்

உன் திறமையில் தான்
ஒளிந்திருக்கிறது சந்தோஷம்...

உன்னுடைய ஆற்றல்களை
தடை போட்டு முடக்காதே...

இன்னோரு சந்தர்ப்பம்
இயற்கை தரப்போவதில்லை...

எண்ணங்களை செயல்படுத்த
இன்றே முயற்சிகளை எடு...

உறவில் உரிமையை
கொடுங்கள்....!!

வாழ்க்கையில் நம்பிக்கையை
கொடுங்கள்....!!

அன்பில் உண்மையை
கொடுங்கள்...!!

நட்பில் நேர்மையை
கொடுங்கள்....!!

சந்தோஷம் தானாக
அமையும்....

காலைநேர பூங்குயில் கவிதை பாட அழைக்கிறதே!!

காலைப்பனித்துளி  
புல் வெளியில்  
கோலம் போடுதே!!

வானம்பாடி  
பறவைகள் எல்லாம்கூட்டமாக செல்லுதே!

காலைக்கதிரவன் வாசல்வந்து கதவைத்தட்டி அழைக்கிறதே ! 

 சோம்பல்  
முறித்து சுறுச்சுறுப்பாய்,, எழுந்திருங்கள்!!!..


உயரிய 
எண்ணங்களும்

நல்ல 
சிந்தனைகளும் 
இல்லாமல் 

எத்தனை
ஆலயங்களுக்கு
சென்று 
வழிபட்டாலும் 

பரிகாரங்கள்
செய்தாலும்

படையல்கள்
போட்டாலும் 

பூசைகள் 
செய்தாலும் 

பாவங்களும் 
நீங்காது 

படைத்தவனும்
இரங்கமாட்டான்

கருப்பொருள் 
அறிக 

மனமது
செம்மையானால்

நடப்பதெல்லாம் 
நன்மையாகும்.


 *வாழ்க வளர்க வளமுடன்*


யாரும் கவிதை எழுதுவதில்லை..

கவிதையென்று 
ஏதோ எழுதுகிறார்கள்;
காலப்போக்கில் மெருகேறி 
கவிதையாகி விடுகிறது!

உயரத்தில் ஏறி நின்றால்
உலகமே உனக்கு தெரியும்,,
ஆனால்
உயர உயர வளர்ந்தால் மட்டுமே
உலகத்திற்கு நீ தெரிவாய்!!.. ☘️


உபசரிப்பில் மனைவி
அன்னை போல் ஆகிறாள்
பராமரிப்பில் கணவன்
தந்தை போலாகிறான 
வாழ்க்கை விளையாட்டில்
*வேசம் மாறினாலும்*
*பாசம்* *குறைவதில்லை*🟢🔴

🌴🌴🌴


*மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி* 

*பளபளப்பா வாழ்றத விட*

*நமக்கு பிடிச்ச மாதிரி*

*கலகலப்பா வாழனும்* 

*அதுதான் வாழ்க்கை😎*



உங்கள் பார்வை நல்லதாக இருந்தால் உலகம் அழகாகத் தெரியும்...*

*உங்கள் வார்த்தைகள் நல்லதாக இருந்தால்* *உலகத்திற்கு* 
*நீங்கள்* *அழகாக தெரிவீர்கள்...💐💐*

மனிதரின்
பலவீனம்
வீம்பு என்ற பிடிவாதம்

வீம்பு மனித இயல்பு
ஏமாற்றத்தின் வெளிப்பாடு

வீம்பு
தனிமைப்படுத்தி விடும்

உங்களது
நிம்மதி மகிழ்ச்சியைக் கெடுக்கும்

காலம் கடந்த ஞானோதயம்
வீம்பினால் ஏற்படும்
இழப்புகளை ஈடு செய்வதில்லை

*வேண்டாமே வீம்பு*

காலங்கள் இனியது....!

காத்திருப்பில் கரையும்
கண்களுக்குத் தெரியும்
காலத்தின் கடமையிலும்
கற்பனைகள் விரியும்..

பூத்திருப்பில் உலரும்
பூக்களுக்குத் தெரியும்
பூமியின் புல்வெளியில்
பூட்டிவைக்க முனையும்..

விடியல் வருமென
விழிகள் ஏங்கினால்
விடையும் தெரியா 
கேள்வியே பதிலாகும்..

பலவும் வாழ்வில்
பார்த்து வந்திடில்
பழகிய மனமும் 
வாழ்வின் புதிராகும்..

விட்டுக் கொடுப்பதில்
வித்தை ஏதுமில்லை
கற்றக் கொடுத்திட
கல்வியும் தேவையில்லை
தானம் தந்திட தனமும் பாரிலில்லை..
வானம் என்றும் தொடாத தூரமில்லை..

காத்திரு விழிகள் பூத்திரு
தோற்றிடு தினமும் வீழ்ந்திடு
வென்றிடு எங்கும் சென்றிடு
கற்றிடு வளங்கள் பெற்றிடு
இதுவே உலகின் ஆரம்பம்
இனிதாம் வாழ்வின் ஆனந்தம்..

பிரச்சினை
கவுண்டமணியாக இருந்தால்
வாழ்க்கை எதிர்பாராத
நேரத்தில் அடி வாங்கும்
செந்திலாகத் தான் பயணிக்கிறது

தவறான பாதைகள் மிகவும்..
அழகானதாகவும்

சரியான பாதைகள் கொஞ்சம்
கரடுமுரடானதாகவே இருக்கும்..

நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது

அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்


தனக்கு உபயோகபடுமென்றே அடுத்தவனுக்கு உபகாரம் செய்கின்றான்...

அதற்கு பெயர் பரிகாரம் என்கின்றான்...

பரிகாரம் என்பது அதுவல்ல
நாம் செய்த பாவங்கள் நாமே உணர்வதே மிகச்சிறந்த பரிகாரமாகும்....


முயற்சி செய்வதில்
தாமதம் காட்டாதே..

முயற்சி செய்வதால்
ஒரு நாளும் 
வீணாகுவது இல்லை!

பெண் மயில் தோகை
விறிக்கிறது..

சிக்கிக்கொண்டவன்
யாரோ..?

#நீ_கவிதைகளாய்...!
_______________

கதவுகளின் ஓரம்
தாழுக்கும் வெட்கம்
அவளுக்கும் தான்.....

மேலும்
கீழும்
தாழ்ப்பாளின்
ஏக்கங்கள்....!

சிதறிய மல்லிகையில்
அவள் விரல் படாத
வாசனை....!

தழும்பிய
பால் செம்பில்
இனிப்புடன்
காமத்துப்பால்
காமத்திற்கு
காமம் ஊட்ட...!

அவளுக்கு
அவனும்
அனைத்திற்கும்
அவனும்...!

சொட்டிவிடாத
தேனை
தேடுகிறான்
இதழில்
மச்சமிட்ட காரணத்தினால்
கண்பட்டது
முழுதாய்.....!

இருளுக்கு
என்ன தெரியும்
இவன்
இனி அறியும்
இருட்சுவைகளை....!

மேடு
பள்ளங்களில்
ஆற்று வெள்ளமாய்
ஆசை
கரை தேடி
சிறு கடி மட்டுமே மிச்சம்....
விரல்களுக்கு

அறுசுவைகளை
கண்டுவிட்ட அவனுக்கு
எழாம் சுவைக்கு
பெயர் தெரியவில்லை....
நாவோடு
சிறு சுவையரங்கம்....


உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு

யாரையும் 
நுகராமல் 

ரசிப்பதிலேயே 
நகர்கிறது...

இந்த 
தனிமை....


நினைவுகளில் 
நெருங்கியே இருக்கிறார்கள்,

நிஜங்களில் 
யாரோவாய் போனவர்கள்....


சொற்ப ஆசைகளில் 
தொலைந்து போகின்றன...

நிறைவாய் இருக்க வேண்டிய நிம்"மதி"கள்...!!

எதிர்ப்பது என 
முடிவெடுத்த பின்,

எதிரில் நிற்பது,
 
எவனா இருந்தால் என்னா..

எமனா இருந்தால் என்னா....


தடைகள் என்பது தற்காலிகமானது

அதை தகர்க்கும் மனம் 
என்றும் நிரந்தரமானது.......!!


தூரமாக 
நினைக்காதே..

அது உன்னாலும் முடியாது 
என்னாலும் முடியாது..

புரியுதா?

💜 காதலோடு 💜

ஒரு தவறை மன்னிப்பது
விஷயமல்ல..

ஆனால் அந்தத் தவறு
திருத்தப்பட்டால் தான்..

மன்னிப்பிற்கு ஒரு அர்த்தம் இருக்கும்!

🌸🌸🌸


முடங்கிக் கிடக்கும்  
பறவைக்கு..

சிறை கதவுகள் 
திறந்து இருந்தாலென்ன..

மூடி இருந்தாலென்ன!!


மேகத்திரையில் 
விசித்திரம் !?

மின்னல்கள் ரெண்டு
இடமாறுகிறது..

அவள் கண்கள்!

😍😍


நம் உதட்டில் இருக்கும் 
சிரிப்பின் மதிப்பை விட ....

நம்மால் மற்றவரின் உதட்டில் இருக்கும் சிரிப்பு விலை மதிப்பற்றது ...

சிரிக்க வையுங்கள் 
ஏழையின் சிரிப்பில் 
இறைவனை காண்போம் ...


எத்தனை கவிஞர்களுக்கு இந்த வெண்மதி காதலியாக இருக்கிறாள் என்று தெரியவில்லை!

அவள் ❤️


இரவு வரைந்த ஓவியமே
வெண்ணிலவை மிஞ்சும் காவியமே
கருமையான காரிருள் கூட கலையாகுமே
பெண்ணே உந்தன் பார்வையால்..


மலரே...
மார்கழிமாத மாக்கோலம்
உன்வாசல் எங்கும் பூ கோலம்...

எனக்குள்
மணக்கோலம் போட்டு...

காத்திருக்கிறேன்
உன்னை நினைத்து...

நீ வாசலில் வைத்த
பூசணி பூ வாடிவிடுமடி...

உன்னை சுமக்கும் என்
இதயத்தை நீ வாட வைப்பது ஏனடி...

உன்னாலே மாகோலம்
போடா கற்று கொண்டேன்...

உன் மனதில்
குடியேற
வழி சொல்லடி...

மாக்கோலத்தில் விழுந்த
சில
மழைதுளிக்காக வருந்துகிறாய்...

உன்னை நினைத்து தினம்
தினம் வெந்நீரில் நனையும்...

என் இதயத்தை நீ
எப்போது உணர்வாய் கண்ணே...
நான் காத்திருக்கிறேன்
நீயும் வந்துவிடடி என்னருகில்.....

பணமா பாசமான்னு கேட்டா எல்லோரும் பாசமுன்னு தான் சொல்லுவாங்க.....

ஆனால்....

அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்......!!


உப்புமா சமைப்பது ஒரு பாவச்செயல்..

உப்புமா சமைப்பது பெருங்குற்றம்..

உப்புமா சமைப்பது ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!

😭💔💔🚶🚶

அனுதினமும்
உன் நினைவு நெரிசலுக்குள்
சிக்கி பிழைக்கிறது..

என் காதல் ! 

❤️❤️


உன்னோடு இருந்த நினைவுகளோடு
வாழ்கிறேன் நானடி !
உன் இருவிழி காண
விரும்பினேன் நானடி !!
உன் சிரிப்பினில்
சிதைந்தவன் நானடி !!!
உன் பிரிவினில்
கறைந்தவன் நானடி.


என்னழகே...

வரலாற்றை
புரட்டி பார்த்தேன்...

பலரின் ரத்தத்தில் உருவான
வரலாறு மன்னரின் வரலாறு...

காதலை
புரட்டி பார்த்தேன்...

பலரின் கல்லறையும்
கண்ணீரும் கலந்த வரலாறு...

கண்ணீரையும் வரவேற்க தினம்
பூத்து கொண்டுதான் இருக்கிறது...

காதல்
மலர் பலரின் இதயத்தில்...

உன் மீதான காதல்
எனக்குள்ளும் பூத்தது...

என் காதல் பூத்து
குலுங்கும்
நந்தவனமா இல்லை...

கண்ணீர்
கலந்த வரலாறா...

நீ சொல்லும்
வார்த்தையில் தானடி உள்ளது...

என்
காதலின் வரலாறு.....

தனிமையை போக்கிக்கொள்ள மற்றவர்களை பயன்படுத்தாதே..

தனிமையே ஆகச் சிறந்த துணை தான்! 


இப்போதெல்லாம் அடக்கத்தை விட ஆரவாரத்திற்கே அதிகம் மதிப்பும் மரியாதையும்..

சத்தம் இன்றி இருந்தால் சமுத்திரத்தை கூட குட்டை என்று சொல்லும் உலகம் இது!

😢😢😢
Previous Post
Next Post

0 Comments: