திங்கள், 19 செப்டம்பர், 2022

சாணக்கியர் பொன்மொழிகள்

சாணக்கியர் பொன்மொழிகள் (தமிழ் Quotes)
SANAKIYAN QUOTES IN TAMIL


சாணக்கியர் பொன்மொழிகள் (தமிழ் Quotes) – Sanakiyan Quotes In Tamil: சாணக்கியர் உரைத்த இந்த வெற்றிக்கான வரிகள் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற உதவியாக அமையும்.

சாணக்கியர் பொன்மொழிகள் (தமிழ் Quotes)
காமத்தை விட கொடிய
நோய் இல்லை..
அறியாமையை விட
கொடிய எதிரி இல்லை..
கோவத்தை விட கொடிய
நெருப்பு இல்லை.

அனைத்து உறவுகளுக்கு
பின்னாலும் ஒரு சுயநலம்
இருக்கிறது.. சுயநலங்கள்
இல்லாத உறவு இல்லை..
இது ஒரு மிகவும்
கசப்பான உண்மை.

ஒரு காரியம்
நிறைவேறும் வரை
ஒரு உண்மையான அறிவாளி
வெளியில் சொல்ல மாட்டான்.

மற்றவர்களின் தவறுகளில்
இருந்து பாடம்
கற்றுக் கொள்ளுங்கள்..
அந்தத் தவறுகள் அனைத்தையும்
செய்வதற்கு உங்களுக்கு
ஒரு யுகம் போதாது.

ஒருவர் மிக நேர்மையாக
இருக்க கூடாது.. நேரான
மரங்களே முதலில்
வெட்டப்படுகின்றன..
நேர்மையான மனிதர்களே
அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.

ஒரு பாம்பு விஷம்
இல்லாததாக இருக்கலாம்..
ஆனால் அது வாழ்வதற்காக
விஷம் உள்ளதாக
நடித்தாக வேண்டும்.


உலகின் மிகப் பெரிய
சக்தி ஒருவரின்
இளமையே..!

ஒவ்வொரு நட்புக்கு
பின்னாலும் கொஞ்சம்
சுயநலம் இருக்க தான்
செய்கின்றது. சுயநலம்
அற்ற நட்பு
என்பதே கிடையாது
என்பதே உண்மை.

பயம் எனும் கொடிய நோய்
உங்களை அணுகும் போதே
ஆரம்பத்திலே தாக்கி
அழித்து விடுங்கள்.

பார்வை இல்லாதவனுக்கு
ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடி எவ்வளவு
பயனுள்ளதோ..
அது போன்றதே ஒரு
முட்டாளுக்குப் புத்தங்கள்.

ஒரு மனிதனுக்கு
துணிச்சலைப் போல
உண்மையான நண்பன்
இந்த உலகில்
வேறு யாருமில்லை.


ஒரு மலரின் மணம்
காற்றின் திசைவழி
மட்டுமே செல்லும்
ஒரு நல்ல மனிதனின்
நல்ல குணங்கள்
அனைத்து திசைகளுக்கும்
செல்லும்.

சந்தனம் துண்டு துண்டாக
ஆனாலும் அதன் மணம்
மாறாது.. அது போன்று
தான் நல்ல மனிதர்களின்
குணம் வறுமை
வந்தாலும் மாறாது.

நல்ல குடும்பத்தில்
பிறந்தாலும்.. நல்ல
வசதிகள் இருந்தாலும்..
கல்வி கற்காவிடின் ஒருவன்
வாசனையற்ற மலரை
போன்று ஆகின்றான்.

அறியாமை ஒரு மனிதனை
வீணாக்கும்.. பயிற்சி
செய்யாவிடின் நாம்
கற்றுக் கொண்ட கல்வி
வீணாகிவிடும்.

கல்வி கற்க விரும்பாதவன்..
நல்ல குணங்கள் இல்லாதவன்..
அறிவை நாடாதவன்
ஆகியவர்கள் இந்த பூமியில்
வாழும் அற்ப மனிதர்கள்..
அவர்கள் பூமிக்கு பாரம்.

அறிவாளி தனக்கு
ஏற்படும் அவமானங்களையும்..
தன் மன விரக்தியையும்..
தன் மனைவியின்
குணங்களையும்.. பிறரால்
ஏற்படும் கடும் சொற்களையும்
வெளியில் சொல்ல மாட்டான்.

சிங்கம் எந்த ஒரு
விடயத்தையும் உடனடியாக
செய்யாது.. நன்றாக
ஆலோசனை செய்த பிறகு
மன உறுதியுடன் செயல்படும்.


அறிவுள்ளவன் தன்
குழந்தைகளுக்கு சகல
வித்தைகளையும் பயிலும்
வாய்ப்பை தேடித் தருவான்.

ஒருவன் தன் கஷ்ட
காலத்திற்கு தேவையான
பணத்தை முன்பே
சேமிக்க வேண்டும்.

தீய செயல்களை
செய்து கொண்டு
யுக கணக்கில் வாழ்வதை
விட்டு விட்டு..
நல்ல செயல்களை
செய்து கொண்டு
சில நொடிகள்
வாழ்வது சிறந்தது.

அனைத்து செயல்களிலும்
உங்கள் கொள்கைகளில்
பிடிவாதமாக இருக்காதீர்கள்..
வளைந்து கொடுத்து
வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Previous Post
Next Post

0 Comments: