புதன், 21 செப்டம்பர், 2022

காந்தியின் அகிம்சை கட்டுரை

காந்தியின் அகிம்சை கட்டுரை
GANDHIYIN AHIMSA KATTURAI IN TAMIL


இந்த பதிவில் இந்தியாவின் தேசபிதா ஆகிய “காந்தியின் அகிம்சை கட்டுரை” பதிவை காணலாம்.

உயர்ந்த மனிதர்களுள் காந்தியடிகளும் ஒருவர். இந்தியாவில் வாழ்ந்த மகான்களில் முதன்மையானவராக மதிக்கப்படுபவர்.

காந்தியின் அகிம்சை கட்டுரை
காந்தியின் அகிம்சை கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
மகாத்மா காந்தியின் இளமைக்காலம்
மகாத்மா காந்திய ஆற்றிய சேவைகள்
மகாத்மா கடைப்பிடித்த கொள்கைகள்
காந்தியின் இறப்பு
முடிவுரை

முன்னுரை

மனிதர்கள் தாம் வாழும் நாட்களில் மற்றவர்களிற்கு அளித்த சேவைகளும் அவர்களின் நேர்மையான வாழ்க்கை முறையுமே இறந்த பின்னும் அவர்களின் புகழை பேசவைக்கும்.

அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் காந்தியடிகளும் ஒருவர். இந்தியாவில் வாழ்ந்த மகான்களில் முதன்மையானவராக மதிக்கப்படுபவர்.

அவருடைய வரலாறு மற்றும் அவர் தன்வாழ்வில் கடைப்பிடித்த கொள்கைகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவது சமாதானமான உலகை கட்டியெழுப்ப உதவும்.

மகாத்மா காந்தியின் இளமைக்காலம்
இந்தியாவின் குஐராத் மாநிலத்தில் போர்ப்பந்தர் எனும் கிராமத்தில் 1869ம் ஆண்டு புரட்டாதி மாதம் இரண்டாம் திகதி பிறந்த காந்திக்கு அவரது பெற்றோர்கள் மோகனதாஸ் காந்தி என்ற பெயரை இட்டனர்.

பாடசாலைக் காலத்தில் நேர்மையான நற்குணங்கள் மிக்க மாணவனாக விளங்கிய இவர், தனது பதினெட்டாவது வயதில் கல்வி கற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றார். பின்பு நாட்டிற்கு திரும்பி வழக்கறிஞராக கடமையாற்றினார்.

மகாத்மா காந்தி ஆற்றிய சேவைகள்

மகாத்மா காந்தி இந்திய நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய சேவை காரணமாகவே அவர் அனைவராலும் நினைவு கூரப்படுகின்றார். இவர் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த போது ஆங்கிலேயர்கள் நிறவெறி மிக்கவர்களாக பாகுபாடு காட்டுவதை உணர்ந்து மிகுந்த வேதனை அடைந்தார்.

அதுவரை சாதாரண மனிதனாக வாழ்ந்த காந்தியடிகளை அரசியலில் ஈடுபாடு கொண்டவராக அச்சந்தர்ப்பங்கள் மாற்றின. இதை தனது சுயசரிதையாகிய சத்தியசோதனையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாட்டை மீட்க அகிம்சை வழியில் போராடினார். உப்பு வரியை நீக்க மேற்கொண்ட உப்பு சத்தியாக்கிரகம் இந்திய விடுதலை பேராட்டத்திற்கு ஆணிவேராக அமைந்தது.

வெள்ளையனே வெளியேறு என்ற ஆங்கிலேய அரசிற்கு எதிரான போரட்டத்தில் முன்னிலை வகித்து பல்வேறு உண்ணாவிரதப் போரட்டங்களை நடாத்தி இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்.

காந்தி கடைப்பிடித்த கொள்கைகள்
காந்தி சிறுவயதிலிருந்தே பல்வேறு நூல்களை கற்றுத்தேர்ந்து அவற்றின்படி வாழ்வதை கொள்கையாக கொண்டிருந்தார். பகவத் கீதை மற்றும் பிறநூல்களை வாசித்த அவர் அகிம்சையை கடைப்பிடித்தார்.


மற்றவர்களை புண்படுத்தாமல் சாத்மீக ரீதியில் செயற்படுவதை தனது வாழ்நாள் கொள்கையாக கடைப்பிடித்தார்.

உயிர்களை கொல்லாமையை வலியுத்திய அவர் சிறுவயதில் அசைவ உணவை உண்ணுபவராக இருந்தாலும் பின்பு பழங்கள், தானியங்கள் போன்ற சைவ உணவையே உண்டார்.

மேல்நாட்டு ஆடைகளை உடுத்துவதை விடுத்து உள்நாட்டு நெசவாளர்களால் நெய்யப்படும் கதர் ஆடைகளையே உடுத்தினார். அதுமட்டுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் வாய்மை பேசுவதையே பழக்கமாக வைத்திருந்தார்.

காந்தியின் இறப்பு
ஆயுதங்கள் கொண்டு எம்மை அழிக்க நினைத்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகிம்சையை கொண்டு வென்றவர் காந்தியடிகள். அதனையே மக்களிற்கும் போதித்தார்.

வன்முறை இன்றி செயற்பட மக்களிற்கு அறிவுறுத்திய இவர் இரத்தம் சிந்தாமல் போரட்டத்தை மேற்கொள்ள அரும்பாடுபட்டு செயற்பட்டார்.

தேசபிதா என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட காந்தியடிகள் 1948ம் ஆண்டு நாதுராம் கோட்சேவால் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார். மொத்த இந்தியாவும் துயரத்தில் ஆழ்ந்த நாள் இதுவாகும்.

முடிவுரை
இன்று எங்கு பார்த்தாலும் சண்டை சச்சரவுகளும், கலவரங்களும் கருத்துமுரண்பாடுகளுமே மிகுந்து காணப்படுகின்றன. மனிதர்கள் கோபம், வெறுப்புணர்வு, பொறாமை போன்றவற்றை வளர்த்து எதிரிகளாக வாழ்கின்றனர்.

இந்தியாவில் மனிதர்களிடையே மத, மொழி, கலாசார சகிப்புத்தன்மை குறைவடைந்து வருவதைக் காணலாம். மக்கள் இந்நிலைமையில் இருந்து மீளெழ காந்தியக் கொள்கைகளை போதித்து காந்திய தேசமாக இந்தியாவை மாற்றுவது அவசியமாகும்.


Previous Post
Next Post

0 Comments: