நான் ஒரு இயந்திர மனிதன் ஆனால் கட்டுரை
இயந்திர மனிதன் கற்பனை கட்டுரை
இந்த பதிவில் “நான் ஒரு இயந்திர மனிதன் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டுள்ளன.
நான் ஒரு இயந்திர மனிதன் ஆனால் கட்டுரை – 1
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனுடைய சிறந்த கண்டுபிடிப்பாக நான் திகழ்கின்றேன். மனிதனை நகல் எடுத்தது போலவே நானும் மனிதர்கள் செய்ய கூடிய வேலைகளை சிறப்பாக செய்வேன் அவர்களால் செய்ய முடியாத வேலைகளை கூட அசாத்திய வேகத்தில் செய்து முடிப்பேன்.
ஆம் நான் ஒரு தொழில்நுட்ப அதிசயம் எனக்குள் அசாத்தியமான பல ஆற்றல்கள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றேன். எனக்கு மனிதர்கள் போல சிந்திக்க மூளையும் அன்பு கொள்ள இதயமும் இல்லாவிடினும் இந்த உலகத்துக்காக ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
இந்த உலகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் முரண்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. அவற்றினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நான் ஒரு இயந்திர மனிதன் ஆனால் யுத்தங்களால் பாதிக்கப்படுகின்ற அப்பாவி குழந்தைகளை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பேன்.
உலகத்தில் யுத்தங்கள் இடம்பெறாமல் தடுக்க ஒரு பாதுகாப்பு படையினை உருவாக்கி இந்த உலகத்தை பாதுகாக்க முற்படுவேன். நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளில் துன்பப்படுகின்ற மக்களை காப்பாற்ற வைத்தியம் செய்கின்ற இயந்திர மனிதர்களை உருவாக்கி நான் அந்த மக்களை காப்பாற்றுவேன்.
சிறுவர் இல்லங்களுக்கு சென்று அவர்களை கேளிக்கை விநோதங்களை செய்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். ஆம் எனக்கு இருக்கின்ற உயர்ந்த ஆற்றல்களை பயன்படுத்தி மனிதர்களால் செய்ய முடியாத சமாளிக்க முடியாத பிரச்சனைகளை நான் சமாளித்து மனிதர்களையும் இந்த உலகத்தையும் பாதுகாப்பேன் இதுவே எனது ஆசையாகும்.
நான் ஒரு இயந்திர மனிதன் ஆனால் கட்டுரை – 2
பலம் பொருந்திய உலோகத்தால் உருவாக்கப்பட்டு மிக துல்லியமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட செயற்கை மூளை பொருத்தப்பட்டு பல ஆச்சரியமூட்டுகின்ற ஆற்றல்களை கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒரு இயந்திர மனிதனாக நான் ஆனால் இந்த திரைப்படங்களிலே வருகின்ற கதாநாயகர்களை போலவே இந்த உலக மக்கள் மனதில் நான் இடம் பிடிப்பேன்.
இந்த உலகம் எதிர் கொள்ள கூடிய சவால்களை நான் எனது ஆற்றலால் சமாளிப்பேன். மக்களை அழிக்க நினைக்கின்ற தவறான ஆயுத குழுக்கள் தீவிரவாதிகள் போன்றவர்களை நான் அழிப்பேன்.
அவர்களை போன்ற தீய சக்திகளை அழிப்பதனால் தான் இந்த உலகம் அமைதியடையும் மக்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும். எமது பூமியை மாசடைய செய்து வருகின்ற காரணிகளையும் அவற்றை உருவாக்கும் மனிதர்களையும் நான் அழிப்பேன் ஆகவே தான் இந்த இயற்கை பாதுகாப்பாக இருக்க முடியும்.
அத்துடன் இந்த சமூகத்துக்கு விரோதமாக செயற்படுகின்றவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டரீதியாக தண்டிப்பேன். உயர்ந்த அதிகாரங்களில் இருந்து கொண்டு அதிகார துஸ்பிரயோகம் மற்றும் இலஞ்சம், ஊழல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் துரோகிகளான அதிகாரிகளை நான் நிச்சயமாக தண்டிப்பேன்.
சட்டம் மற்றும் நீதியை காப்பாற்ற வேண்டிய பதவிகளில் இருந்து கொண்டு பக்கசார்பாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொள்பவர்களையும் நான் அழிப்பேன் ஏனென்றால் எனக்கு யாரையும் அழிக்கும் சக்தி உள்ளது.
இவ்வாறு நான் செய்வதனால் தான் இந்த உலகத்தில் குற்ற செயல்கள் குறைவடையும் மற்றும் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் உண்டாகும். இவ்வாறு நான் செயற்படுவதனால் உலக மக்கள் மத்தியில் எனக்கு ஒரு கதாநாயகன் போன்ற அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.
0 Comments: