திங்கள், 26 செப்டம்பர், 2022

குடி குடியை கெடுக்கும் கட்டுரை

குடி குடியை கெடுக்கும் கட்டுரை
KUDI KUDIYAI KEDUKKUM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “குடி குடியை கெடுக்கும் கட்டுரை” பதிவை காணலாம்.

மதுபழக்கம் ஒருவரது நல்வாழ்வை சீரழித்து சிந்திக்கும் திறனை சிதைத்து தவறான பாதையில் அந்த நபரை இட்டு செல்ல வழிவகுக்கின்றது.

இன்று மதுப்பழக்கம் ஒரு நாகரிகமாக பார்க்கப்படுவது வேதனை தருவதாக இருக்கின்றது.

Table of Contents
குடி குடியை கெடுக்கும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
மது பழக்கமும் சமூக சீர்கேடும்
இளந்தலைமுறையினரும் மதுப்பாவனையும்
உடல் நலக்கேடுகள்
குடும்ப உறவுகளை சிதைக்கும் மதுபழக்கம்
குற்ற செயல்கள்
முடிவுரை
குடி குடியை கெடுக்கும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
மதுபழக்கமும் சமூக சீர்கேடும்
இளந்தலைமுறையினரும் மது கலாச்சாரமும்
உடல் நலகேடுகள்
குடும்ப உறவுகளை சிதைக்கும் மதுப்பழக்கம்
குற்ற செயல்கள்
முடிவுரை
முன்னுரை
“குடி குடியை கெடுக்கும்” என்று கூறுவார்கள் அதாவது மது பழக்கம் உயிரை குடிப்பதோடு அவர்களை சார்ந்தவர்களது வாழ்வையும் நாசமாக்கிவிடும் என்பது கருத்தாகும்.


பார்க்கின்ற இடமெல்லாம் “மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு” என்று எச்சரிப்பையும் உச்சரிப்பையும் காணலாம் ஆனால் மது பழக்கம் நமது சமூகத்தில் குறைவதாய் இல்லை அதிகரித்தவாறே செல்கின்றது.

அரசுகளோ அவற்றை தடை செய்வதாய் இல்லை மது பழக்கம் வாழ்வையே அழிக்கும் என்பதனை அறிந்தும் எமது சமூகம் அதற்கு அடிமையாகிதான் இருக்கிறது.

இக்கட்டுரை மதுப்பாவனையால் ஏற்படும் பிரச்சனைகள் அது தொடர்பான விழிப்புணர்வுகள் தொடர்பாக நோக்குகிறது.

மது பழக்கமும் சமூக சீர்கேடும்
எமது தமிழ் சமுதாயம் வாழ்க்கையில் ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற ஓர் உயரிய விழுமியத்தின் வழி வந்ததாகும். முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக மது அருந்துதலை பார்த்தனர்.

ஒரு சமூகத்தில் மது அருந்துபவர் அருவருக்கப்பட்டு ஒதுக்கப்படுவார். ஒழுக்கம் தவறியவராக பார்க்கப்படுவார் ஆனால் இன்று நிலமை தலை கீழாக மாறிவிட்டது. மேற்கத்தைய கலாச்சார தாக்கம் இன்று சிறுவர்கள் பெண்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கி விட்டது.

இது ஒரு மாபெரும் ஒழுக்க சீர்கேட்டு பிறழ்வு என்று கூறலாம். மதுபாவனை இல்லாது இருக்கும் இளைஞர்களே அருகிவிட்டனர்.

மதுபழக்கம் ஒருவரது நல்வாழ்வை சீரழித்து சிந்திக்கும் திறனை சிதைத்து தவறான பாதையில் அந்த நபரை இட்டு செல்ல வழிவகுக்கின்றது. இது தொடர்பாக எமது சமூகம் பல எதிர்ப்புக்களை செய்தாலும் பயனேதுமில்லை.

இளந்தலைமுறையினரும் மதுப்பாவனையும்

“இளம் கன்று பயமறியாது” என்று கூறுவார்கள் அது போல எதிர்காலத்தில் அந்த தேசங்களை அலங்கரிக்க போகும் இளைஞர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகுவதனால் அவர்களது கல்வி சிதைக்கப்பட்டு அவர்களது கனவுகள் மண்ணோடு மண்ணாக்கப்படுகின்றன.

இவர்களை சமூக விரோதிகளாக மாற்றிய பெருமை மதுவையே சாரும் இவ்வாறு தமது இளம்பராயத்தில் தவறான சகபாடிகளோடு சேர்ந்து தவறான வழியில் செல்வதனால் அவர்களது குடும்பம் மற்றும் உறவினர்கள் மிகுந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இந்த நிலை எம்முடைய தேசங்களின் பெரும் சாபக்கேடாக உள்ளது.

உடல் நலக்கேடுகள்
இந்த மனித வாழ்க்கை எவ்வளவு அழகானது. அன்பான குடும்பம் நல்ல நண்பர்கள் சக மனிதர்கள் என விரிந்து செல்லும் மனித வாழ்க்கை ஒரு அபூர்வம் அதோடு இந்த இளமை பராயம் வானவில்லை போன்றது மிகவும் இளம் வயதில் மகிழ்வாக குடும்பங்களோடு வாழ்வது வரம் என்றே கூறலாம்.

தானும் தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்வாக வைத்திருப்பது ஒவ்வொரு ஆணுடைய கடமையாகும்.


ஆனால் மதுவுக்கு அடிமையாகி இளைஞர்கள் சிறிய பராயத்தில் இரத்த அழுத்தம், கொலாஸ்ட்ரோல், நீரிழிவு, சிறுநீரக நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், கேன்சர், இதய நோய் என பல வகையான நோய்களுக்கு ஆளாகி தன்னுடைய ஆரோக்கியத்தை தானே கெடுத்து கொண்டு தனது குடும்பத்தையும் வேதனை அடைய செய்கின்றனர். இது பல குடும்பங்களின் சாபமாகும்.

குடும்ப உறவுகளை சிதைக்கும் மதுபழக்கம்
குடும்ப உறவுகளை போல பெறுமதியான விடயம் இந்த உலகில் வேறொன்றுமில்லை. ஆனால் மதுவுக்கு அடிமையானவர்கள் வீட்டில் தினமும் சண்டை சச்சரவு பிரச்சனைகள் தோன்றுவதால் குடும்ப உறவுகளிடையே விரிசல் உருவாகும்.

அன்பு பாசத்துக்கு பதிலாக வெறுப்பும் வேதனையும் தோன்ற இது காரணமாக உள்ளது. குடும்பங்களில் தோன்றும் இவ்வகை பிரச்சனைகள் வறுமை, கடன் போன்றவற்றை உருவாக்கி குழந்தைகளின் கல்வி எதிர்காலம் என்பவற்றையும் பாழாக்கிவிடும்.

குற்ற செயல்கள்
நாட்டில் இடம்பெறும் அதிகளவான குற்ற செயல்களுக்கு மதுப்பாவனையே காரணமாகும். மது மனித உடலின் குருதியோட்டத்தை விரைவுபடுத்துவதனால் உண்டாகும் போதையும் வேகமும் கொலை, கொள்ளை, வன்முறைகள், விபத்து போன்ற குற்றங்கள் இடம்பெற காரணமாக உள்ளது.

மனிதன் தனது நிதானத்தை இழப்பதால் மிருகத்தனமாக மாறுகின்றான். மது அருந்தி விட்டு வாகனம் செலுத்துவதனால் வீதி விபத்துக்கள் ஏற்பட்டு அதிக மரணங்கள் சம்பவிக்கின்றன.

நாட்டின் உயர் அதிகாரிகள், பொலிஸ், ஆசிரியர்கள் போன்றவர்கள் கூட மதுப்பாவனை உடையவர்களாக இருப்பதனால் தான் நாட்டில் அதிக ஊழல், லஞ்சம் போன்ற பிரச்சனைகள் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது.

முடிவுரை
இன்றைய சமுதாயத்தில் இந்தளவிற்கு வன்முறைகள், தீயகுணங்கள், தவறான செயல்கள் மலிந்து செல்வதற்கு முக்கிய காரணமாக மது பழக்கம் காணப்படுகிறது.

இன்றைக்கு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மதுபானம் மாறிவிட்டது. இது ஒரு அழிவின் ஆரம்பம் என்று கூறலாம்.

இந்த முட்டாள் தனமான போதை பழக்கத்துக்கு அடிமையாகாகமல் என்று எமது சமுதாயம் விடுபடுகின்றதோ அன்றே எமக்கு சுதந்திரம் சாத்தியமாகும்.

மது குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் தீங்கு விளைவிப்பதனால் இதனை எமது சமுதாயத்தில் இருந்து இல்லாதொழிக்க வேண்டும்.

Previous Post
Next Post

0 Comments: