வெள்ளி, 30 செப்டம்பர், 2022

செப்பேடுகள் என்றால் என்ன

செப்பேடுகள் என்றால் என்ன
SEPPEDUGAL IN TAMIL

அரசர்கள் அவர்கள் காலத்தில் நடந்த நில தானங்கள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் பதிக்கும் முறையை கையாண்டனர்.

இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு உதவும் தொல்லியல் சான்றுகளாக காணப்படுகின்றது.

Table of Contents
செப்பேடுகள் என்றால் என்ன
செப்பேடுகளின் சிறப்பு
செப்பேடுகளின் அமைப்பு
செப்பேடுகள் என்றால் என்ன
செப்பேடுகள் என்பது பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புக்கள், மரபுவழி கதைகள் போன்ற நிகழ்வுகளை பதிந்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உலோக தகடுகள் ஆகும்.

கல்வெட்டுகளில் பதியப்படும் சில செய்திகள் செப்பேடுகளிலும் பதியப்பெற்று தானம் பெறுபவனுக்கு வழங்கப்படும். அவை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படுவதில்லை.

செப்பேடுகளின் சிறப்பு
செப்பேடுகளில் காணப்படும் செய்தி கவித்துவமாக அமைந்திருக்கும்.
இரு மொழி கையாளப்படும். அதாவது முதல் பகுதி சமஸ்கிருதத்திலும், இரண்டாம் பகுதி தமிழிலும் அமைந்திருக்கும்.
தானம் கொடுத்த அரசன் பெயர், தானம் கேட்டு விண்ணப்பித்தவன் பெயர், சாட்சிகள், செய்தியை கவிதை வடிவமாக சொன்ன புலவர், அதை பொறித்த ஆசாரி போன்ற செய்திகள் செப்பேட்டில் காணப்படும்.
பிற்காலத்தில் நில தானம் பெற்றவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இச்செப்பேட்டை காட்டி ஊர் சபையினரிடம் தீர்வு காண முடியும்.
செப்பேடுகளின் அமைப்பு

செப்பேடுகள் ஒரு முனையில் துளையிட்டு அதில் மிகப்பெரிய வளையத்தின் மூலம் பிற இதழ்களை இணைத்திருப்பர். அதன் முகப்பானது வட்ட வடிவில் அரச முத்தரையை தாங்கி இருக்கும்.

தமிழகத்தில் ஏறக்குறைய 250 செப்பேடுகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்டு இதுவரை 19 செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 13 செப்பேடுகளின்  காலத்தையும், வெளியிட்ட அரசரின் பெயர் போன்ற செய்திகளை நோக்குவோம்.

முதலாம் பராந்தகன்
சோழர்கள் செப்பேடுகளில் காலத்தால் மிகவும் மூத்தது உதயேந்திரம் செப்பேடு ஆகும். இது கி.பி 1850 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள உதயேந்திரம் எனும் ஊரின் சௌந்தரராஜபெருமாள் கோவில் தர்மாகர்த்தாவிடம் இச்செப்பேடு தொகுதிகள் இருந்தது. இச்செப்பேடு இரண்டு இதழ்களை கொண்டவை.

முதலாம் பராந்தகன்
வேளச்சேரி செப்பேடு கி.பி 932 காலத்துக்குரியது. இது வேளச்சேரி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாகலாபுரம் வரையிலான ஆட்சித் தகவல்களை கொண்டுள்ளது. இச்செப்பேடு  ஐந்து இதழ்களை கொண்டவை.

இரண்டாம் பராந்தகன்
இரண்டாம் பரந்தகன் உடைய அன்பில் செப்பேடு கி.பி 961 காலத்திற்கு உரியது. அன்பில் செப்பேடு திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ளது. இச்செப்பேடு  பதினாறு இதழ்களை கொண்டவை.

இரண்டாம் பராந்தகன்
பள்ளன் கோவில் சாப்பாடு கி.பி 970 ஆம் ஆண்டுக்குரியது. இது பள்ளன் கோயில், நாகை மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி  பற்றிய தகவல்களை உடையது.

உத்தம சோழன்
மெட்ராஸ் மியூசியம் செப்பேடு கி.பி 985 ஆண்டுக்குரியது. இது மெட்ராஸ் மியூசியத்திற்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கேயே இருந்த காரணத்தால் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில் ஐந்து இதழ்கள் மட்டுமே உள்ளன. இதன் முன்னும்,  பின்னும் காணப்பட்ட சில இதழ்கள் கிடைக்கப்பெறவில்லை.

முதலாம் இராஜராஜன்

திருச்செங்கோடு செப்பேடு கி.பி 990 ஆண்டுக்குரியது. இது திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இது இரண்டு இதழ்களை கொண்டது.

முதலாம் இராஜராஜன்
கி.பி 995 ஆண்டுக்குரிய திருச்செங்கோடு செப்பேடானது இரண்டு இதழ்களை கொண்டது.

முதலாம் இராஜராஜன்
கி.பி 1006 ஆண்டுக்குரிய ஆனைமங்கலம் செப்பேடானது, ஆனைமங்கலம் நாகை மாவட்டத்தில் உள்ளது. இது 21 இதழ்களை கொண்டது தற்போது ஹாலந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது.அளவில் பெரிதாக இருப்பதனால் பெரிய லெய்டன் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1018 ஆண்டுக்குரிய திருவாலங்காடு செப்பேடு, திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி அருகில் உள்ளது. இது 31 இதழ்களைக் கொண்டு அமைந்துள்ளது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1020 ஆண்டுக்குரிய கரந்தை செப்பேடானது, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் புத்தூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கரந்தை தமிழ் சங்கத்தில் வைத்து பாதுகாத்தமையால், அப்பெயரால் அழைக்கப்படுகிறது. இது 57 இதழ்களை கொண்ட அமைந்துள்ளது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1030 ஆண்டுக்குரிய திருக்களர் செப்பேடு ஆனது, திருக்களர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இது ஒரு இதழை கொண்டது.

முதலாம் இராஜேந்திரன்
கி.பி 1036 ஆம் ஆண்டுக்குரிய எசாலம் செப்பேடு, ஏசாலம் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ளது. இது 15 இதழ்களை கொண்டு அமைந்துள்ளது.

முதலாம் இராஜாதிராஜன்
கி.பி 1049 ஆம் ஆண்டுக்குரிய திருக்களர் செப்பேடு ஆனது, திருக்களர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இது ஒரு இதழைக் கொண்டது.

Previous Post
Next Post

0 Comments: