வெள்ளி, 30 செப்டம்பர், 2022

தரிசு நிலம் என்றால் என்ன

தரிசு நிலம் என்றால் என்ன
THARISU NILAM ENRAL ENNA

பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலமானது மனித வாழ்வில் இன்றியமையாததும், முக்கியமானதும், மனித வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்றது. இன்று இந்நிலங்களின் தன்மைக்கேற்ப பல வகைகளாகக் காணப்படுகின்றன.

எனினும் நம் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை பாகுபாடு செய்துள்ளனர். குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்களை ஐவகையாகப் பிரித்துள்ளனர்.

தற்போது பல வகைகளில் நிலங்கள் பிரிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். உதாரணமாக தரிசு நிலம், கல்லாங்குத்து நிலம், செம்பாட்டு நிலம், மேச்சல் நிலம், வட்டகை நிலம், அறப்பு நிலம், இறையிலி, உழவுகாடு போன்ற பல நிலங்களைக் கூறலாம்.

Table of Contents
தரிசு நிலம் என்றால் என்ன
தரிசு நிலங்களின் வகைப்பாடு
தரிசு நிலப் பயன்கள்
தரிசு நிலங்களை விளை நிலங்கள் ஆக்குதல்
தரிசு நிலம் என்றால் என்ன
சாகுபடி செய்யாமல் இருக்கும் நிலங்களை தரிசு நிலம் என்பர். தரிசு நிலங்களைப் போடுகால் எனவும் அழைப்பர்.

தரிசு நிலங்களின் வகைப்பாடு

பொதுவாகத் தரிசு நிலங்களை மூன்று வகைப்படுத்துவர். அவையாவன,

நடப்பு தரிசு
சாகுபடிக்கு லாயக்கான தரி
இதர தரிசு
நடப்பு தரிசு – அதாவது நடப்பாண்டில் மட்டும் தரிசாக வைத்திருக்கும் நிலங்கள் அதற்கு முந்திய ஆண்டில் பயிர் செய்யப்பட்டிருக்கும்.

சாகுபடிக்கு லாயக்கான தரிசு – நிலங்களில் சாகுபடி செய்ய முடியும். ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தால் சாகுபடி செய்யாமல் வைத்திருக்கும் நிலங்களாகும்.

இதர தரிசு – ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்களில் நிலங்கள் தரிசாக வைத்திருந்தால் அல்லது சாகுபடி செய்யாமல் வைத்திருந்தால் இதனை இதர தரிசு நிலங்களாக வகைப்படுத்தி வைக்கின்றனர்.

இவ்வகைப்பாடானது கிராம நிறுவன அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருப்பர்.

தரிசு நிலப் பயன்கள்
தரிசு நிலங்களில் கால்நடை வளர்ப்பு மிகுந்த பயனைத் தரும் அதிலும், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு எருமை மாடு வளர்ப்பு போன்றவை மிகுந்த லாபத்தை தரும்.

உழுந்து, பாசிப் பயறு, நரிப் பயறு, கொள்ளு, தட்டைப் பயறு, சோளம், மக்காச் சோளம், இராகி, கடலை போன்றவற்றைப் பயிரிடலாம். இப் பயிர்கள் மூலம் கிடைக்கும் தீவினைகளான சோளத்தட்டு, கடலைச்செடி, கொள்ளுக் கொடி போன்றவை ஆடுகளுக்கு நல்ல தீவினங்களாகும்.


ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் இரண்டு எருமை மாடுகள் மற்றும் பத்து ஆடுகள் வளர்ப்பதற்குத் தேவையான தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் உற்பத்திச் செலவு குறைக்கப்படுவதுடன் நிகர இலாபத்தையும் ஈட்டலாம்.

தரிசு நிலங்களை விளை நிலங்கள் ஆக்குதல்
குறைந்த அல்லது நீர் ஆதாரம் இல்லாத பலம் குறைந்த தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் உழவர்ப் பெருமக்கள் வருடம் முழுவதும் நிரந்தர வருவாயைப் பெற முடியாது மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அவர்கள் துயர்துடைக்க நிரந்தர வருவாயை பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசாங்கமானது பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி கொண்டு வருகின்றது. எடுத்துக்காட்டு – தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்.
Previous Post
Next Post

0 Comments: