செவ்வாய், 27 செப்டம்பர், 2022

காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை

காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
KATTU VALAME NATTU VALAM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கையின் சமநிலையை பேணி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியதில் காடுகளிற்கு முக்கிய பங்கு உண்டு.

காடுகளின் பயன்கள் கட்டுரை
Table of Contents
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
காடுகளின் முக்கியத்துவம்
இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
தமிழகக் காடுகளின் சிறப்பு
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
முடிவுரை
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
காடுகளின் முக்கியத்துவம்
இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
தமிழகக் காடுகளின் சிறப்பு
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
முடிவுரை
முன்னுரை
இயற்கை நமக்களித்த அற்புதப் படைப்புக்களில் காடுகள் முதன்மை வகிக்கின்றன. காடுகள் செழிப்பாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும்.

இதனால்தான் “காட்டின் வளமே நாட்டின் வளம்ˮ⸴ “காடழிந்தால் நாடழியும்ˮ போன்ற பழமொழிகளைக் கூறுவர். புவி மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி காடுகளே ஆகும். இது இடப்பரப்பு மட்டுமல்ல மனித உயிர் வாழ்க்கைக்கு இதுவே ஆதாரமாகும்.


“மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண்ˮ என்கிறார் வள்ளுவர்.

நீலமணி போன்ற நீளமுடைய அகழியும்⸴ வெட்டவெளியான நிலப்பரப்பும்⸴ உயரமான மலையும் மரநிழல் செறிந்த காடுகளும் கொண்டதே அரண் என்கின்றார். ஒரு காடு வளமாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காடுகளின் முக்கியத்துவம்
உயிரின பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானது. “ஒருமுறை உயிர் கொடுத்தால் தாய் ஒவ்வொரு முறையும் உயிர் கொடுக்கின்றது மரம்”. இயற்கைச் சமநிலையைப் பேணிக்காக்க காடுகள் அவசியமாகின்றன.

உலக வெப்பத்தை குறைக்கவும்⸴ பசுமையைப் பேணவும் காடுகள் முக்கியமாகின்றது. பறவைகள்⸴ விலங்குகள் உட்பட உயிரின பாதுகாப்பிற்கும்⸴ வாழ்விடங்களிற்கும் காடுகள் முக்கியம் வகிக்கின்றன.

இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
உலகளாவிய ரீதியில் இந்திய காடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு அடர்த்தியான பல்லுயிர்ப் பெருக்க காட்டுப் பகுதிகள் 25 உலகில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று இந்தியாவிலுள்ளது.

உலகில் காணப்படும் 12 பல்லுயிர் பெருக்க மையங்களில் இந்தியாவும் ஒன்றாகும். உலகளாவிய ரீதியில் 30 வகையான செம்மரங்கள் உள்ளன. அவற்றில் நான்கு வகை மரங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

உலக நிலப்பகுதியில் 2.5% ஐ பெற்றுள்ளது நம் நாடு. அதேசமயம் உலக இயற்கை வளத்தில் 6% விடக் கூடுதலான வளம் இந்தியாவிலுள்ளது. தேசம் பெருமை கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் சூழலியல் பாதுகாப்பில் மற்றைய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்கு அதிக பங்குள்ளதை தெளிவுபடுத்துகின்றது.

தமிழகக் காடுகளின் சிறப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுச்சூழல் திட்டத்தின்படி ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் மொத்த பரப்பளவில் 33% காட்டுவளம் இருக்க வேண்டும்.

எனினும் தமிழகத்தில் 5 தேசிய பூங்காக்கள்⸴ 10 வனவிலங்கு சரணாலயங்கள்⸴ 14 பறவைகள் சரணாலயங்கள்⸴ 4 புலிகள் காப்பகம்⸴ 4 யானைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

இந்தியாவில் காணப்படும் 14672 பூக்கும் தாவரங்களில் 5640 தாவரங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை அரிய வகைத் தாவரங்களாகும்.

காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
இன்று காடுகள் மனித தேவைகளுக்காகவும்⸴ இயற்கை அனர்த்தங்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. நீருக்கான ஆதாரங்கள் இல்லாமல் போய்விடுகின்றது. மண்சரிவு⸴ மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதனால் வளம்மிக்க மண்கள் அழிக்கப்படுகின்றன.

வெப்பம் அதிகரித்து வறட்சி ஏற்படுகின்றது. பல அரிய மூலிகைகள் அழிந்து விடுகின்றன. காற்று மாசுபடுகின்றன. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து காபனீரொட்சைட் அதிகரிப்பதனால் பசுமைக் கூடார விளைவு ஏற்படுகின்றது.

துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உருகுதல். இதனால் கடல் மட்டம் உயர்வடைதல் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

முடிவுரை
ஒரு நாட்டில் காட்டுவளம் செழிப்பாக இருப்பின் நாடு வளம் பெறும். காடுகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். மரங்கள் அழிக்கப்படும் போது அதற்கு பதிலாகப் பல மரங்களை நாட்ட வேண்டும்.

காட்டின் அவசியத்தை இந்திய அரசு உணர்ந்ததால் தான் மத்திய-மாநில அரசுகள் திட்டங்களை வகுத்துள்ளன. இதற்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்து காடுகளைக் காக்க வேண்டும். “காட்டு வளமே நாட்டின் வளம்ˮ எனவே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்.

Previous Post
Next Post

0 Comments: