மாநகராட்சி என்றால் என்ன
MANAGARATCHI ENDRAL ENNA
ஒரு பெரு நிலப்பகுதியை நிர்வாகம் செய்ய வேண்டுமெனில் தனியாக நிர்வாகம் செய்வது மிகவும் கடினமானதாகும். ஆகவே அதனை பிரித்து நிர்வகிப்பது இலகுவானதாகும்.
இந்தியா போன்ற பெருநாட்டை நிர்வகிப்பதற்கு மாநிலங்களாக பிரிக்கின்றனர். மாநிலங்களை மாவட்டங்களாகவும், மாவட்டங்களுக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப்புற பஞ்சாயத்து, வார்ட்டு என சிறு சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இதன்மூலம் நிர்வாகம் சிறப்பாக இடம்பெறும்.
இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் பெறுகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய மாநகராட்சியாக மும்பை விளங்குகின்றது. இதனைத் தொடர்ந்து டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்றனவும் பெரு மாநகராட்சிகளாக விளங்குகின்றன.
மாநகராட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட, பெரு நகரங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.
நகராட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட நகரங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.
பேரூராட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட பேரூர்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.
கிராம பஞ்சாயத்து – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட கிராமங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம்.
Table of Contents
மாநகராட்சி என்றால் என்ன
ஒரு நகராட்சி மாநகராட்சி அதற்குரிய தகுதிகள்
மாநகராட்சி அமைப்பு பணிகள்
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்
மாநகராட்சி என்றால் என்ன
உள்ளாட்சி அமைப்புக்களில் ஒன்றுதான் மாநகராட்சி ஆகும். உள்ளுராட்சி பிரிவுகள் கிராமம், நகரம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற பிரிவுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியன அடங்கும்.
கிராமப்புற பிரிவுகளாக உள்ளூராட்சி (கிராம பஞ்சாயத்து), ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்), மாவட்ட ஊராட்சி ஒன்றியம் ஆகியன அடங்கும்.
மாநகராட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட, பெரு நகரங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம் ஆகும்.
அதாவது மாநகராட்சி என்பது ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை கொண்ட உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.
ஒரு நகராட்சி மாநகராட்சி அதற்குரிய தகுதிகள்
ஒரு நகராட்சி மாநகராட்சியாவதற்கு சட்டத்தின் அடிப்படையில் எவ்வித தகுதியும் இல்லை. அரசாங்கமானது ஒரு இடத்தை எடுத்து பகுப்பாய்வு செய்து அதனை மாநகராட்சியாக அறிவிப்பதற்கு அதிகாரம் உண்டு.
எனினும் நகராட்சி, மாநகராட்சி ஆக்குவதற்கு ஒரு சில வரையறைகளைப் பரிந்துரை செய்கின்றனர்.
ஒரு மாநகராட்சியாக மாற வேண்டுமெனில், மக்கள் தொகை குறைந்த பட்சம் பத்து லட்சத்திற்கும் மேல் இருக்க வேண்டும். வருடத்திற்கு 50 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்.
எனவே மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் பிரிக்கின்றனர். எனினும் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களும் மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பொதுவான வரையறை என்பதில்லை.
மாநகராட்சி அமைப்பு பணிகள்
மாநகராட்சியின் பணிகளாக
ஒரு நகரில் மாநகராட்சி சாலைகள் பராமரிப்பு
பொதுப்போக்குவரத்து, குடிநீர் வழங்கல்
பிறப்பு, இறப்பு பதிவு
கழிவுகள் அகற்றுதல்
ஆகிய பொறுப்புகளை ஏற்று உள்ளது. மேலும் சில மாநகராட்சிகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தீயணைப்பு மற்றும் முதலுதவி வண்டி, சேவைகளையும் வழங்குகின்றன. பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களையும் பராமரிக்கின்றன.
இவற்றிற்கான நிதி வருவாய் சொத்து வரி, மனமகிழ்வு வரி, ஆக்ட்ராய் எனும் நுழைவு வரி மூலமும் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டிடங்கள் மூலமும் பெறப்படுகின்றது.
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்
தமிழகத்தில் சுமார் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சியாகச் சென்னை விளங்குகின்றது.
இதனைத் தொடர்ந்து முறையே கோயம்பத்தூர் மாநகராட்சி, திருச்சிரப்பள்ளி மாநகராட்சி, மதுரை மாநகராட்சி, சேலம் மாநகராட்சி போன்றனவும் மிக முக்கியமான மாநகராட்சிகளாக விளங்குகின்றன.
தமிழகத்தில் மிகக் குறைந்த வரி வருவாயைக் கொண்ட மாநகராட்சியாகத் திண்டுக்கல் விளங்குகின்றது. மாநகராட்சி மக்கள் தொகைக்கேற்ப வார்ட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை இணைத்துப் புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் தொழில் வரி, பாதாள சாக்கடைக் கட்டணம் மற்றும் குத்தகை, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments: