வியாழன், 29 செப்டம்பர், 2022

அந்நிய செலாவணி என்றால் என்ன

அந்நிய செலாவணி என்றால் என்ன
ANNIYA SELAVANI ENRAL ENNA

வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்லும் போது குறித்த நாட்டின் நாணயத்தை எடுத்துச் செல்வது மிகமிக அவசியமாகும். இதனால் தேவையான அனைத்துச் செலவீனங்களையும் எளிதாகச் செய்ய முடியும்.

மற்ற நாடுகளின் நாணயத்தை எங்கிருந்து பெறுகின்றோம் என பலரது மனதில் கேள்வி எழலாம். இத்தகைய ஆதாரத்தைச் சேர்ந்ததுதான் அந்நியச் செலவாணி சந்தையாகும்.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதிலே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஏனெனில் இதனைக் கொண்டே ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை ஏனைய நாடுகள் எடை போடுகின்றன என்பதனாலேயாகும்.

அந்நியச் செலாவணியின் மதிப்பானது நிலையாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்பு ஏறலாம் அல்லது இறங்கலாம்.

Table of Contents
அந்நிய செலாவணி என்றால் என்ன
அந்நிய செலாவணி சந்தையின் அடிப்படைகள்
அந்நிய செலாவணி என்றால் என்ன

“எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டுப்பணம் தான் அந்நியச் செலாவணி. வெளிநாட்டுப் பணத்தைத்தான் அந்நியச் செலாவணி என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Forex Reserve என்று கூறுவார்கள்.

அந்நியச் செலாவணி என்ற சொல்லானது வெளிநாடு மற்றும் பரிமாற்றம் என்ற சொற்களின் கலவையிலிருந்து வருகின்றது. அந்நிய செலாவணி என்பது ஒரு சந்தையாகும். இது ஒரு நாணயத்தை மற்றொரு நாணயமாக மாற்றுவதற்கான செயல்முறையை எளிதாக்குகின்றது.

அந்நியச் செலாவணி என்பதன் எளிமையான விளக்கம் யாதெனில் பிற நாட்டுப் பணங்களை நாம் செலவளிப்பதே அந்நியச் செலாவணி எனப் புரிந்துகொள்ளலாம்.

அதாவது, அயல் நாடுகளிடையே வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும் நாணய மதிப்பே அந்நியச் செலாவணி என அழைக்கின்றோம்.

அந்நிய செலாவணி சந்தையின் அடிப்படைகள்
மக்கள் பொதுவாகத் தமது நாணயங்களை முக்கியமாக இரண்டு நோக்கங்களுக்காக மாற்றிக் கொள்கின்றனர். அதாவது சுற்றுலா(Tourism) மற்றும் வர்த்தகத்திற்காக(Trade) மாற்றிக் கொள்கின்றனர்.

இவை இரண்டும் உலகவில் பரவலாக இருப்பதால் அந்நிய செலாவணி சந்தை உலகளவில் மிகச் சிறந்த திரவ சந்தைகளில் ஒன்றாகும்.

பங்குகள் மற்றும் நிதி வழித்தோன்றல்கள் மையப்படுத்தப்பட்ட சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஆனால் சுவாரசியமான விடயம் என்னவெனில் நாணயங்களிற்கு அத்தகைய சந்தை என்ற ஒன்று இல்லை என்பதாகும்.


உலகம் முழுவதிலும் நாணயங்கள் கணினித் தளங்கள் மூலமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.

இவ்வகையான சந்தை அமைப்பு Over-The-Counter (OTC) System என்று அழைக்கப்படுகின்றது. நாணயங்கள் OTC இல் எந்தவொரு பிரிவிலும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஆனால் அவை எதிர்கால தளத்தில் அதாவது Future Platform இல் நிறைய அளவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு நாணயப் பரிவர்த்தனைக்கும் எப்போதும் இரண்டு நாணயங்கள் சம்மந்தப்பட்டிருக்கும். இந்த நாணயங்கள் நாணய ஜோடிகள் (Currency Pair) என்று அழைக்கப்படுகின்றன. (எடுத்துக்காட்டு – EUR/USD) இவ்வகை நாணயங்கள் ஒன்றுக்கொண்று அடிப்படை நாணயமாகவும், மேற்கோள் நாணயமாகவும் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஜோடிக்கும் அதனுடன் தொடர்புடைய இரண்டு வகையான விலைகள் உள்ளன. ஏலவிலை (Bid Price), கேட்கும் விலை (Ask Price).


ஏல விலை என்பது வியாபார நாணயத்திற்குச் செலுத்திப் பெற விரும்பும் ஒன்றாகும். கேட்கும் விலை என்பது ஒரு வியாபாரி அதே நாணயத்தினை விற்கும் விலையாகும். இந்த இரண்டிற்குமான வேறுபாடு ஜோடியின் பரவல் என்று அழைக்கப்படுகின்றது.

சந்தையில் முன் வரையறுக்கப்பட்ட ஜோடிகள் உள்ளன. இவை மட்டுமே சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். 3 வகையான நாணய ஜோடிகள் உள்ளன. பெரிய (Major Pair), சிறிய (Minor Pair) மற்றும் கவர்ச்சியான ஜோடிகள் (Exotic Pair) என்பனவே இவையாகும்.

முக்கிய ஜோடிகள் அனைத்தும் அமெரிக்க டொலராகவும் அல்லது அமெரிக்க டொலரை ஒரு அங்கமாகக் கொண்ட ஜோடிகளாகும். சிறிய ஜோடிகள் குறிக்கு ஜோடிகள் எனப்படுகின்றது.

Previous Post
Next Post

0 Comments: