திங்கள், 19 செப்டம்பர், 2022

ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்

ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்
JAWAHARLAL NEHRU QUOTES IN TAMIL


பண்டிதர் நேரு என்று அழைக்கப்படும் இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்.

நேருவின் பொன்மொழிகள்
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
Jawaharlal Nehru Quotes In Tamil
ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்

1.அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும்.

2. அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.

3. இதயத்தை பொறுத்ததே இனிய சுதந்திரம்.

4. உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.

5. நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது. அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.

6. வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மை.


7. மனிதனை விட சக்தி வாய்ந்தது சூழ்நிலையே.

8. அச்சம் அறிவுக்கு ஆரம்பம் பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.

9. மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.

10. கோபமாக பேசும் போது அறிவு தன் முகத்தை மூடிக்கொள்கிறது.

11. என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.


12. துணிந்து செயலாற்றுவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். கோழைகளின் பக்கம் வெற்றி தலை வைத்து படுப்பதில்லை.

13. ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன் மக்களின் கட்டுப்பாடு நிறைந்த உழைக்கும் ஆற்றலிலே காணப்படுகின்றது. கடுமையான உழைப்பே நமக்கு செல்வதை தரும் நமது வறுமையை ஒலிக்கும் எனவே நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.

14. புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் எந்த கொள்கையை நீங்கள் பின்பற்றிய போதிலும் மிகவும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.

15. பெண்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது.

Jawaharlal Nehru Quotes In Tamil
16. செயல் இல்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது. எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டு முயற்சி வேண்டும்.

17. ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையை தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.

18. அடக்கம் நல்லது தான். ஆனால் அது அடிமை தனமாக இருக்கக்கூடாது.


19. கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தை தான் நாடுவார்கள்.

20. திட்டமிடாத செயல்.. துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது.

21. கடப்பதற்கு தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கை சலிப்பாகிவிடும்.

22. செயலுக்கு உன்பே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது நீண்ட தூரம்.

23. முயற்சியுடன் செயல்படுகிறவர்களையே வெற்றி தழுவும்.

24. வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

25. விளைவுகளை வைத்து தான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.

26. உண்மையை சில சமயங்களில் அடக்கிவைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது.

27. அச்சம் போன்று மிக மோசமான ஆபத்து ஒன்றும் இல்லை.

28. கழிந்ததை கணக்கெடுத்து கொண்டே இருந்தால் இருப்பதையும் காணாமல் தொலைத்து விடுவோம்.

29. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது.

30. தோல்வி ஏற்படுவது அடுத்த காரியத்தை கவனமாக செய்.. என்பதற்கான எச்சரிக்கை.

31. அறியாமையே எப்போதும் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறது.

மேலும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..


Previous Post
Next Post

0 Comments: