செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
NEERIN MUKKIYATHUVAM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

இயற்கையின் வரமாக கிடைக்கும் நீரானது மனிதனுக்கு மட்டுமின்றி, பிற உயிர்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் அத்தியாவசிய தேவை ஆகும்.

நீரின் முக்கியத்துவம்
Neerin Mukkiyathuvam Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை
Table of Contents
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நீரின் பிறப்பிடம்
நீரின்றி அமையாது உலகு
நீர்விரயம்
நீரை பாதுகாக்க மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள்
முடிவுரை
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நீரின் பிறப்பிடம்
நீரின்றி அமையாது உலகு
நீர் விரயம்
நீரை பாதுகாக்க மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகள்
முடிவுரை
முன்னுரை
தண்ணீர் என்பது மனிதன் வாழ்வதற்கான மூலாதாரமாகும். உணவின்றி மனிதனால் சில நாட்கள் வாழமுடியம் ஆனால் நீரின்றி மூன்று தினங்கள் கூட வாழமுடியாது.

மனிதர்கள் மாத்திரமன்றி இங்கே படைக்கப்பட்டிருக்கின்ற தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து வகையான ஜீவராசிகளுக்கும் நீரானது மிகவும் அவசியமென்பது யாவரும் அறிந்த ஒன்று.


பூமியில் நீர் மூலாதாரம் இருப்பதனால் தான் மனித வாழ்க்கையும் பிற உயிரினங்களின் நிலவுகையும் சாத்தியமாகி இருக்கின்றது.

இக்கட்டுரையில் நீர் எவ்வாறு உருவாகிறது, அதன் முக்கியத்துவங்கள் மற்றும் நீர் விரயம் அதனை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பன தொடர்பாக நோக்கப்படுகிறது.

நீரின் பிறப்பிடம்
நீரானது ஒரு ஐதரசன் மற்றும் இரண்டு ஒட்சிசன் (H2O) மூலக்கூறுகளால் உருவான பங்கீட்டு வலுப்பிணைப்பாக அறியப்படுகிறது. பூமியில் 71 சதவீதமானது நீரினாலும் 29 சதவீதம் நிலத்தினாலும் உருவாகியுள்ளது.

இங்கு நீரின் சதவிகிதம் உயர்வாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் இவை தான் பூமியில் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள மூலங்களாகும்.

இங்கே உள்ள நீர் தான் பூமியை வரண்டு பாலைவனமாகாமலும் குளிர்ந்து பனிக்காடாக மாறாமலும் சமநிலையில் வைத்திருக்கின்றன.

இங்குள்ள நீர் ஆவியாகி, ஒடுங்கி, படிவு வீழ்ச்சியாகி, ஓடும் நீராகி மீண்டும் நீர்நிலைகளை அடையும் அவை மீண்டும் ஆவியாகும். இவ்வாறு ஒரு நீரியல் வட்டமாக பூமியை சமநிலையாக வைத்திருக்கிறது.

பூமியில் நீரானது திண்மம், திரவம், வாயு எனும் மூன்று நிலைகளில் காணப்படுகிறது. மனித உடலும் 60 சதவீதம் நீரினாலே உருவாகியுள்ளது. இவ்வாறு நீர் இங்கே பரந்து வியாபித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு

“நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு” நீர் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்கிறார் திருவள்ளுவர். அந்தளவிற்கு நீரின் முக்கியத்துவமானது காணப்படுகிறது.

இங்கே மனித உடலில் நீரானது உடல் வெப்பநிலையை பேணவும் உடலில் உள்ள அனைத்து கலங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

அது மட்டுமன்றி மூளையை ஒழுங்காக வேலை செய்ய வைக்கவும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற வைக்கவும் உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் தொழிற்படவும் நீரே ஆதாரமாக உள்ளது.

பூமியில் மனிதன் உயிர் வாழவும், அவன் அன்றாட பயன்பாடுகளுக்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும், எல்லா வகையான தொழிற்சாலைகளுக்கும், உணவு உற்பத்திகளுக்கும் நீரே ஆதாரம். இங்கு நீரில்லை என்றால் மனிதன் வாழவே இயலாது.

நீர்விரயம்

நீர் பூமிக்கு இயற்கையின் வரமாக வளிமண்டலத்தில் இருந்து மழையாக
கிடைக்கிறது.

மழைவீழ்ச்சியினால் ஆறுகள் உருவாகி குளங்களை நிரப்புகின்றன. தரைக்கீழ் நீராகவும் ஊடுவடிகின்றன. இவை இயற்கையின் நிகழ்வுகளாகும்.

மனிதன் தனது தேவைக்காக போதுமான நீரை எடுப்பதோடு நிறுத்தி விடாது தரைக்கீழ் நீரை பம்பிகள் மூலம் அதிகமாக உறிஞ்சுவதும்

நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதும் அசேதனங்கள் பார உலோகங்களை நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகிறான்.

ஆழமாக தரைக்கீழ் நீர் நுகர்வதால் கடல் நீர் உட்புகுந்து நீர் உவராகின்றது. அதிகளவான நீர் மாசடைதல் அண்மைக்காலங்களில் இங்கு அரங்கேறி வருகிறது.

இது நீர் பற்றாக்குறையை உண்டு பண்ணி மனிதனை அழிவுக்கு இட்டுசெல்கிறது.

நீரை பாதுகாக்க மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள்
முன்னொரு காலத்தில் தலைசிறந்த நீர்மேலாண்மையயை எம் முன்னோர்கள் மேற்கொண்டனர். நீரை விரயமாக விடாது குளங்களும் ஏரிகளும் அமைத்து நீரை தேக்கி வைத்து நீர் வளத்தை பாதுகாத்தனர்.

அவற்றை தான் நாமும் செய்ய வேண்டும் நீர் நிலைகளை மாசடைய விடாது தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அபிவிருத்தி எனும் பெயரில் நீர் தேக்கங்களை அழிவடைய செய்யாது பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இயற்கையான காடுகளை பாதுகாக்க வேண்டும். மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிக்கனமான நீர்ப்பாசன முறைகளை பயன்படுத்த வேண்டும்.

நீரை பாதுகாக்காமல் விட்டால் மனித சமுதாயமே அழியும் என்பதில் துளியும் ஐயமில்லை. இவற்றினை விழிப்புணர்வூட்ட உலகமெங்கும் “மார்ச் 22” உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது.

முடிவுரை
பூமியில் படைக்கப்பட்ட நீர் வளம் மிகப்பெறுமதியானது. அதனை மாசுபடுத்தவும் விரயமாக்கவும் செய்வது ஆகச்சிறந்த முட்டாள் தனமாகும்.

இன்றைக்கு எந்த ஒரு நாடு அதிக நீர் வளம் கொண்டதோ அதுவே சிறந்த நாடு எனும் அளவிற்கு தண்ணீரின் தட்டுப்பாடு மனிதகுலத்தை ஆட்டம் காண செய்துள்ளது. நாடுகள் தண்ணீருக்காக போராடும் நிலையானது உருவாகலாம்.

எனவே இன்றே விழித்து கொள்வோம் இயற்கையின் வரமான நீரை பாதுகாத்து வாழும் வகையறிந்து வாழ்வோம்.

நீரில்லையேல் உயிரில்லை என்றுணர்வோம் நீரை பாதுகாப்போம்.

Previous Post
Next Post

0 Comments: