புதன், 21 செப்டம்பர், 2022

எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை

எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை
ENATHU KUPPAI ENATHU PORUPPU KATTURAI IN TAMIL


இந்த பதிவில் “எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

உலகமெங்கிலும் குப்பைகளால் சுத்தமான குடிநீரை கூட பெற்று கொள்ள முடியாத நிலையில் பல மக்கள் வாழ்கின்றனர்.

எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை
எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
குப்பைகளின் வகைகள்
கழிவு பொருட்கள் மேலாண்மை
பாதிப்புக்கள்
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
முடிவுரை
முன்னுரை
குப்பை என்பது பயன்படுத்திய கழிவுகள் என்று கூறமுடியும். இது எந்த வகையான பொருட்களில் இருந்தும் உருவாகலாம். இவ்வகையான குப்பைகளினால் பாரிய அளவிலான பிரச்சனையாக உள்ளது.

குப்பைகளை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் முறையற்ற விதத்தில் கொட்டுவதனால் தெருக்கள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், கடல்கள் என அனைத்து நீர் நிலைகளிலும் நிறைந்து பாரிய மாசடைவுகள் ஏற்படுகின்றன.

இதனால் மனிதனுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்றைய உயிரினங்களும் மோசமாக பாதிக்கப்படுகின்றது. இதனால் பல தீமைகள் விளைகின்றன.

இவ்வகையான விளைவுகளுக்கு ஒவ்வொரு மனிதர்களுமே பொறுப்பாக உள்ளனர். இவை தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

குப்பைகளின் வகைகள்
திடமான குப்பைகளை நான்கு விதமாக பிரிக்கலாம். இ.வேஸ்ட் எனப்படும் எலக்ரானிக் கழிவுகள், சமையல் அறையில் இருந்து வரும் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள்.


இந்த நான்கு கழிவுகளையும் பிரிக்காமல் ஒரே இடத்தில் கொட்டுவதனால் நாட்கள் செல்ல செல்ல இந்த நான்கு குப்பைகளும் இணைந்து ஒரு விதமான இரசாயன செயற்பாடுகளுக்கு உள்ளாகி அதனை அண்டியுள்ள நிலத்தடி நீரை கூட பயன்படுத்த முடியாமல் செய்து விடும்.

இதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளியேற்றுவது அரசாங்கம் மற்றும் தனி நபர்கள் ஆகிய எங்கள் அனைவரதும் கடமையாக உள்ளது.

கழிவு பொருட்கள் மேலாண்மை
கழிவு பொருட்கள் மேலாண்மை என்பது கழிவு பொருட்களை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றுதல், மீள்சுழற்சிக்கு உள்ளாக்கல் அல்லது நீக்குதல், கண்காணித்தல் ஆகிய செயல்முறைக்கு உள்ளானதாகும்.

கழிவு பொருட்கள் மேலாண்மையில் திண்ம, வளிம கழிவுகளை சில வேளைகளில் கதிரியக்க கருவிகளை கொண்டு அழிக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

ஒவ்வொரு கழிவையும் தனிப்பட்ட முறையில் முகாமை செய்வதனால் இந்த கழிவுகளை சரியாக முகாமை செய்து கொள்ள முடியும்.

பாதிப்புக்கள்

குப்பைகளை சரியான முறையில் வெளியேற்றாமையினால் பல வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. துர்நாற்றம் வீசுவதுடன் சில கழிவுகளால் நோய்கிருமிகள் உருவாகி மனிதர்களை பாதிக்கின்றன.

குப்பைகள் சேரும் இடங்களில் ஈக்கள், கொசுக்கள் உருவாகி அபாயகரமான நோய்களை உருவாக்குகின்றன. மற்றும் சில நெகிழி கழிவுகள் மண்ணை மாசடைய செய்கின்றன. மேலும் நீர்வாழ் உயிரினங்களையும் பாதிக்கின்றன.

உலகமெங்கிலும் குப்பைகளால் சுத்தமான குடிநீரை கூட பெற்று கொள்ள முடியாத நிலையில் பல மக்கள் வாழ்கின்றனர்.

கட்டுபடுத்தும் வழிமுறைகள்
இந்த குப்பை சார்ந்த பிரச்சனைகளை கட்டுபடுத்த முதல் வழி ஒவ்வொரு தனி மனிதர்களும் தமது குப்பைகளை தாமே சரியாக அகற்றுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

மற்றும் அரசாங்கம் இவை தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இறுக்கமான சட்ட நடடிவக்கைகளை பின்பற்றுவதனால் கழிவுகளை சூழலில் கொட்டுபடுவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

முடிவுரை
இவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தூய்மையான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் வாயிலாக வளமான தேசங்கள் உருவாகும்.

இதன் மூலமாக தான் மக்கள் பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை ஆகையால் நாம் அனைவரும் சரியாக செயற்படுவதன் மூலமாக அடுத்தவர்களையும் சரி செய்ய வேண்டும்.

Previous Post
Next Post

0 Comments: