வெள்ளி, 23 செப்டம்பர், 2022

காலம் பொன் போன்றது கட்டுரை

காலம் பொன் போன்றது கட்டுரை
KAALAM PON PONDRATHU KATTURAI TAMIL


இந்த பதிவில் காலம் பொன் போன்றது கட்டுரை பதிவை பார்க்கலாம்.

எக்காலத்திலும் முயற்சியோடு உழைப்பவர்கள் வறுமையில் வாடுவதில்லை. காலம் அறிந்து செயலாற்றின் வெற்றிப் பாதையில் வீறு நடை போடலாம்.

காலமறிந்து கடமைதனை உணர்ந்து செய்யும் செயல்கள் நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

நூலகத்தின் சிறப்பு கட்டுரை
காலம் பொன் போன்றது
Kaalam Pon Pondrathu Katturai Tamil
காலம் பொன் போன்றது கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
காலத்தின் சிறப்பு
நேர முகாமைத்துவம்
நேர முகாமைத்துவத்தின் பயன்கள்
காலம் பொன் போன்றது
முடிவுரை
முன்னுரை
மனித வாழ்க்கையில் காலம் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றது. மனித வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒவ்வொரு நிகழ்வும் காலத்தினாலே தீர்மானிக்கப்படுகின்றது.

காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திராமல் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும். ஆகவே ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்க எமது வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடம் குறைந்து கொண்டே இருக்கும். காலத்தை பொன் போன்று பயன்படுத்த வேண்டும்.

இக்கட்டுரையில் காலம் பொன் போன்றது என்பதை விரிவாக பார்க்கலாம்.

காலத்தின் சிறப்பு

“காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்கின்றார் பேரறிஞர் அண்ணா.

காலம் மிகவும் வேகமாக கடந்து செல்லக் கூடியது. உரிய காலத்தில் உரிய கடமைகளை செய்து முடித்தல் வேண்டும். தகுந்த நேரம் முடிவடைந்து விட்டால் பின்பு அந்த கடமைகளை செய்தும் அதனால் பயன் ஒன்றும் இருக்காது.

இதனையே “இளமையில் கல், பருவத்தே பயிர் செய்” என்று நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது இளமையில் கற்காது விடின் அந்த கல்வியை பின்பு கற்றாலும் அதனால் பயனேதும் இல்லை. பருவம் பார்த்தே பயிர் செய்ய வேண்டும். பருவம் தப்பினால் பயிர்கள் செழித்து வளராது.

தக்க நேரத்தில் அந்தந்த கடமைகளை செய்து முடித்தால் மாத்திரமே அதன் முழுப்பயனை அடைந்து கொள்ள முடியும். இதுவே காலத்தின் சிறப்பு ஆகும்.

நேர முகாமைத்துவம்

நாம் செலவளித்த காலத்தை திரும்ப பெறமுடியாது. ஆகவே அதனை சரியான முறையில் பயன்படுத்துதலே வெற்றியை பெற்றுத்தரும். இன்றைய நவீன உலகில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒன்றாக நேரமுகாமைத்துவம் காணப்படுகின்றது.

மனிதர்கள் எந்த காரியத்தை செய்தாலும் நேரம் போதாது என்ற காரணத்தையே கூறிவருகின்றனர். இதற்கான சரியான காரணம் அவர்கள் தமக்கு கிடைக்கக் கூடியதாகவுள்ள நேரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்பதாகும்.

நேரமுகாமைத்துவம் எனப்படுவது ஒரு மனிதனிற்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு சிறப்பான வகையில் பயன்படுத்தலாம் என்பதாகும்.

நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த செயல்களை செய்து முடிக்கப்போகின்றோம் என்பதை முன் கூட்டியே தீர்மானிக்கவேண்டும். அதற்கேற்ப செயலாற்றும் போது வெற்றி பாதையை இலகுவில் அடைந்து கொள்ள முடியும்.

நேர முகாமைத்துவத்தின் பயன்கள்
உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் ஒலிம்பிக் விளையாட்டில் ஒன்பது தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். அவர் ஒலிம்பிக் விளையாட்டின் மூலம் சம்பாதித்த பணம் நானூறு கோடிகள்.

ஆனால் அவர் அதற்காக செலவளித்த நேரம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அந்த இரண்டு நிமிடங்களில் வெற்றியாளனாக மாறுவதற்காக இருபது வருடங்கள் அவர் தனது நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.

நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உசைன் போல்ட் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.


நேரத்தை சரியாக பயன்படுத்தி நமது வேலைகளை ஒழுங்குபடுத்தும் போது எந்தவித இடையூறோ, அவசரமோ இல்லாமல் சரியான நேரத்தில் அவற்றை செய்து முடிக்க முடியும்.

கிடைக்கின்ற நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்வதன் மூலமே வெற்றிப்பாதையில் சிறப்பாக பயணம் செய்ய முடியும்.

காலம் பொன் போன்றது
காலத்தை பொன் போன்று மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை வெறும் பொழுதுபோக்கு சாதனங்களாக மட்டுமே பாவிக்க வேண்டும்.

தேவையற்ற விடயங்களை தவிர்த்து எமக்கு நன்மை தரக்கூடிய விடயங்களை மட்டும் பார்வையிட வேண்டும்.

ஒரு நாளில் செய்வதற்கென திட்டமிட்ட விடயங்களை செய்து முடித்த பின்பே நித்திரைக்கு செல்ல வேண்டும்.

எமக்கு நேரம் போதவில்லை என நாம் உணர்ந்தால் அதிகாலையிலே எழ வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை
காலத்தை கவனமாக கையாள வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அனைவருமே தமக்கு அளிக்கப்பட்ட நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்களே.

நாம் எமது அன்றாட கடமைகளை செய்து முடிக்காமல் பிற்போடும் ஒவ்வொரு நிமிடமும் நாம் தேவையற்று வீணடித்தத நேரமாகவே கருதப்படும்.

ஆகவே காலத்தை பொன்னென கருதி சரியான முறையில் பயன்படுத்தி உயர்ந்த நிலையை அடைவோமாக.


Previous Post
Next Post

0 Comments: