நான் ஒரு செல்வந்தர் ஆனால் கட்டுரை
NAAN ORU SELVANTHARANAL KATTURAI IN TAMIL
இந்த பதிவில் “நான் ஒரு செல்வந்தர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரை தொகுப்பை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
நான் ஒரு செல்வந்தர் ஆனால் கட்டுரை – 1
இந்த உலகத்தில் இத்தனை மனிதர்கள் இவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் நாள்தோறும் சுமப்பதற்கு காரணம் இந்த வறுமை என்கிற கொடிய அரக்கன் தான். நான் ஒரு செல்வந்தரானால் இங்கே எனது கண்ணுக்கு முன்னால் வறுமையினால் துன்னபமடைகின்ற மக்களுக்கு உதவி செய்வேன்.
தினம் தினம் உண்பதற்கு கூட வசதி இல்லாமல் பட்டினியால் வாடுகின்ற ஏழை மக்களுக்கு நான் உணவழிப்பேன். தங்குவதற்கு இடம் கிடைக்காமல் வீதி ஓரங்களில் தவிக்கின்ற மக்களை காப்பாற்றி அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ப தங்குமிடங்களை நான் அமைத்து கொடுப்பேன்.
இன்றுள்ள அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளை போல நானும் இருக்காது மக்களுக்கு தேவையான உதவிகளை நான் எனது சொந்த பணத்தில் செய்து கொடுப்பேன். மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.
தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாமல் துன்பமடைகின்ற ஏழை மாணவர்களுக்கு நான் இலவச பாடசாலைகளை கட்டி கொடுப்பதோடு அவர்களது கல்வி வளரச்சிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பேன்.
பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு, நல்ல குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பேன். போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கின்ற மக்களுக்கு நான் அந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பேன்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்கின்ற திருவள்ளுவருடைய குறளுக்கு இணங்க நான் ஒரு செல்வந்தனாக ஆனால் என்னிடம் உள்ள செல்வத்தை பிறருக்கும் பயன்படும் படியாக அதனை பயன்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
நான் ஒரு செல்வந்தர் ஆனால் கட்டுரை – 2
நான் ஒரு செல்வந்தரானால் இங்கே எமது நாட்டில் நடக்கின்ற அநியாயங்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக எனது செல்வத்தை பயன்படுத்தி தீர்வுகளை கொண்டுவர முயல்வேன்.
வேலை இல்லாமல் துன்பப்படுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு நான் நல்ல வேலை வழங்கி அவர்களது வாழ்க்கைக்கு உதவ விரும்புகின்றேன். பணபலத்ததால் சட்டத்தை விலைக்கு வாங்குபர்களுக்க எதிராக மக்களுக்கு நீதி கிடைக்கும் படி நான் செயல்பட விரும்புகின்றேன்.
என்னிடம் உள்ள செல்வத்தை பயன்படுத்தி அழிந்து வருகின்ற இயற்கையை பாதுகாப்பேன். ஏன் என்றால் இங்கே விலை உயரந்த செல்வம் இந்த இயற்கை தான் என்பதை நான் நன்கறிவேன்.
சரியான உணவு கிடைக்காமல் பல உயிர்கள் இங்கே இறந்து போகின்றன. பசி, பட்டினி போன்றன நிகழாமல் இருக்க நான் எனது செல்வத்தை பயன்படுத்துவேன்.
சரியான மருத்துவ வசதி இல்லாமல் பல மக்கள் இங்கே உயிரிழக்கின்றனர். நான் எனது செல்வத்தை கொண்டு இலவச மருத்துவமனைகளை உருவாக்கி மக்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்க செய்வேன்.
நேர்மையாக செயற்படுகின்ற மக்களுக்கு நான் நன்கொடை அழித்து அவர்களை நான் ஊக்கப்படுத்துவேன். அநாதாரவாக விடப்பட்டுள்ள குழந்தைகளை பாதுகாக்கவும் மற்றும் முதியவர்களை பாதுகாக்கவும் நான் பாதுகாப்பு நிலையங்களை உருவாக்கி அவர்களையும் பாதுகாப்பேன்.
என்னுடைய செல்வத்தை இந்த சமூகத்தில் இன்னல்படுகின்ற மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று விரும்புகின்றேன். என்னை போலவே மற்றையவர்களும் மனிதநேயத்தோடு இந்த சமூகத்தில் நடக்கவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். இது என்னுடைய நீண்டநாள் கனவாகும்.
0 Comments: