செவ்வாய், 20 செப்டம்பர், 2022

பகவத் கீதை பொன்மொழிகள்

பகவத் கீதை பொன்மொழிகள்
BHAGAVAD GITA QUOTES IN TAMIL

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதை பொன்மொழிகள்.

பகவத் கீதை பொன்மொழிகள்
Bhagavad Gita Quotes In Tamil
பகவத் கீதை பொன்மொழிகள்
உங்கள் வாழ்க்கையானது
எண்ணப்படியே அமையும்..
எண்ணத்தை எப்போதும்
தூய்மையாக வைத்திருங்கள்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
நல்லவர்களை கெட்டவர்களாக்கி
கெட்டவர்களை உத்தமர்களாக்கி
நிற்க வைத்து விடும்.. ஆனால்
உண்மை ஒருநாள் உலகறிய
வெளிவந்தே தீரும் அப்போது
யார் யார் எப்படி என்ற
மாயை விலகும்.

காமம், கோபம், பேராசை என்ற
மூன்று கதவுகளை கொண்டது
நரகம். இவை ஆத்மாவை
அழிப்பவை. எனவே இம்மூன்றையும்
விலக்க வேண்டும்.

உண்பதிலும் நடமாடுவதிலும்
தூங்குவதிலும் விழித்திருப்பதிலும்
அளவோடு இருப்பவன் துன்பம்
இல்லாமல் இருப்பான்.

காலங்கள் மாறினாலும்
நம் நிலைகள் மாறினாலும்..
நாம் கொண்ட இலட்சியத்தை
ஒருபோதும் மாற்றக்கூடாது.

உன் தோழனை அளவாக நம்பு
ஒரு நாள் அவன் உன் எதிரி
ஆகலாம். உன் பகைவனை
அளவோடு வெறு அவன்
ஒரு நாள் உனக்கு தோழனாக
மாறலாம்.


பெற்ற தாய் தந்தையை கைவிட்டவன்
எத்தனை தான தர்மங்கள் செய்தாலும்
வீண்.. அவன் செய்யும்
பிராத்தனைகளை இறைவன்
ஏற்பதில்லை.

சிக்கனம் என்பது பணத்தை
குறைவாக செலவு செய்வது அல்ல..
சிக்கனம் என்பது எவ்வளவு
பயனுள்ளதாக செலவிடுகிறோம்
என்பதை பொறுத்தது ஆகும்.

பெருமையோ இகழ்ச்சியோ தானாக
வருவதில்லை. உங்கள் கடமையை
செய்யுங்கள் எல்லாமே அதில்தான்
அடங்குகின்றன.

வாழ்வில் அனைத்தையும்
இழந்துவிட்டோம் என்று
நினைக்கும் போது ஒன்றை
மறக்காதீர்கள்.. எதிர்காலம்
என்ற ஒன்று நிச்சயம்
உள்ளது என்பதை.

செய்வினை என்பது நிச்சயமான
ஒன்று. நீங்கள் யாருக்கு எதை
செய்தாலும் அது இரட்டிப்பாக
திரும்ப கிடைக்கும்.
அது நன்மையாக இருந்தாலும் சரி.
தீமையாக இருந்தாலும் சரி.


தனியாக இருப்பதாக
கவலை கொள்ளாதே.. இறைவனே
உன்னுடன் இருக்கிறான் என்பதை
நினைவில் கொள்.

உன்னை யாரவது
அவமானப்படுத்தினால்
மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே
நீ தூக்கி எறியப்படும் போது இறைவன்
உன்னை தூக்கி விடுகிறான் என்பதை
மறந்து விடாதே.

நீ பிறரிடம் எதிர்பார்க்கும் அன்பு..
மரியாதை.. போன்றவைகளை
பிறர் எதிர்பார்க்கும் முன் அதை
அவர்களுக்கு கொடுத்தால்
உனக்கானது (அன்பு, மரியாதை)
உன்னை தேடி வரும்.

மனத்தெளிவு பெற்றவனிடமிருந்து
எல்லா துக்கங்களும்
விலகுகின்றன.

உனக்கு உதவி செய்தவரை
உன் வாழ்வில் எப்பொழுதும்
மறக்காதே.

உன் மீது தவறு இருக்கும் போது
அடுத்தவர் மீது கோபம்
கொள்ளாதே.

எந்த உயிர்கள் மீதும் வெறுப்பு
இல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும்
அன்பும் கருணையும் உடைய
ஒருவன் எனக்கு மிகவும்
பிரியமானவன்.


எதை நீ அதிகம் விரும்புகிறாயோ..
அதை நீ விரைவில் வெறுப்பாய்.

எதிர்பார்ப்புகள் சில நேரங்களில்
ஏமாற்றங்களையே தரும்.
கடமையை செய்து பலனை
எதிர்பாராமல் இருப்பதே
அநேக அற்புதங்களுக்கு
வழிவகுத்திடும்.

மேலும் பதிவுகளை படியுங்கள்..

இந்த “பகவத்கீதை பொன்மொழிகள்” பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Previous Post
Next Post

0 Comments: