1. இருவர் இதழின் முத்தங்களும் -நம் இதயத் துடிப்பின் சத்தங்களும் ஒன்றாக இணையும் வேளை!
2. இரவு முத்தம் கொடுத்து உறங்கச் சொன்ன பிறகும், கண்விழித்து காத்துக்கிடக்குறேனடி உன் காலை முத்தத்துக்கா!
3.தனியறையில் தணலாய் தகிக்கும் என்காதல் தீயை, முத்தமழையில் குளிர்காயச் செய்கிறான், ஊடலில் நம் காதல்!
4. இதழ் சாயம் பூசிகொண்டதோ அவள்! எச்சில் விழுங்குவதோ நான்!
5.இலக்கண பிழையற்ற கவிதையே, உன்னை வாசிக்க விழிகள் எதற்கு? என் இதழ்கள் போதாதா!
6. அவனது முத்தம் ஒன்றே போதும், ஆயுள் முழுக்க அவனது நினைவில் நான் வாழ!
7. உன் இதழ் வரிகளில் கவிதைகள் எழுத நினைக்கிறேன்! முத்தங்கள் என்னும் எச்சில் மையால்!
8. இரவில் அவன் இட்ட முத்த கோலங்களைக் கண்டு கண்ணாடியும் கைத்தட்டி சிரிக்க, நான் ரசிக்க, நாணம் என்னை அணைத்ததே!
9.காதல் என்ற காந்தக் கடலில் நித்தம் என்னை நீந்த செய்தாள் முத்தம் என்னும் தீவை நோக்கி !
10. இதழோடு இதழ் சேர்த்து இணைப்பு தருவாயா? என்னுள் காதல் மின்சாரம் பாய!
11.நீ என் நெற்றியில் இட்ட ஒற்றை முத்தத்தில், உன்னுடைய ஆயுள் கைதி ஆனேனே!
12. உந்தன் நெற்றி மீது ஒற்றை முத்தமிட்டு எனக்கானவன் நீதான் என முத்திரை பதித்திட ஆசையடா!
13. கவிதை கேட்கும் காகிதம் போல், அவள் கன்னங்கள் கேட்கும் என் முத்தம்
14. உடலெங்கும் ஓர் இடம் விடாமல் முத்தமிட்டும் உயிர்த்து எழாத ஒரு பாதுகாப்பு உணர்வு, ஒரே ஒரு முறை நெற்றியில் தந்தபோது எரிமலையாய் வெடித்து சிதறியது காதல் கொண்ட இதயத்தின் உள்ளே!
15.என் கோபங்களும் தாபங்களும் கதிரவனைக் கண்ட பனியாய் உருகிதான் போகிறது, அவன் இதமாய் கட்டி அணைத்து எந்தன் காதோரம் இதழ் முத்தம் பதிக்கையில்!
16. வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே! நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே! முள்ளோடு தான் முத்தங்களா? சொல் சொல்!
17. காமம் கலந்த முத்தம், காதலுக்குப் பிடித்தம்! காதல் கலந்த முத்தம், காமத்திற்குப் பிடித்தம்! இவை இரண்டும் கலந்த முத்தம் அவளுக்குப் பிடித்தம்!
18. எங்கள் காதல் பட்ஜெட்டை தினமும் தாக்கல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்... முத்தத்தால் அவள் இதழ் வரிகளை குறைத்து...
19.அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம்! ஏனோ, எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் முத்தம்! அளவுக்கு மிஞ்சினாலும்...
20. விழுந்தால் மீள முடியாது என்று தெரிந்தும், உன் கன்னக்குழியில் விழ காத்திருக்கிறது என் காய்ந்த இதழ்கள்!
21. உலக போருக்கு பிறகும் அணுகுண்டுகள் வெடித்தது! நம்பவில்லை என்றால் அவள் முத்தமிட்ட என் இதழ்களை கேட்டு பாருங்கள்.
22. களிப்பு மிகுதியில் காதல் கசிந்து உன் கன்னம் கடிக்க ஆசையடி! கன்னங்களை தா காதல் சுவடொன்று பதிக்க...
23. உன் இதமான மூச்சுக்காற்று, என் மூச்சோடு சேர்ந்த அந்நொடி வானம் மெழுகாய் உருகியது!
24. இளம் காலையில் துயில் களையும் வேளையில், என்னவன் எனை பின் அணைத்து தரும் காதல் முத்தம் கவிதை!
25. இருவர் இதழின் முத்தங்களும் - நம் இதயத் துடிப்பின் சத்தங்களும் ஒன்றாக இணையும் வேளை!
26.என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.. ஆனால் முன்பணமாக ஓரு முத்தமும் வாடகையாக ஓரு பார்வை நித்தமும் வீசி போ!
27. கள்ளு குடித்தால் தானே போதை ஏறும்! தேன் குடித்தால் கூடவா போதை ஏறும்? அவள் முத்தம்!
28. திக்கு முக்காடி போனேனடா! நீ தெகிட்ட தெகிட்ட செய்த காதலில் அன்பின் மிகுதியால் அளவில்லா முத்தம் காதல் வெகுமதியாய் உனக்கு நானும் எனக்கு நீயும்!
29.உலக போருக்கு பிறகும் அணுகுண்டுகள் வெடித்தது! நம்பவில்லை என்றால் அவள் முத்தமிட்ட என் இதழ்களை கேட்டு பாருங்கள்.
30. கள்ளு குடித்தால் தானே போதை ஏறும்! தேன் குடித்தால் கூடவா போதை ஏறும்? அவள் முத்தம்!
31. இளம் காலையில் துயில் களையும் வேளையில், என்னவன் எனை பின் அணைத்து தரும் காதல் முத்தம் கவிதை!
32.தேனியே நீ பூக்களுடன் யுத்தம் புரிகிறாயா இல்லை, முத்தம் கொடுக்கிறாயா?
33. இருவர் இதழின் முத்தங்களும் - நம் இதயத் துடிப்பின் சத்தங்களும் ஒன்றாக இணையும் வேளை!
34. திறவா உன் இதழ்கள் திறக்கும் போது, களவு போகும் என் மனம், உன் இதழ் பட்டு!
35. என்ன மந்திரம் செய்தாயோ தெரியவில்லை, நின் இமை சிறகில் பறக்க விரும்பிய நான், உந்தன் இதழ் சிறையில் அகப்பட்டுவிட்டேன், ஆயுட்கால கைதியாக!
36. என் தேகத்தின் தரை காய்ந்து கிடக்க, உன் இதழ்களின் வண்ணத்தை தூவி விடுவாயா?
37. அவளின் மெல்லிய இதழில், என் இதழ் கோர்த்து அன்பை பரிமாறிக் கொண்டேன் என் இனியவளுடன். இதை விட இனிய காலை எனக்கு அமைந்திடக் கூடுமோ?
38.வார்த்தைகளால் சேதம் அடைந்த உதடுகளுக்கு, நிவாரணம் வழங்குவதை முத்தம் என்று பெயர் வைத்தான் இந்த மானிடன்!
39. என் காயத்திற்கான ஒரே மருந்து, நெற்றியில் முத்தம்!
40. உன் கோபத்தீயினால் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். சாம்பலாகும் முன்னே உன் இதழ் எச்சியினால் என்னை நனைத்து விடு...
41. இரு இதயங்கள் ஒன்று சேரும் முதல் இடம் முத்தம்!
42. பரிசென சொல்லி கொடுக்க ஆயிரம் இருப்பினும், சிக்கனமின்றி நீ அள்ளி கொடுக்கும் முத்தத்தில், ஒரு வித அலாதி இன்பம்!
43. உன் தோழிகளான அச்சம், மடம், நாணம் மூன்றுக்குமான முற்றுப்புள்ளி, என் ஒற்றை நெற்றி முத்தம்!
44. அதிக வட்டியோடு, கடனாக தருவாயா ஒரு முத்தம்?
45. உன் உதடுகளில் ஒரு கவி எழுத ஆசை கொள்கிறேன்! முத்தம் எனும் எழுது கோல் கொண்டு!
46. புண்பட்ட காயத்தில் பூவைத் தடவியது போல், இருக்கிறதே, என்னவளின் முத்தம்!
47. தாகம் தணிய தந்தாள் அவளும், தனது இதழினை! தணலினையும் மூட்டினாள் அவளே. அத்தணலினில் தணிந்தது மோகம், தீரவில்லை தாகம்
48. சுட்டெரிக்கும் சூரியனின் கனலாய் வீற்றிருந்த அவனது கோபத்தினை மழையென முத்தத்தை பொழிந்து அணைத்தாள் அவள்!
49. உன் மீசை முட்களில், பூக்களாய் மலர செய்திடுவேன், என் முத்தங்களை!
50. காதல் கப்பல் விட ஆசை, உன் கண்ண பள்ளங்களில், என் முத்தம் ஊற்றி!
51. அனுதினமும் அலங்கரிக்கும் திலகமும் இன்று விடுப்பு எடுத்து கொண்டதும், முத்துக்களாய் முத்தங்களை நான் பதித்திடத்தானோ?
52. இது தான் சுவை என அறிந்து கொண்டேன், அவளிடம் பெற்ற முதல் முத்தத்தின் மூலம்!
53.அவனின் என் மீதான ஆசைகள் அனைத்தும், ஒற்றை நெற்றி முத்தம் கதைக்கும், காலங்கள் கடந்தும்!
54. பெண்ணவள் இதழை தூரிகையாக்கி, அவன் காதல் சித்திரம் வரைய, சிவப்பாய் அவள் கன்னம் சிவந்ததே!
55.இதழ்கள் ஒட்டினால் இரத்தத்தில் யுத்தம்! இதயங்கள் ஒட்டினால் தான், மொத்தத்தில் முத்தம்!
56. எதிர் பாரா நேரத்தில் ஏற்படும் இதழின் சுவையும் இனிமையே!
57. அவள் தரும் முத்தத்தை விட சிறந்த போதை, எதுவும் இல்லை!
58. உன் காபி கோப்பைக்கும், எனக்கும் ஒரு போட்டி! உன் இதழ்களை யார் அதிகம் நெருங்குவது என்று!
59.இரு துருவங்களாய் இருப்பதால் தான், நம் இதழ்களின் சங்கமம் இமை பொழுதில் நிகழ்கிறதோ!
60. சுணக்கம் வந்தாலும், சோம்பலின்றி ஓட நீ கொடுக்கும் ஊட்ட மருந்தே, இக்காலை முத்தம்!
61. விலகவும் மனம் இல்லமால், நெருங்கவும் மனம் இல்லாமால், இடையில் நீளும் விரலால் இதழ் நீள்கிறது இணையாக!
62.புத்தம் புது ரோஜா, புன்னகைக்கும் பனி துளிகள், முதல் முத்தத்தில் நனைந்த உன் ஈர இதழ்கள் என் ஞாபகத்தில்!
63. திண்ணமான காலை தேநீரையும் மறக்க வைத்தது, உன் இதழின் உபசரிப்பு!
64. அவள் போன பின்பும் நின்று பேசுகின்றன! அவள் தந்த முத்தங்கள்!
65. முத்துப் போன்ற உன் இதழ்களை, முத்த மழையில் நனைத்திட ஆசையுடன் காத்து நிற்கும் கள்வன் நானடி!
66. சுவைக்க சுவைக்க சுவையோ குறையவில்லை, என்னவளின் முத்தத்தில்
67. உன் உதடுகளில் ஒரு கவி எழுத ஆசை கொள்கிறேன்! முத்தம் எனும் எழுது கோல் கொண்டு!
68. நானும் கவிஞன் ஆனேன்! அவள் இதழ் என்னும் இரு வரி இலக்கண நூல் படித்து!
69.அவள் என் நெற்றிப் பொட்டில் தந்த, முதல் முத்தம் உயிர் வரை சென்று சிலிர்க்க வைத்தது!
70. இலக்கணமின்றி முத்தமிட்டு இசைக்கும் இலக்கியத்துக்கு, ஊடலெண்ணும் பெயரோ?
71.புயல் மழைக்குப் பின் பரவிய குளிர்நிம்மதி ஊடல் முடிந்து, அவனின் இதழ் முத்தம்!
72. அவன் இட்ட ஒற்றை முத்ததில், என் ஒட்டு மொத்த கோபமும் மழைத்துளியாய் சிதறியதே!
73. காதல் கடலில் மிதக்கும் உன் உதட்டுக்கப்பலில் பயணிக்கும் முத்தப்பயணி நான்!
74. என் உதட்டின் மீது உன்னுதடு எழுதிய முதல் கவிதை! எத்தனை முறை நினைதாலும், சலிப்பதே இல்லை!
75. குழந்தை சிரிப்பைக் காட்டி, முத்தம் வாங்கும் மோசடிக்காரி நீ!
76. என் இதழினால் உன் இதழில் கவிதை எழுதவா?
77. அழுத்தமாகப் பதியப்படும் ஒற்றை முத்தம், பேரன்பின் ஆழத்தை ஒரே நொடியில் உணர்த்திவிட்டுச் செல்லும்!
78.எவ்வளவு சண்டை இட்டாலும், இறுதியில் இரவு முத்தத்தை கொடுத்து முடித்து வைக்கிறாள், என்னவள்!
79. நீ அருகில் வந்து கிசுகிசுக்கும் போதெல்லாம் காதோரம் துடிக்கிறது, முத்தம் வேண்டி!
80. அவளுக்கு முத்தத்தில் விருப்பம் இல்லையாம். அதனை முத்தம் முடித்து செல்வதே, அவளது வேலையாம்!
81. பருவ மழைக்கு ஏங்கும் நிலம் போல, வறண்டு போன என் இதழை வளமாக்கியது அவளின் ஒற்றை முத்தம்!
82. சண்டைக்குப் பின் தரப்படும் சமாதான முத்தம் = Ctrl + Alt + Delete
0 Comments: