சனி, 10 செப்டம்பர், 2022

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – Whatsapp status Tamil

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – Whatsapp status Tamil kavithai

யாருக்கும் அடங்கி போகவும்
நினைக்கவில்லை.. யாரையும்
அடக்கி வைக்கவும்
நினைக்கவில்லை.. ஏனென்றால்
நான் வாழ்வது அடுத்தவர்கள்
வாழ்க்கையை அல்ல..
என் வாழ்க்கையை..!

நாம் ஏழையோ, பணக்காரரோ
நம் உள்ளத்தில் போதிய
திருப்தி இருந்தால் அதுவே
மிகப்பெரிய செல்வமாகும்.

உன் எதிர்காலத்தின் சாவி
தினமும் நீ செய்யும்
செயல்களில் இருந்து தான்
பிறக்கின்றது.

நாளைக்கு எல்லாம் நல்லபடியாக
மாறிவிடும் என்று நினைப்பது
நம்பிக்கை.. மாறவில்லை
என்றாலும் சமாளிக்க முடியும்
என்பது தன்னம்பிக்கை.

கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால்
நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..
கூட்டமே எதிரியாக இருந்தால்
நீ வளர்ந்து விட்டாய்
என்று அர்த்தம்.

சிந்தனைக்கு தனிமையை
தேர்ந்தெடு.. மகிழ்ச்சிக்கு
நல்ல மனங்களை தேர்ந்தெடு.


சிலருக்கு காரியம் ஆகும் வரை
கடவுளாக தெரிந்த நாம்..
காரியம் முடிந்த பிறகு
நாய் ஆக மாறி விடுகிறோம்..!

நேற்று மற்றும் நாளையை
மறந்து விட்டு.. இன்றைய
பொழுதை அனுபவிப்பதே
உண்மையான மகிழ்ச்சி.

தூக்கி எறிந்த பிறகு தான்
சிலருக்கு தெரிகின்றது..
கையில் இருந்தது
கல் இல்லை.. வைரம் என்று!

சில காயங்கள் மருந்தால்
சரியாகும்.. சில காயங்கள்
மறந்தால் சரியாகும்.

தனித்து நின்றாலும் துணிந்து
நில்.. பலருக்கும் தாழ்ந்து
போகும் போதுதான் இந்த
உலகம் உன்னை காலில்
போட்டு மிதிக்க தொடங்கி
விடுகின்றது..!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கவிதை

நத்தையை பார்த்து
கற்றுக் கொண்டேன்..
பிறக்கும் போதே சுமைகளும்
நம் கூட பிறந்தது என்று.

தினமும் யாரோ ஒருவரின்
மரணம் நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கின்றது..
இங்கு யாரும், எதுவும்,
யாருக்கும் நிரந்தரமில்லை
என்று..!

நேரம் இல்லை என்று
சொன்னவர்கள் எல்லோரும்
இன்று நேரத்தை கடத்த வழி
தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சந்தோஷமாக இருக்கும் போது
பாடலின் இசை பிடிக்கிறது..
துக்கமாக இருக்கும் போது
பாடலின் வரிகள் புரிகிறது..!

என் வாழ்க்கையில் நான்
சந்தோசமாக வாழ்கிறேன்
என்பதை விட.. சமாளித்து
கொண்டு வாழ்கிறேன்
என்பது தான் உண்மை.

நமக்கான ஆறுதல் நம்மிடம்
தான் உள்ளது.. மறந்து
போவதும் கடந்து போவதும்.

நம் முன்னால் சொல்லப்படும்
பொய்யும்.. நமக்கு பின்னால்
பேசப்படும் உண்மையும்
ஒன்றை மட்டுமே குறிக்கும்
துரோகம்..!


தடுமாறும் போதும், தவறி விழும்
போதும், கூச்சலிடாமல் இரு..
ஏனெனில் அதை கொண்டாட
ஒரு கூட்டமே காத்திருக்கு.

மலருக்கு மதிப்பு மணம்
இருக்கும் வரை.. மனிதனுக்கு
மதிப்பு பணம் இருக்கும் வரை..!

பறவைகளின் நிம்மதியை
கெடுக்க ஒரு கல் போதும்..
மனிதர்களின் நிம்மதியை
கெடுக்க ஒரு சொல் போதும்..!

நடிப்பவர்கள் கோபப்படுவதில்லை..
கோபப்படுபவர்களுக்கு
நடிக்கத் தெரிவதில்லை.

அவமானபட்ட பின் கற்றுக்கொண்ட
எதுவும் அவ்வளவு எளிதில்
மறந்து போவதில்லை..!

வாழ்க்கை நேர்மையாக
உள்ளவர்களை அழ வைக்கிறது..
நேரத்திற்கு ஏற்ப மாற்றி
பேசுபவர்களை வாழ வைக்கின்றது.

வார்த்தைகளுக்கும் சுவை
உண்டு.. உண்மை கசக்கும்.
பொய் இனிக்கும்.

வாழ்க்கையில் எல்லாம்
கற்றுக் கொண்ட நான்
போலியான அன்பு காட்ட
கற்றுக்கொள்ள
மறந்து விட்டேன்.

Previous Post
Next Post

0 Comments: