வியாழன், 6 அக்டோபர், 2022

கருப்பட்டி பணியாரம்

*கருப்பட்டி பணியாரம் !!*

கிராம பகுதிகளில் பணியாரம் மிகவும் பிரபலமானது. இப்போது இனிப்பான கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி மாவு - ஒரு கப்

கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப்

நெய் - 2 டீஸ்பு+ன்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:-

👉 முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு பதத்தில் காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். 

👉 பிறகு இதனுடன் நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.

👉 அதன் பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து கல் சு+டானதும், அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, பின் கரைத்து வைத்துள்ள மாவை குழியினுள் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுத்தால், இனிப்பான கருப்பட்டி பணியாரம் தயார்!!!
Previous Post
Next Post

0 Comments: