*தேவையான* *பொருட்கள் :*
பொருள் - அளவு
தினை அரிசிகால் கிலோ
சர்க்கரை100 கிராம்
நெய்தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள்1 டீஸ்பு ன்
முந்திரி10
திராட்சை10
பால்1 கப்
தேங்காய் துருவல்கால் கப்
*செய்முறை :*
வாணலியில் எண்ணெய் விட்டு முந்திhp, திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதில் கழுவிய தினை அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளறவும். பிறகு தேங்காய் துருவல், பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 3 நிமிடம் கழித்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான பாயாசம் தயார்.
0 Comments: