*தேவையான பொருள்கள்*
பச்சரிசி - ஒரு கப்,
பாசிப்பருப்பு - முக்கால் கப், வெல்லக்கட்டி - இரண்டு,
பேரீட்சை - ஆறு,
தேங்காய் - நான்கு கீற்றுகள், ஏலக்காய் - மூன்று,
நெய் - நான்கு தேக்கரண்டி,
உப்பு - சிறிது
*செய்முறை*
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைக்கவும்.தேங்காயையும் பேரீட்சையையும் பொடியாக நறுக்கி வைக்கவும். தூசில்லாமல் வெல்லத்தை சூடு செய்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.பருப்பையும் அரிசியையும் சேர்த்து உப்பு போட்டு குக்கரில் குழைய வேக வைத்து எடுக்கவும்.பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.அதன் பின் அதில் பேரீட்சையை போட்டு சிறுதீயில் அடிப்பிடித்து விடாமல் ஏலக்காய் பொடித்து போட்டு கிளறவும்.அடுத்து ஒரு சட்டியில் நெய் விட்டு அதில் நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.வறுத்ததை அடுப்பில் இருக்கும் பொங்கலில் கொட்டி கிளறவும்.சுவையான பேரீட்சை பொங்கல் ரெடி.
🪷🪷🪷
0 Comments: