வெள்ளி, 7 அக்டோபர், 2022

வியட்நாமில் புகழ்பெற்ற மாரியம்மன்

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*வியட்நாமில் புகழ்பெற்ற மாரியம்மன்..!!*

*வியட்நாமில் புலம் பெயர் தமிழர்களுக்காகக் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில்*
*தமிழ் புலம்பெயர்ந்தோருக்காக வியட்நாம் நாட்டின் சைகோன் நகரில் கடந்த 19ம் நூற்றாண்டில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது.*

*கம்யூனிச நாடான வியட்நாம், சந்தை சீர்திருத்தங்களை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டதால், பெருநகரங்கள் அசுர வளர்ச்சியடைந்தன*

*இருப்பினும், ஒரு சில பகுதிகளில் கலாச்சாரத்தை பறைசாற்றும் நினைவுச்சின்னங்கள் இன்று வரை இருந்துவருகின்றன.*
*சைகோன் நகரில் தமிழகர்கள் சிறிய அளவில் இருந்த காலத்திலிருந்தே இந்து வழிபாட்டு முறை நடைமுறையில் இருந்தது.*

*அதன்பிறகு, 19ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்த மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. தமிழ் புலம்பெயர்ந்தோருக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரமானது 12 மீட்டர் உயரம் கொண்டது.*

*பல வண்ண சிற்பங்கள் நிறைந்த அழகான கோபுரமாக காட்சியளிக்கிறது. நாள்தோறு காலை 10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் பூஜையை உடல்நலம் மற்றும் செல்வசெழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பூஜையாக நம்புவதால், சீன, கெமர் மற்றும் வியட்நாமிய மக்களும் தவறாமல் அந்த நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.*

*20ம் ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழர்களின் வருகை குறைந்தபோதும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான கட்டப்பட்ட கோயில் என்ற கம்பீரத்தோடு சைகோனில் இன்றும் உயர்ந்து நிற்கிறது இந்த மாரியம்மன்கோயில்*

*🌹வாழ்க வளமுடன்🌹*
Previous Post
Next Post

0 Comments: