புதன், 19 அக்டோபர், 2022

கோதுமை அல்வா

கோதுமை அல்வா

 *தேவையான பொருட்கள்* :

பொருள்அளவு
கோதுமை மாவு கால் கிலோ
சர்க்கரை 300 கிராம்
கேசரிப் பவுடர் கால் டீஸ்பூன்
நெய் தேவைக்கேற்ப
ஏலக்காய் 3 (பொடியாக்கியது)
 *செய்முறை :* 

  வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டி இல்லாதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

  பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

  அதன் பிறகு மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

  சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி, கேசரிப் பவுடர் தூவி கிளறி, இறக்கி விட வேண்டும். கோதுமை அல்வா ரெடி!!!
Previous Post
Next Post

0 Comments: