புதன், 19 அக்டோபர், 2022

மைதா இனிப்பு சமோசா

மைதா இனிப்பு சமோசா

 *தேவையான பொருட்கள்* :

பொருள்அளவு
மைதா மாவு கால் கிலோ
தேங்காய் துருவல் கால் கப்
வெல்லம் கால் கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
ஏலக்காய் 2 (பொடியாக்கியது)
 *செய்முறை :* 

  மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 

  வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ளவும்.

  பின்பு தண்ணீர் வற்றியதும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி போட்டு கலக்கிய தேங்காய் பூரணத்தை இறக்கி வைக்கவும்.

  அதன் பிறகு தேங்காய் பூரணம் ஆறியதும் அதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். 

  பிசைந்து வைத்துள்ள மைதா மாவை பூரிக் கட்டையில் தேய்த்து முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதனுடன் செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தை நடுவில் வைத்து நன்றாக மூடி சமோசா வடிவம் போல் செய்யவும்.

  பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மைதா இனிப்பு சமோசா ரெடி...
Previous Post
Next Post

0 Comments: