வியாழன், 6 அக்டோபர், 2022

வாழைக்காய் - குடமிளகாய் பொரியல்

*வாழைக்காய் - குடமிளகாய் பொரியல்*

தேவையானவை: 
வாழைக்காய்,குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், 
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வேர்க்கடலை - 3 டீஸ்பூன்.

செய்முறை: 
வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி, வாழைக்காய், குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். இறுதியாக கறிவேப்பிலை, அரைத்த பொடி தூவிக் கிளறி இறக்கவும்.
Previous Post
Next Post

0 Comments: