தேவையான பொருட்கள்
கோவைக்காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
சோள மாவு – இரண்டு டீஸ்பூன்
பார்லி பவுடர் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
வெங்காயம் – ஒன்று (நிளமாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
ஒரு கிண்ணத்தில் நறுக்கிய கோவைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, பார்லி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோவைக்காய் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பின், அதில் உப்பு சேர்த்து குலுக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து கலக்கி பரிமாறவும்.
0 Comments: