செவ்வாய், 25 அக்டோபர், 2022

சூரிய கிரகணத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காளகஸ்தி சிவன் கோயில்கள் திறப்பு.

சூரிய கிரகணத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காளகஸ்தி சிவன் கோயில்கள் திறப்பு.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது. எனவே சூரிய கிரகணத்தின் போது அண்ணாமலையார் கோவில் நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். 

பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். 

அதன்படி வருகிற 25ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது கோவில் வளாகத்தில் 4ஆம் பிரகாரத்தில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

காளகஸ்தி சிவன் கோவில்: காளஹஸ்தி கோவில் இதே போல ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நாட்டிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும். மேலும் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு, கேது க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை அனைத்து 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 ராசிகளையும் உள்ளடக்கியது. இதனாலேயே இந்த சிவனுக்கு சூரிய மண்டலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. 

ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு கேது பரிகார தலமாக உள்ளது. எனவே கிரகணத்தால் கோவிலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய, சந்திர கிரகணத்தன்று சிவபெருமானையும், ஞான பிரசுனாம்பா அம்பாளையும் வழிபட்டால், ஒரு நபர் அவர்களின் ஜாதக தோஷங்களிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Previous Post
Next Post

0 Comments: