*சிவ விஷ்ணு கோயில், லிவர்மூர், கலிபோர்னியா..!!*
*அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 1977ல் இந்து சமுதாய கலாசார மையம் துவக்கப்பட்ட நாளில் இருந்தே ஒரு இந்து கோயிலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தது. அந்த எண்ணம் 9 ஆண்டு கழித்து 1986ல் நிறைவேறியது.*
*கலிபோர்னியா மகாணத்தில் லிவர்மூர் பகுதியில் சிவ- விஷ்ணு கோயில் கும்பாபிஷேகம் 1986ல் நடைபெற்றது.*
*1998ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.*
*இந்த கோயில் வடக்கு மற்றும் தென் இந்திய பாரம்பரியங்களை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. 1997ல், பிரதான கோயிலை ஒட்டி ஒரு அரங்கமும் சமையல் அறையும் கட்டப்பட்டன. இதன் மூலம் இது ஒரு திருமண மண்டபமாகவும் செயல்படத் துவங்கியது.*
*1994- 1999ல் பக்தர்கள் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது. புத்தாண்டு தினத்தன்றும் கணேச சதுர்த்தி அன்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.*
*கோயில் பூஜை நேரங்கள்:*
*கணேசர்: கணபதி அர்ச்சனை: செவ்வாய் கிழமை: மாலை 06-15 மணி முதல் 07-15 மணி வரை; அபிஷேகம்: ஞாயிறு: காலை 10 மணி; அபிஷேகம் மற்றும் அர்ச்சனை: சங்கடஹர சதுர்த்தி: பவுர்ணமி கழித்து 4வது நாள்: மாலை 06- 30 மணிசிவா சுப்ரபாதம்: ஞாயிறு: காலை 09-00 மணி; அபிஷேகம்: நாள்தோறும்: காலை 09- 30 மணி; சகஸ்ரநாம அர்ச்சனை: பிரதோஷம்: மாலை 06- 30 மணி; சிவபெருமானுக்கு 108 கலசாபிஷேகம் மற்றும் வில்வ அர்ச்சனை: மகா சிவராத்திரி:*
*மாலை 06- 30 மணி; சிவ கல்யாணம் 2வது சனி: பிற்பகல் 3 மணிவெங்கடேஸ்வரா (பாலாஜி) சுப்ரபாதம்: சனி மற்றும் ஞாயிறு காலை 09-00 மணி; அபிஷேகம்: சனி: காலை 10-00 மணி; வஜ்ர கிரீட சேவை, வஸ்தரா சமர்ப்பணம்: முதல் சனி: காலை 11- 30 மணி; சகஸ்ர கலச அபிஷேகம், முத்தங்கி சேவை: 2வது சனி: காலை 10-00 மணி; திருப்பாவாடை சேவை: 3வது சனி: காலை 11-30 மணி; புஷ்ப சேவை: 4வது சனி: காலை 11-30 மணி; சகஸ்ர நாம அர்ச்சனை: திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 10-00 மணி; சகஸ்ர நாம அர்ச்சனை: ஷ்ராவண நட்சத்திரத்தன்று மாலை 06-30 மணி; பாலாஜி போக மூர்த்தி அபிஷேகம், அர்ச்சனை: ஏகாதசி அன்று மாலை 06-30 மணி; நிஜ நேத்ர, பட தரிசனம்: வெள்ளிகிழமைதோறும்; நரசிம்ம அபிஷேகம்: அர்ச்சனை: சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 06-300 மணி; பாலாஜி கல்யாணம்: சனிக்கிழமை பிற்பகல் 03-00 மணிகார்த்திகேயர் அபிஷேகம்: ஞாயிறு: 11-30 மணி; சகஸ்ரநாம அர்ச்சனை: சுக்ல சஷ்டி அன்று மாலை 06-30 மணி; அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை: கிருத்திகை அன்று மாலை 06-30 மணி; சுப்ரமண்ய கல்யாணம்: 3வது சனி: பிற்பகல் 03-00 மணிபார்வதி, லட்சுமி, பூதேவி, தசபுஜா துர்கை அபிஷேகம்: வெள்ளி: காலை 10-30 மணி; லலிதா சகஸ்ரநாம பாராயணம்: பூர்ணிமா: மாலை 06-30 மணி; லட்சுமி சகஸ்ரநாம அர்ச்சனை: வெள்ளி மாலை 06-30 மணி; கனக துர்கா அபிஷேகம்: ஞாயிறு: மாலை 04-30 மணிராமர் சகஸ்ரநாம அர்ச்சனை: புனர்பூச நட்சத்திரத்தன்று காலை 10:30 மணிராமர் அபிஷேகம், அர்ச்சனை: புனர்பூச நட்சத்திரத்தன்று மாலை 6 மணிநரசிம்மர் அபிஷேகம், அர்ச்சனை: சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 06-30 மணிகிருஷ்ணர் அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை: ரோகிணி நட்சத்திரத்தன்று மாலை 6 மணிஆண்டாள் (பூதேவி) அபிஷேகம்: வெள்ளிக் கிழமை்தோறும் காலை 09:30 மணி ஆண்டாள்*
*ஆஞ்சநேயர் அபிஷேகம், அர்ச்சனை: ஞாயிறு பிற்பகல் 03-00 மணிதுவாரக கணபதி, நகராஜர், கருடர் அபிஷேகம்: வியாழன் காலை 10:30 மணிகாலபைரவர் அபிஷேகம், அர்ச்சனை: 4வது ஞாயிறு: மாலை 04-30 மணிஐயப்பன் அபிஷேகம், அர்ச்சனை: உத்திர நட்சத்திரத்தன்று மாலை 6 மணிநவகிரக அபிஷேகம், அர்ச்சனை:*
*சனிக்கிழமை பகல் 11 மணிகால பைவரவர் அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை: 4வது சனிக்கிழமை மாலை 04:30 மணிநந்தி அபிஷேகம்: வியாழக்கிழமை பகல் 12:30 மணி*
*வருடாந்திர விழாக்கள்*
*ஆண்டாள் கல்யாணம், வசந்த பஞ்சமி, சிவ- விஷ்ணு பிரமோற்சவங்கள், மகா சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், உகாதி, ராம நவமி, தமிழ்ப் புத்தாண்டு, மீனாட்சி கல்யாணம், வைகாசி விசாகம், ஹனுமந்த் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, ஜ்யேஷ்டாபிஷேகம், கோயில் ஆண்டுவிழா, ஆடி பூரம், வரலட்சுமி விரதம், ஆடி கிருத்திகை, பவித்ரோற்சவம், ராமானுஜ ஜெயந்தி, ஆதி சங்கரர் ஜெயந்தி, உபகர்மா, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஸ்வர்ண கவுரி விரதம், கணேசர் சதுர்த்தி, நவராத்திரி, துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை, சிவ அன்னாபிஷேகம், லட்சுமி குபேர பூஜை, காளி பூஜை, ஸ்கந்த சஷ்டி, விஷ்ணு புஷ்ப யாகம், கார்த்திகை மாத சிவ அபிஷேகங்கள், ஐயப்ப மண்டல பூஜை, குரு பூர்ணிமா, கால பைரவர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆரூத்ரோற்சவம், தீபாவளி, ஐயப்ப மகர தீபம் போன்ற வருடாந்திர விழாக்களும் நடைபெறுகின்றன*
*🌹வாழ்க வளமுடன்🌹*
*🙏திருச்சிற்றம்பலம்🙏*
0 Comments: