வெள்ளி, 7 அக்டோபர், 2022

முருகன் கோயில், லண்டன்

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*முருகன் கோயில், லண்டன்..!!*

*லண்டன் மாநகரில் கிழக்கு ஹாம் பகுதியின் சர்ச் சாலையில் தமிழக மரபுப்படியே ஒரு முருகன் கோயில் அமைந்திருக்கிறது*

*தமிழக சிற்பி முத்தையா ஸ்தபதியின் கைவண்ணத்தில், பிரிட்டிஷ் கட்டட கலைஞர் டெர்ரி பிரீமேன் ஆலோசனையின்படி உருவானது.*

*ஐந்து நிலை ராஜகோபுரம், அவற்றின் உச்சியில் ஏழு கலசங்கள், தோரணங்கள் தொங்கும் வாசல், கொடிமரம் ஆகியவை கொண்ட இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 2006ல் நடந்தது.*

*ஐயப்பன், குருவாயூரப்பன், லட்சுமியுடன் வெங்கடேஸ்வரர், ஆஞ்சநேய சுவாமி ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அன்பர்களே கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள்.*

*ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் 10 நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சப்பரம் எனப்படும் சிறிய தேரில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் லண்டன் மாநகரின் வீதிகளில் உலா வருவார்*

*🌹வாழ்க வளமுடன்🌹*

*🙏ஓம் சரவணபவ🙏*
Previous Post
Next Post

0 Comments: