*சிவகிருஷ்ண கோயில் சிங்கப்பூர்..!!*
*காக்கும் கடவுளாக விளக்கும் ஸ்ரீ மஹா விஷ்ணுவும், திருவடியில் சேர்த்துக் கொள்ளும் கடவுளாக விளங்கும் பரமேசுவரனும் ஒரே திருமேனியில் சங்கரநாராயண அவதாரமாக ஸ்ரீ சிவகிருஷ்ணர் எனும் திருப்பெயரோடு ஸ்ரீசிவகிருஷ்ண கோயிலில் .சிங்கப்பூர் வாழ் அடியார் அனைவருக்கும் அருள் பாலித்து வருகின்றனர்.*
*1962-ஆம் ஆண்டு திரு.குஞ்சுகிருஷ்ணன் என்பவர், செம்பவாங் சாலையில் உள்ள ஒரு இடத்தை சுத்தப்படுத்தி, அங்கு ஒரு சிறு குடில் அமைத்து பல தெய்வ உருவங்களை நிறுவி வழிபட்டு வந்தார்.*
*அவரது மறைவுக்கு பின்னர் அந்தக் கோயிலுக்கு வந்து அன்றாடம் வழிபடும் திரு. வேலாயுதம் என்பவர், இதனை ஸ்ரீசிவகிருஷ்ண கோயிலாக மாற்றினார்.* *சிங்கப்பூரில் நகரங்கள் அசுர வேக வளர்ச்சியைக் கண்ட அந்த சமயத்தில், இந்த ஆலயமும் அங்கிருந்து குடிபெயர்ந்து,* *தற்போது உள்ள மார்சிலிங் ரைஸ் என்ற இடத்திற்கு 1982-ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து,*
*25,000 சதுர அடியில் கோயிலாக* *அமைந்தது. 1982 முதல் 1987-ஆம் ஆண்டு வரை பலபேர் இந்தக் கோயிலை நிர்வாகம் செய்து வந்தனர்.*
*1987-ஆம் ஆண்டில் புதிய நிலையான ஒரு அமைப்பு இந்தக் கோயிலை நிர்வாகம் செய்ய தொடங்கியது. அப்போதுதான் கோயிலின் உண்மையான வளர்ச்சி ஆரம்பமானது.*
*டிசம்பர் 9, 1987ல் சங்குஸ்தாபனம் செய்யப்பட்டு கற்கோயிலாக கட்டும் பணி தீவிரமடைந்தது. செப்டம்பர் 1, 1996-ஆம் ஆண்டு ஆலய பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து முதல் கும்பாபிஷேகம் இங்கு நடத்தப்பட்டது.*
*பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துக் கொண்டு புனித நீரை தெளித்துக் கொண்டு சிவன் மற்றும் கிருஷ்ணனின் அருளைப் பெற்றுச் சென்றனர். 2008 ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.*
*ஆலயத்தின் மூலவர்களான சிவகிருஷ்ணரை தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி, விநாயகர், முருகன், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, ஆஞ்சநேயர், ஐயப்பன், மாரியம்மன், பெரியாச்சி, இடும்பர், நாகம்மா, தக்ஷ்ணாமூர்த்தி, விஷ்வநாதர், விசாலாட்சி, நந்தி, கருப்பர், முனீஸ்வரர், மதுரை வீரன், பைரவர், சண்டிகேஷ்வரர் மற்றும் நவகிரக சன்னிதானமும் இக்கோயிலில் அமைந்துள்ளது.*
*இந்த ஆலயத்தில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி விழாவும், கிருஷ்ண ஜெயந்தி விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவம் மற்றும் வைணவ மதத்தினர் இங்கு ஒற்றுமையாக அன்போடு வழிபாடு நடத்தி வருகின்றனர்*
*🌹வாழ்க வளமுடன்🌹*
*🙏திருச்சிற்றம்பலம்🙏*
0 Comments: