புதன், 19 அக்டோபர், 2022

மைதா கேக்

மைதா கேக்

 *தேவையான* *பொருட்கள் :* 

பொருள்அளவு
மைதா 1 கிலோ
ரவை கால் கப்
அரைத்த சர்க்கரை பவுடர் முக்கால் கிலோ
சோடா உப்பு கால் டீஸ்பூன்
டால்டா 2 டீஸ்பூன்
தண்ணீர் தேவைக்கேற்ப
ஏலக்காய்3(பொடியாக்கியது)
பாதாம் எசன்ஸ் கால் டீஸ்பூன்
பால் பவுடர் ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
 *செய்முறை :* 

  மைதாவையும், ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.

  அதனுடன் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  அதனை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  உருண்டைகளை சப்பாத்தி கல்லில் சிறு மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் தடிமனாக தேய்க்கவும்.

  தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.

  பின்பு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறமாக வந்தவுடன் எடுத்து வாய்அகன்ற பாத்திரத்தில் போடவும்.

  பொரித்த துண்டுகள் ஆறியதும் காற்றுபுகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும். சுவையான மைதா கேக் தயார்.
Previous Post
Next Post

0 Comments: