வெள்ளி, 7 அக்டோபர், 2022

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில் சிகாகோ

*🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏*

*ஸ்ரீ சவுமிநாராயண் கோயில் சிகாகோ..!!*

*அமெரிக்காவில் சிக்காகோ பகுதியில் பார்ட்லட் என்ற இடத்தில் புதிதாக ஒரு இந்து கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்துக்கள் இதை உலகின் எட்டாவது உலக அதிசயமாக சொல்கிறார்கள்.*

*அமெரிக்காவின் வடமேற்கு புறநகர் பகுதியில் சுமார் 69 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள இக் கோயில்தான் வட அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்களில் பெரியது. லண்டனில் இருக்கும் கோயிலுக்கு அடுத்ததாக இது தான் மனதில் படியக் கூடியதாக கருதப்படுகிறது.*

*இக் கோயில் மலைகளுக்கு நடுவே உள்ள அழகான இடத்தில் 38 ஏக்கர் இடத்தில் கட்டப் பட்டுள்ளது.இரும்பு இல்லாத இரு மாடி கட்டடம்*

*அலங்காரமாக செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு 2 மாடிகளாக கட்டப்பட்ட இக் கோயிலின் வெளிப்புறத்தை பல்கேரிய சுண்ணாம்பு கற்களை கொண்டு கட்டியிருக்கிறார்கள்.*

*உள்புறத்தில் இத்தாலியன் மார்பிள் போடப்பட்டுள்ளது.இது 16 மாடங்களையும் 151 தூண்களையும் கொண்டதாக இருக்கிறது.*

*5 கோபுரங்களும் 4 பால்கனியும் கொண்டதாக இருக்கிறது.12,000 டன் எடையுள்ள இக் கோயிலை 4,000 செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டியிருக்கிறார்கள்.*

*இக் கற்கள் எல்லாம் சென்னையில் செதுக்கப்பட்டு 400 கன்டெய்னர்கள் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டது. இரும்பு இல்லாமல் முற்றிலும் கற்களைக் கொண்டு இக் கோயில் கட்டப்பட்டதால் 1000 வருடங்களுக்கு இது நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது.*

*இந்தியாவைச் சேர்ந்த அனைவரும் ஒன்று கூடுமிடமாவும் இருப்பதற்காக, ஒரு இந்துக் கோயில் கட்டுவதென்று முடிவின் அடிப்படையில் கட்டப்பட்ட இக்கோயிலின் முக்கிய தெய்வமாக ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.*

*மேலும், சீதா தேவி, லட்சுமணர், ஹனுமன் மற்றும் விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.*

*கோயில் வளர்ந்த விதம்*

*கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் மற்றும் கோயில் பிரகாரத்துடன், 8000 சதுர அடி பரப்பளவிலான இக்கோயிலின் முதல் கட்டப் பணிகளும், அடுத்து, இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளாக, 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அயோத்தியா மண்டபம், ஹனுமன் ஆலயம், 95 அடி உயரத்திலான ராஜகோபுரம் மற்றும் வெங்கடேஷ்வரர், ஸ்ரீ தேவி, பூ தேவி மற்றும் ராதா-கிருஷ்ணர் ஆலயங்களும் கட்டப்பட்டன.* 

*1986-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி, இக்கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.**1988-ம் ஆண்டு இக்கோயிலின் சீரமைப்பு பணிகளின் போது, மார்பிள் கல்லால் ஆன துர்க்கை அம்மன் சிலை நிறுவப்பட்டது.*

*இது பார்ப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து கணேசர், சிவன், துர்க்கை ஆலயங்கள் எழுப்பப்பட்டன.*

*1994-ம் ஆண்டு, கணேசர், சிவன், சுப்ரமணியர் மற்றும் பார்வதி தேவி ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது*

*🌹வாழ்க வளமுடன்🌹*

*🙏நமோ நாராயணா🙏*
Previous Post
Next Post

0 Comments: