வியாழன், 6 அக்டோபர், 2022

கருப்பட்டி பொங்கல்

*(கருப்பட்டி பொங்கல்*) 

 *தேவையான பொருள்கள்* கருப்பட்டி தூள் - 1 கப், 
அரிசி - 1 கப், 
பால் - 3 கப், 
தண்ணீர் - 3 கப், 
நெய் - 1/4 கப், 
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன், முந்திரி - 4, 
உலர் திராட்சை - 1 டீ ஸ்பூன், 
பாதாம் - 4 (விருப்பப்பட்டால்), 
பிஸ்தா - 1 டீ ஸ்பூன்(விருப்பப்பட்டால்) 

 *செய்முறை* 

 முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து கம்பி பாகு காய்ச்சி கொள்ளவும்.(சாதம் லேசாக வேக ஆரமித்ததும் பாகு காய்ச்ச ஆரமித்தால் போதும்..பாகு ஆனவுடனேயே சாதத்தில் சேர்த்து கிளறனும் இல்லாவிட்டால் பாகு இருக்கிப்போய்விடும்..)பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்சிய பாகை சேர்த்து நன்கு கிளறவும்.மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து நன்கு கிளறவும்.கொதிக்க ஆரம்பிக்கும்.எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறவும்.எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.முந்திரி திராட்சையை சேர்த்து கிளறவும்.பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.குறிப்பு: பாகு சரியான பதம் வருவதற்கு எழு முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகும். (சிம்மில் மட்டுமே வைக்கவும்)கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம்.நெய் வேண்டுமானால் அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.
    🪷🪷🪷
Previous Post
Next Post

0 Comments: