வியாழன், 6 அக்டோபர், 2022

பாசிப்பருப்பு புட்டு

*பாசிப்பருப்பு புட்டு*

சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் தானிய உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது பாசிப்பருப்பு புட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

*தேவையான பொருட்கள்:-*

பாசிப்பருப்பு - 2 கப்

வெல்லம் - அரை கப்

தேங்காய் துருவல் - கால் கப்

ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

*செய்முறை:-*

👉 முதலில் பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். 

👉 அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். பிறகு இட்லிகளை எடுத்து உதிர்த்து கொள்ளவும். 

👉 பிறகு வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த இட்லியில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி.

Previous Post
Next Post

0 Comments: