வியாழன், 6 அக்டோபர், 2022

குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம்

*குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம்*

🌾குதிரைவாலியானது சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் ஆகும். குதிரைவாலி அரிசியில் குறைந்த அளவு கலோரி உள்ளது. நாம் வழக்கமாக எடுத்து கொள்ளும் அரிசி, கோதுமை உணவை காட்டிலும் இதில் அடங்கியிருக்கும் கலோரியின் அளவு மிக குறைவு. அதோடு நார்ச்சத்தும் மிகுந்திருக்கும் உணவாகவே இது இருக்கிறது.

🌾 குதிரைவாலியை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சத்துமாவு கஞ்சியிலும் சேர்க்கலாம். குதிரைவாலி அரிசியை கஞ்சியாக்கி குடிக்கலாம். வெறுமனே தயிர் சாதம் செய்யும் போது குதிரைவாலி அரிசியில் செய்யலாம். அரிசியின் ருசி அமர்க்களமாக இருக்கும். இதில் சர்க்கரை பொங்கல், லட்டு, அதிரசம் போன்ற இனிப்புகளையும், சாம்பார் சாதமும் செய்யலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காய்கறிகளை நறுக்கி சேர்த்து உப்புமா போன்று செய்து கொடுக்கலாம்.

🌾 அந்த வகையில் குதிரைவாலி-கருப்பட்டி ஆப்பம் எப்படி செய்வது? என்று இன்றைய பதிவில் பார்க்கலாம்...!!

*தேவையான பொருட்கள்:*

👉 குதிரைவாலி - 1 கிண்ணம்

👉 கார் அரிசி - 1 கிண்ணம்

👉 உளுந்து - கால் கிண்ணம் 

👉 வெந்தயம் - 1 தேக்கரண்டி

👉 கருப்பட்டி - 2 கிண்ணம்

👉 இளநீர் - அரை கிண்ணம் 

*செய்முறை:*

🍛 முதலில் குதிரைவாலியுடன் கார் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். 

🍛 இளநீரை முதல்நாளே வாங்கி வைத்து புளிக்க வைக்க வேண்டும். புளித்த இளநீரை, அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும். 

🍛 பின்னர், கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சு+டாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். 

🍛 பின்னர், ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும். 

🍛 சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி - கருப்பட்டி ஆப்பம் தயார்.

*பயன்கள்:*

💪 உடலை சீராக வைக்க உதவுகிறது. 

💪 சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது. 

💪 ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. 

💪 குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.

💪 குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைவாக இருக்கிறது.
Previous Post
Next Post

0 Comments: