புதன், 19 அக்டோபர், 2022

பாதுஷா

பாதுஷா

 *தேவையான பொருட்கள்* :

பொருள்அளவு
மைதா மாவு கால் கிலோ
சமையல் சோடா அரை டீஸ்பூன்
வனஸ்பதி 100 கிராம்
சர்க்கரை கால் கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
 *செய்முறை :* 

  ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

  அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

  மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.

  பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டையாக உருட்டி, அதனை வடைப் போல் தட்டவும்.

  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பாதுஷாவை போட்டு மிதமான தீயில் வைத்து லேசாக சிவந்து வரும் வரை வேக விடவும். பாதுஷா லேசாக சிவந்து வெந்ததும் பாகில் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பிறகு எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.

Previous Post
Next Post

0 Comments: