*தால் வெஜ் கத்லி*
*தேவையானவை:*
கடலைப் பருப்பு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் பவுடர் - கால் கப், காய்கறி கூழ் - அரை கப் (பீட்ரூட், கேரட், பீன்ஸ், சௌசௌ, மஞ்சள் பூசணி அனைத்தையும் ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் அரைக்க வும்), வெனிலா எசன்ஸ் - சில துளிகள், நெய் - 4 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை - விருப்பமான அளவு
*செய்முறை:*
கடலைப்பருப்பை கிள்ளு பதமாக வேகவைத்து நீரை வடித்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அடிகனமான வாணலியில் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை, காய்கறி கூழ் சேர்த்து ஒற்றை கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு, கடலைப்பருப்பு பவுடர் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி வரும்போது, அவ்வப் போது நெய்யை சேர்த்துக் கிளற வும். பிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
*குறிப்பு:*
கலவையை இரண்டு வெவ்வேறு நிற காய்கறி கொண்டு தனித்தனியாகக் கிளறி, ஒன்றன் மேல் ஒன்றாக பரப்பி ஆறியவுடன் வில்லைகள் போட்டும் பரிமாறலாம்
0 Comments: